கட்டக் (மாதம்)
Appearance
கட்டக் அல்லது கத்தக் (பஞ்சாபி மொழி: ਕੱਤਕ, ஆங்கில மொழி: Katak) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி எட்டாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் அக்டோபர், நவம்பர் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 நாட்களைக் கொண்டதாகும்.
கட்டக் மாதத்தின் சிறப்பு நாட்கள்
[தொகு]அக்டோபர்
[தொகு]- அக்டோபர் 15 (1 கட்டக்) - கட்டக் மாதத் துவக்கம்
- அக்டோபர் 20 (6 கட்டக்) - குரு ஹர் ராயின் ஜோதி ஜோத் (Joti Jot)
- அக்டோபர் 20 (6 கட்டக்) - குரு கிரந்த் சாகிப்பின் குரு காடி (Gur Gadi)
- அக்டோபர் 21 (7 கட்டக்) - குரு கோவிந்த் சிங்கின் ஜோதி ஜோத்
நவம்பர்
[தொகு]- தீபாவளி
- நவம்பர் 14 (1 மகர்) - கட்டக் மாத முடிவும் மகர் மாத துவக்கமும்