பொன்னேர் உழுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொன்னேர் உழுதல் என்பது பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.[1] இது சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்துவருவதை அகநானூற்று பாடல்கள் வாயிலாக அறியலாம்.[2]

இன்கா நாகரிகம்[தொகு]

இன்கா வேளாண்மை முறையிலும் மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். அங்கேயும் அவர் பொன்னாலான கலப்பையையே பயன்படுத்துவார்.[3]

மகதம்[தொகு]

பண்டை மகதநாட்டு ஊர்களில் ஆண்டுதோறும் முதலுழவு உழும்போது, ஊர்த்தலைவன் பொன்னாற் செய்த ஏரைப் பூட்டி உழவர் வரிசையில் முதலில் நின்று, பிறர் பின்வர, ஒரு படைச்சாலோட்டித் தொடங்கிவைப்பான் என்று சொல்லப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

 1. சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலியின் இணையப்பக்கம்
 2. கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
  தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்; - அகம் - 1

  பொன்னேர் பசலை பாவின்று மன்னே! அகம் - 18

  பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்
  இன்னா இசைய பூசல் பயிற்றலின், அகம் - 52

  பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி
  நல்மா மேனி தொலைதல் நோக்கி, அகம் - 228
 3. நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா அச்சகம், reference book for TNPSC group 1 & M.A. History
 4. தமிழர் வரலாறு-1, பாவாணர்

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னேர்_உழுதல்&oldid=1785679" இருந்து மீள்விக்கப்பட்டது