உள்ளடக்கத்துக்குச் செல்

மாட்டிறைச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாட்டிறைச்சி விலங்கினத்தில் மாட்டில் இருந்து பெறப்படும் இறைச்சி ஆகும். உலகளவில் மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், சவூதி அரேபியா ,சீனா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் இருப்பவர்களால் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படுகின்றது[1]. இந்து சமயத்தில் பசு கடவுளாக வணங்கப்படுவதால், உயர்சமூகப் பிரிவினர் மாட்டிறைச்சியை உண்பதில்லை. இருப்பினும், இச்சமயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினர் மாட்டிறைச்சியை உண்பதுண்டு. கலிபோர்னியா லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களின் ஆய்வின்படி மாட்டிறைச்சி உற்பத்தியால் பசுமைக் குடில் வாயு வெளியீடு அதிகரிக்கிறது.[2][3]

தடை[தொகு]

இந்தியா[தொகு]

இந்தியா மாட்டிறைச்சி (எருமை) ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. ஆனால் அதன் சில ஆட்சிப்பகுதிகளில் சமூக மற்றும் மதக் காரணங்களால் பசு வதை தடைசெய்யப்பட்டுள்ளது.[4][5][6][7][8] இந்து சமய நூல்களில் மாட்டிறைச்சி உண்பதை எதிர்க்கவில்லை இருந்தாலும் சில சமூகத்தினர் தங்கள் உணவாக மாட்டிறைச்சியை எடுத்துக் கொள்வதில்லை.[9][10] இந்திய அரசியலமைப்புச் சட்டம், சரத்து 48 இன்படி பசு மற்றும் கன்றுகள் வதையைத் தடுத்தல் மற்றும் பால் தரும் பசுக்கள், தீவனம் இன்றி வாடும் கால்நடைகளின் நலன்களை பேணுதல் போன்றவற்றை வலியுறுத்துகிறது."[11][12][13] இச்சரத்து மாநிலப்பட்டியலில் உள்ளதால் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் பசுவதை தடைச்சட்டமுள்ளது. பசு, காளை, எருது, ஒட்டகம் ஆகிய விலங்குகளை இறைச்சிக்காக விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யக்கூடாது என்று விலங்குகள் வதை தடுப்புச் சட்ட (கால்நடைச் சந்தை முறைப்படுத்துதல்) விதிகள் 2017 இல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் இறைச்சிக்கு விலங்குகளை விற்பனைசெய்ய விற்பனைக் கூடங்களைப் பயன்படுத்த முடியாது.[14] பசுவதை மற்றும் மாட்டிறைச்சி உண்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வன்முறைகளும் நிகழ்கின்றன.

தமிழ்நாடு[தொகு]

தமிழ்நாட்டில் சங்க காலத்தில் இருந்தே மாட்டிறைச்சி உண்பது வழக்கத்தில் இருந்துள்ளது. மயிலிறகால் ஆன மாலையை அணிந்த வீரர் இளம் பசுவைக் கொன்று உண்டனர் என அகநானூற்றின் 249ஆம் பாடல் குறிப்பிடுகிறது.[15]

நேப்பாளம்[தொகு]

நேப்பாளத்தில் உணவிற்காகப் பசுவைக் கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.[16] பெரும்பாலும் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதால் நேப்பாளத்தில் பசுவின் இறைச்சியைப் பெரும்பாலும் தவிர்க்கின்றனர் ஆனால் சிலர் எருமையின் இறைச்சியை எடுத்துக் கொள்கின்றனர்.

கியூபா[தொகு]

2003 இல் பால் மற்றும் பால் பொருட்களின் பற்றாக்குறையால் பசு வதை தடைசெய்யப்பட்டுள்ளது.[17]

ஐக்கிய இராச்சியம்[தொகு]

உலக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த லண்டனிலுள்ள கோல்ட்ஸ்மீத் பல்கலைக்கழகம் மாட்டிறைச்சி விற்பனையைத் தனது கல்விநிலைய வளாகத்தில் தடைசெய்துள்ளது.[18]

உலகளவில் உற்பத்தியாளர்கள்[தொகு]

முதல் பத்து கால்நடை மற்றும் மாட்டிறைச்சி உற்பத்தி செய்யும் நாடுகள்.[19]

மாட்டிறைச்சி உற்பத்தி (1000 மெட்ரிக் டன்கள் CWE)

தரம் நாடு 2009 2010 %மாற்றம்
1 அமெரிக்க ஐக்கிய நாடு 11,889 11,789 −0.8%
2 பிரேசில் 8,935 9,300 4%
3 ஐரோப்பிய ஒன்றியம்-27 7,970 7,920 −0.6%
4 சீனா 5,764 5,550 −4%
5 அர்ஜென்டினா 3,400 2,800 −18%
6 இந்தியா 2,610 2,760 6%
7 ஆஸ்திரேலியா 2,100 2,075 −1%
8 மெக்சிகோ 1,700 1,735 2%
9 ரஷ்யா 1,285 1,260 −2%
10 பாகிஸ்தான் 1,226 1,250 2%

