சார் மாறியும் சாரா மாறியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு மாறியின் பெறுமானம் பிற மாறி அல்லது மாறிகளில் சார்ந்து இருக்கும்பொழுது அதை சார் மாறி (dependent variable) எனலாம். ஒரு சோதனையில் மாறியின் பெறுமானம் எப்படி வேறு மாறிகளில் சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வதே நோக்கமாகும்.

ஒரு மாறியின் பெறுமானம் பிற மாறிகளை சாராமல் அல்லது கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும் பொழுது அதை சாரா மாறி (independent variable) எனலாம். ஒரு சோதனையில் சாரா மாறி மாறும்பொழுது அதனுடன் தொடர்புடைய சார் மாறி எப்படி மாறும் என்று அவதனாக்கப்படும்.