மாக் பிஹு
மாக் பிஹு Magh Bihu | |
---|---|
![]() மாக் பிஹூவின் போது, அசாமின் நகோன் மாவட்டம் ரந்தலியில் நடந்த ஒரு எருமைச் சண்டை | |
வகை | பாரம்பரிய விழா |
முக்கியத்துவம் | அறுவடைத் திருவிழா |
நாள் | மகர சங்கிராந்தி |
மாக் பிஹு (Magh Bihu (মাঘ বিহু) (போகாலி பிஹு என்றும் அழைக்கப்படுகிறது (ভোগালী বিহু) (பிஹு என்றால் உணவு உண்ணும் இன்பம் என்பதாகும்) அல்லது மாகர் பிஹு (মাঘৰ দোমাহী) என்பது இந்திய மாநிலமான அசாமில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா ஆகும். இது மாசி (சனவரி-பிப்ரவரி) மாதத்தில் அறுவடைக் காலம் முடிந்ததும் நடக்கிறது.[1] இது மகர சங்கராந்தியின் அசாம் வடிவம் ஆகும். இந்த விருந்து ஒரு வாரத்திற்கு நீடிக்கும்.[2]
இந்தத் திருவிழாவில் விருந்து மற்றும் தீமூட்டுதல் ஆகிய அம்சங்கள் முதன்மையானவை.[3] இவ்விழா நாளில் இளைஞர்கள், மீஜி மற்றும் பெஹாகர் என்றழைக்கப்படும் தற்காலிக குடிசைகளை, மூங்கில், இலைகள் ஆகியவற்றைக் கொண்டு அமைத்து, அதன் பக்கத்தில் இரவில் நெருப்பு மூட்டி சமைத்து, ஆடிப் பாடி கூட்டாக விருந்து சாப்பிட்டு மகிழ்வர். அடுத்த நாள் காலையில் குடிசைகளை எரித்து விடுவர்.[4] இந்த கொண்டாட்டங்களின் போது டெக்கீலி பூங்கோ (உறியடி) மற்றும் எருமை சண்டை போன்ற அசாமிய பாரம்பரிய விளையாட்டுகள் நடக்கும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Celebrating Nature's Bounty - Magh Bihu". EF News International இம் மூலத்தில் இருந்து ஜனவரி 17, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120117010132/http://www.efi-news.com/2012/01/celebrating-natures-bounty-magh-bihu.html. பார்த்த நாள்: Jan 14, 2012.
- ↑ Sharma, S. P.; Seema Gupta (2006). Fairs & Festivals Of India. Pustak Mahal. p. 25. ISBN 978-81-223-0951-5.
- ↑ The New Encyclopædia Britannica. Vol. 21. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 1987. p. 137. ISBN 978-0-85229-571-7.
- ↑ "Bihu being celebrated with joy across Assam". தி இந்து. January 14, 2005 இம் மூலத்தில் இருந்து 2005-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050204202109/http://www.hindu.com/2005/01/14/stories/2005011410220300.htm. பார்த்த நாள்: 2009-05-02.
- ↑ "Bonfire, feast & lots more - Jorhat celebrations promise traditional joy this Magh Bihu". The Telegraph. January 12, 2008. http://www.telegraphindia.com/1080112/jsp/northeast/story_8771062.jsp. பார்த்த நாள்: 2009-05-02.