புத்தூர் வேளா (கேரளா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள புத்தூரில், புத்தூர் திருப்புரைக்கால் பகவதி கோவில் உள்ளது. இந்த ஆலயம் கர்ணகி என்றும் பத்ரகாளி தேவி என்றும் அழைக்கப்படும் இந்து பெண் தெய்வத்தை மூலவராகக் கொண்டுள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் மலையாள மாதமான மீன மாசத்தில் (மார்ச் - ஏப்ரல்) நடைபெறும் திருவிழா புத்தூர் வேளா எனப்படும். நூற்றுக்கணக்கான பக்தர்களை இவ்விழாவிற்கு ஈர்க்கும் அளவு பிரசித்தி பெற்ற இக்கோவிலில் தினமும் மாலை பூசைகள் முடிந்த பிறகு கதன வெடி (பட்டாசு) வெடிக்கப்படுகிறது.

கிரிகோரியன் நாட்காட்டியின் படி மார்ச்-ஏப்ரல் மாதத்திற்கு ஒத்த மலையாள மாதமான மீனம் மாதத்தில் நடைபெறும் இவ்விழா மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். உற்சவ விழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் கொடி மீனத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று ஏற்றப்படுகிறது. அடுத்தடுத்த மாலைகளில் பஜனைகள் மற்றும் கர்நாடக இசைக் கச்சேரிகள் போன்ற ஆன்மீக பக்தி நிகழ்ச்சிகள் நிறைந்திருக்கும். விழாவின் சிறப்பம்சங்களாக கேரள கலைஞர்களின் கதகளி நிகழ்ச்சிகளும், ஓட்டம், துள்ளல் மற்றும் சாக்கியர் கூத்து போன்ற பாரம்பரிய கலைகளும் தினந்தோறும் நடைபெறும்.

சமீபமாக, இவ்விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக இசை ஆர்வலர்களையும் இவ்விழாவிற்கு ஈர்க்கும் படி நடததப்படும், புத்தூர் ஸ்ரீ திருப்புரைக்கால் இசை மற்றும் நடன விழா என்ற , இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன விழாவாகும்,ஒவ்வொரு வருடமும் இதில் கலந்துகொண்டு ஈடுபடும் கலைஞர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும். கே.ஜே.யேசுதாஸ், ஓமனக்குட்டி, ஹரிபிரசாத் சௌரஸ்யா, ஹரிஹரன், உஸ்தாத் அம்ஜத் அலிகான், அமன் மற்றும் அயன் அலிகான், ஜெயச்சந்திரன், மனோ, கே.எஸ்.சித்ரா, எல். சுப்ரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.ஸ்ரீகுமார், விஜய் யேசுதாஸ், ஜெயச்சந்திரன், ஷங்கர் மஹாதே ஜவன்ராஜ் போன்ற பாடகர்கள், பாலமுரளீகிருஷ்ணா, உதித் நாராயணன், சாதனா சர்கம், விஜய் பிரகாஷ், கார்த்திக், நரேஷ் ஐயர், உன்னி மேனன், அனுராதா ஸ்ரீராம், வேணுகோபால், உன்னிகிருஷ்ணன், பங்கஜ் உதாஸ், சித்தாரா, மஞ்சரி, காயத்ரி, மற்றும் நடனக் கலைஞர்களான லட்சுமி கோபாலசாமி, மல்லிகா சாராபாய், பத்மா சுப்ரமணியம், ஷோபா சுப்பிரமணியம், மஞ்சு வாரியர் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் பல்வேறு வருடங்களில் இங்கு வந்து பாடி, சிறப்பாக விழாவை நடத்திக்கொடுத்துள்ளனர். 2007 ஆம் ஆண்டில், விஜயலட்சுமி என்ற விருது பெற்ற பார்வையற்ற கலைஞர் ருத்ர வீணையில் (சரத்தின் மூலோபாய இடங்களில் மரத் துண்டை அழுத்தி இசைக்கப்படும் ஒற்றைக் கம்பி வாத்தியம்) பாடினார். அவரது திறமையை கண்டு பார்வையாளர்கள் கண்ணீர் விட்டனர்.

திருவிழாவின், இறுதி 'வேளா' நாளில் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது தெய்வத்தின் பெரும் ஊர்வலத்துடன் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுபெறுகின்றன. தேவியுடன் பத்து அல்லது பதினொரு அலங்கரிக்கப்பட்ட யானைகள் உள்ளன. ஊர்வலத்தின் முன்னால் கேரளாவின் பாரம்பரிய இசைக்குழு - பஞ்சவாத்தியம் மற்றும் பாண்டிமேளம் ஆகியவை இசையமைத்து வழிநடத்திச்செல்லும்..

உற்சவத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் வேளாவிற்கு மறுநாள் கோயில் கொடி இறக்கப்படுகிறது.

சுல்தான்பேட்டையில் இருந்து இத்திருவிழா நடக்கும் புத்தூர் செல்லும் வழியில் (வெறும் 1 கிலோமீட்டர் (0.62 mi) ), கணபதி கோயில், ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் மற்றும் சிவன் கோயில் ஆகியவற்றைக் கொண்ட மற்றொரு ஆன்மீக கிராமமான ராமநாதபுரம் உள்ளது. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தூர்_வேளா_(கேரளா)&oldid=3670380" இலிருந்து மீள்விக்கப்பட்டது