சங்கடகர சதுர்த்தி விரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் வளர்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும்.[1] [2] இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும்.

மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும்.

தொன்மம்[தொகு]

இவ்விரதத்தை கிருதவீரியன் மேற்கொண்டு கார்த்தவீரியன் என்ற வீரனைப் பிள்ளையாகப் பெற்று பேரரசை எய்தினான். சந்திரன் இந்நோன்பைப் பூண்டு தனது சயரோகம் நீங்கப்பெற்றான். புருசுண்டி என்னும் முனிவர் கடைபிடித்து தன் பிதுர்தேவதைகளைச் சுவர்க்கத்திற்கு அனுப்பினார். இன்றும் கடன்தொல்லை, நோய், பகை உடையவர்கள் இந்த நோன்பைப் பூண்டு அவை நீங்கப் பெற்று இன்பம் எய்தி வருகின்றனர்.

இவ்விரதத்தை முதன் முதலிற் செவ்வாய் கடைபிடித்து பேறுபெற்றான். அதனால் இதனை அங்காரக சதுர்த்தி எனவும் அழைப்பர்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதித்ய விரதம்

ஆதாரங்கள்[தொகு]

  1. "சங்கடகர சதுர்த்தி விரதம் சிறப்பு மாலை மலர் செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 11". 2015-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. தினமலர் பக்திமலர் 30-07-2015 பக்கம் 8

வெளி இணைப்புகள்[தொகு]