தஞ்சாவூர் முத்துப்பல்லக்கு விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்துப்பல்லக்கு

தஞ்சாவூர் முத்துப்பல்லக்கு விழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரில் கொண்டாடப்படும் விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

திருஞானசம்பந்தர் குருபூசை[தொகு]

திருஞானசம்பந்தரின் குருபூசையை முன்னிட்டு முத்துப்பல்லக்கு விழா ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறுகிறது.

உலா[தொகு]

இந்த முத்துப்பல்லக்கில் முருகனும் விநாயகரும் எழுந்தருளுவர். அவர்கள் எழுந்தருளும் பல்லக்குகள் தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகிய நான்கு ராஜவீதிகளிலும் மேளதாளங்கள் முழங்க உலா வரும். முதல் நாள் இரவு கிளம்பி மறுநாள் காலை வரை உலா நடைபெறும். [1] விடிய விடிய நடைபெறும் இவ்விழாவின் மறுநாள் அதிகாலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோயில்களுக்குத் திரும்பிச் செல்வர். [2]

விழா நிகழ்வு[தொகு]

மேலஅலங்கம் முருகன் கோயில், சின்ன அரிசிக்கார தெரு பாலதண்டாயுதபாணி கோயில், மானம்புச்சாவடி விஜயமண்டப தெரு ஜோதி விநாயகர் கோயில், தெற்குவீதி கமலரத்ன விநாயகர் கோயில், கீழவாசல் வெள்ளை பிள்ளையார் கோயில், குறிச்சித் தெரு முருகன் கோயில், ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலிருந்து விநாயகர், முருகன் ஆகியோர் எழுந்தருளினர். சில பல்லக்குகளில் திருஞானசம்பந்தரும் எழுந்தருளினார். பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 முத்துப்பல்லக்கில் முருகன்-விநாயகர் வீதிஉலா, தினத்தந்தி, 19 மே 2022
  2. முத்துப்பல்லக்கு வீதி உலா, மாலை மலர், 18 மே 2022

வெளி இணைப்புகள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]