அகல் விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தீபாவளியின் போது பயன்படுத்தப்படும் அகல் விளக்கு

அகல் விளக்கு என்பது எண்ணெய் விளக்கின் ஒரு வகையாகும். இது பொதுவாக களிமணால் செய்யப்பட்டு மெழுகில் தோய்க்கப்பட்ட பருத்தி திரியால் நெய் அல்லது காய்கறி எண்ணெய் கொண்டு எரியூட்டப்படும். ஆயினும் சில பிறப்பு நிகழ்வுகளில் பித்தளையால் ஆன விளக்குகள் பயன்படுத்துவதும் வழக்கில் உள்ளது.

இந்தியாவில் உருவாகிய இவ்வகை விளக்குகள் பெரும்பாலும் இந்து சமயம், சீக்கியம், சமணம் மற்றும் சரத்துஸ்திர சமயம் ஆகியவைகளில் தீபாவளி போன்ற விழா நாட்களில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.[1] இதேபோன்று ஆனால் வேறு வடிவமைப்பில் பௌத்த சமயத்தில் வெண்ணெய் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிக்கத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Diwali: Significance of a Diya". Zee Media Corporation Ltd. பார்த்த நாள் ஜூலை 19, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகல்_விளக்கு&oldid=1547819" இருந்து மீள்விக்கப்பட்டது