இரட்டைச்சர்க்கரை
தோற்றம்

இரட்டைச்சர்க்கரைகள் (Disaccharide)[1] இரண்டு ஒற்றைச்சர்க்கரைகளின் இணைப்பால் ஆனவை ஆகும். இச்சர்க்கரைகள் பால், சர்க்கரையில் உள்ளன.
மூன்று வகை இரட்டைச்சர்க்கரைகள் உண்டு. அவை[2]
- மால்ட்டோசு
- சுக்குரோசு மற்றும்
- லாக்டோசு
மால்ட்டோசு (Maltose) இரண்டு குளுக்கோசு மூலக்கூறுகளின் இணைப்பால் ஆனது. இவை முளைத்த தானியங்களில் காணப்படும். சுக்குரோசு என்பது ஒரு குளுக்கோசு மூலக்கூறும், ஒரு புருக்டோசு மூலக்கூறும் இணைந்து உருவாவதாகும். இது கரும்புச் சாற்றில் காணப்படும். லாக்டோசு என்பது ஒரு குளுக்கோசு மூலக்கூறும், ஒரு காலக்டோசு மூலக்கூறும் இணைந்து உருவாவது ஆகும். இது அனைத்து வகைப் பாலிலும் காணப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biose on www.merriam-webster.org".
- ↑ Kwan, Lam Peng (2000). Biology- A course for O Level. p. 59. ISBN 9810190964.