வைசாக் (மாதம்)
Appearance
வைசாக் மாதம், (பஞ்சாபி மொழி: ਵੈਸਾਖ, ஆங்கில மொழி: Vaisakh) சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி இரண்டாவது மாதம். இம்மாதம் கிரகரிய நாட்காட்டியின் ஏப்ரல் 14 முதல் மே 14 வரையான 31 நாட்களை உள்ளடக்குகிறது. இது தமிழ் நாட்காட்டியின் சித்திரை மாதத்துடன் ஏறத்தாழப் பொருந்துகிறது. இக்காலம் பஞ்சாப் பகுதியில் அறுவடைக்காலம்.
வைசாகி சீக்கியர்களின் முக்கியமான பண்டிகை. இது வைசாக் மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதியோடு பொருந்தி வரும்.
வைசாக் மாதச் சிறப்பு நாட்கள்
[தொகு]- 1 வைசாக் (14 ஏப்ரல்) - வைசாகிப் பண்டிகை.
- 3 வைசாக் (16 ஏப்ரல்) - குரு அங்காட் தேவர் இறையுடன் கலந்த தினம்.
- 3 வைசாக் (16 ஏப்ரல்) - குரு அமர் தாஸ் குருப்பட்டம் பெற்ற தினம்.
- 3 வைசாக் (16 ஏப்ரல்) - குரு ஹர் கிசன் இறையுடன் கலந்த தினம்.
- 3 வைசாக் (16 ஏப்ரல்) - குரு தெக் பகதூர் குருப்பட்டம் பெற்ற தினம்.
- 5 வைசாக் (18 ஏப்ரல்) - குரு அங்காட் தேவர் பிறந்தநாள்.
- 5 வைசாக் (18 ஏப்ரல்) - குரு தெக் பகதூர் பிறந்தநாள்.
- 19 வைசாக் (2 மே) - குரு அர்ஜன் தேவர் பிறந்தநாள்.