உள்ளடக்கத்துக்குச் செல்

பெஸ்து வரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெஸ்து வரஸ் (Bestu Varas) அறுவடை காலத்தின் துவக்கத்தில், தீபாவளி பண்டிகைக்குப் பின் வரும் வளர்பிறை அன்று குஜராத்தி புத்தாண்டு துவங்குகிறது. ஆனால் இராஜஸ்தானின் மார்வார் பிரதேசத்தின் மார்வாடிகள் தீபாவளி அன்று தங்கள் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.

தொன்ம வரலாறு

[தொகு]

பெஸ்து வரஸ் பண்டிகை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்புடையது. இதிகாச, புராணங்களின்படி, பகவான் கிருஷ்ணர் தனது இளமை வாழ்க்கையை விரஜபூமியில் கழித்தார். மேலும் இந்திரனுக்கு அளிக்கப்பட்ட காணிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பினார். இதனால் விரஜபூமி மக்கள் இந்திரனுக்கு காணிக்கை செலுத்துவதை நிறுத்தினர். இதற்கு பழிவாங்கும் விதமாக, இந்திரன் விரஜபூமியில் இடியுடன் கூடிய பலத்த மழை பொழியச் செய்தார். இதனால் ஆயர் குலத்தினரின் உடமைகள் மற்றும் கால்நடைகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இந்த துன்பங்களுக்கு முடிவு கட்ட, கிருஷ்ணர், கால்நடைகள் மற்றும் யாதவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக கோவர்தன் மலையை தனது சுண்டு விரலில் உயர்த்தி, குடையாக பிடித்தார். இது ஏழு நாட்கள் தொடர்ந்தது, எட்டாவது நாளில், இந்திரன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பகவான் கிருஷ்ணருக்கு தலைவணங்கினார். இந்த வழியில், கோவர்தன் மலைக்கு பிரார்த்தனை செய்யும் பாரம்பரியம் தொடங்கியது.

சடங்குகள்

[தொகு]

வணிகர்கள் தங்கள் பழைய கணக்குப் புத்தகங்களை மூடிவிட்டு, புதியவற்றைத் திறக்கிறார்கள், இதற்கு ஒரு நாள் முன்னதாக, கணக்குப் புத்தகங்களில் புனிதமான சுவஸ்திகா சின்னத்தை வர்ணம் பூசியும், சுபம் & இலாபம் என்றும் எழுதுகிறார்கள். மக்கள் செல்வத்தின் தெய்வமான இலட்சுமி தேவியையும், கல்வியின் தெய்வமான சரசுவதி தேவியையும் வணங்குகிறார்கள். ஆண்டின் முக்கியத்துவமான இந்த நாள் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் தருவதாக நம்பப்படுகிறது. குஜராத்தி புத்தாண்டு கோவர்தன் பூஜையுடன் ஒத்துப்போகிறது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஸ்து_வரஸ்&oldid=3342587" இலிருந்து மீள்விக்கப்பட்டது