தேசியளவில் கால்நடை மந்தைகள் (தலைக்கு 1000 வீதம்)

தரம் நாடு 2009 2010 %மாற்றம்
1 இந்தியா 57,960 58,300 0.6%
2 பிரேசில் 49,150 49,400 0.5%
3 சீனா 42,572 41,000 −4%
4 அமெரிக்க ஐக்கிய நாடு 35,819 35,300 −1.4%
5 ஐரோப்பிய ஒன்றியம்-27 30,400 30,150 −0.8%
6 அர்ஜென்டினா 12,300 13,200 7%
7 ஆஸ்திரேலியா 9,213 10,158 10%
8 ரஷ்யா 7,010 6,970 −0.6%
9 மெக்சிகோ 6,775 6,797 0.3%
10 கொலம்பியா 5,675 5,675 0.0%

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Livestock and Poultry: World Markets and Trade (October 2009)" (PDF). Archived from the original (PDF) on 13 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 April 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help) USDA PDF
 2. "Eating beans instead of beef would sharply reduce greenhouse gasses". Loma Linda University Adventist Health Sciences Center. மே 23, 2017. https://www.sciencedaily.com/releases/2017/05/170523081954.htm. 
 3. "Beef ban can mitigate climate change: US researchers". financial express. https://www.financialexpress.com/lifestyle/science/beef-ban-can-mitigate-climate-change-us-researchers/684727/. பார்த்த நாள்: 14 August 2019. 
 4. "Milking beef issue could tear social fabric". 28 May 2017.
 5. Safi, Michael (5 April 2017). "Muslim man dies in India after attack by Hindu 'cow protectors'". The Guardian. https://www.theguardian.com/world/2017/apr/05/muslim-man-dies-in-india-after-attack-by-hindu-cow-protectors. 
 6. "'Women raped in fatal attack over beef'". 12 September 2016. https://www.bbc.com/news/world-asia-india-37336050. 
 7. Doshi, Vidhi (6 June 2017). "To protest Modi, these Indians are cooking beef in public". The Washington Post. https://www.washingtonpost.com/world/asia_pacific/protests-against-the-governments-anti-beef-laws-spread-in-india/2017/06/05/8aa05dfc-489e-11e7-bcde-624ad94170ab_story.html. 
 8. "Holy cow: World's 2nd-largest beef exporter may ban cattle slaughter – FarmIreland.ie". independent.ie. http://www.independent.ie/business/farming/beef/holy-cow-worlds-2ndlargest-beef-exporter-may-ban-cattle-slaughter-35782142.html. 
 9. "Explained: Holiness of the Cow and Controversy Over Beef-Eating In Ancient India". Indian Express. 8 June 2015.
 10. "The Hindu : Beef eating: strangulating history". www.thehindu.com.
 11. John R. K. Robson (1980). Food, Ecology, and Culture: Readings in the Anthropology of Dietary Practices. Taylor & Francis. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-677-16090-0.
 12. Kazmin, Amy (November 21, 2017). "Modi's India: the high cost of protecting holy cows". Financial Times (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-05.
 13. "Cow slaughter and the Constitution". the hindu. https://www.thehindu.com/opinion/lead/cow-slaughter-and-the-constitution/article18683942.ece. பார்த்த நாள்: 14 August 2019. 
 14. "New rules do not ban cattle slaughter, observes Kerala High Court". the hindu. https://www.thehindu.com/news/national/kerala/new-rules-do-not-ban-cattle-slaughter-observes-kerala-high-court/article18664510.ece. பார்த்த நாள்: 14 August 2019. 
 15. அகநானூறு மணிமிடை பவளம் மூலமும் உரையும், பக்கம் 271 புலியூர்க் கேசிகன் உரை, சாரதா பதிப்பகம், பதிப்பு : ஜூன் 2010
 16. "Pakistan serves beef to Nepal earthquake survivors". india today. https://www.indiatoday.in/nepal-earthquake-2015/story/nepal-earthquake-pakistan-relief-aid-beef-masala-pana-force-foods-bir-hospital-250789-2015-04-30. பார்த்த நாள்: 14 August 2019. 
 17. Cuba bans cow slaughter. Articles.economictimes.indiatimes.com (13 September 2003). Retrieved on 19 December 2016.
 18. "A university has banned beef to help fight climate change". சி.என்.என்.. https://edition.cnn.com/2019/08/13/uk/goldsmiths-beef-ban-climate-scli-gbr-intl/index.html. பார்த்த நாள்: 14 August 2019. 
 19. Daily Livestock Report – Vol. 8, No. 126/ 30 June 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்டிறைச்சி&oldid=3968183" இலிருந்து மீள்விக்கப்பட்டது