உள்ளடக்கத்துக்குச் செல்

பிட்டுத்திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிட்டுத்திருவிழா மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.

ஆவணி மூலத் திருவிழா[தொகு]

ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகின்றது. இதனை ஆவணி மூலத் திருவிழா என்றும் அழைப்பர். [1]

விழா நிகழ்வுகள்[தொகு]

விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். விழா நாட்களில் தினமும் ஆவணி மூல வீதிகளில் காலையும் மாலையும் வீதி உலா நடைபெறும்.தொடர்ந்து ஏத்தி இறக்கும் விழா அம்மன் சன்னதியில் நடைபெறும். கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி அளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, சிவ பக்தரான தருமிக்கு அருளுதல் போன்றவை விழாவின் பிற முக்கிய நிகழ்வுகளாகும். [1]

நடைமுறை[தொகு]

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து வைகையின் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தியதாக மக்களிடையே நம்பிக்கை நிலவுகின்றது. பிட்டுத்தயார் செய்து உண்பர். இவ்விழாவைப் பிட்டுத்திருவிழா என்பர். பிட்டுக்கு மண் சுமந்த லீலையின்போது சுவாமி, அம்மன் மற்றும் மாணிக்கவாசகர் கோயிலிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாகச் செல்வர். பின்னர் பொன்னகரம் பகுதியில் உள்ள பிட்டுத் தோப்பு மண்டபத்தில் எழுந்தருள்வர். தொடர்ந்து சுந்தரேசுவரர் பிட்டுக்காக பிரம்படி படும் பூசைகள் நடைபெறும். [1]

திருப்பைஞ்ஞீலி[தொகு]

திருப்பைஞ்ஞீலியில் உள்ள நீலிவனேஸ்வரர் கோயிலில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. கோயிலின் வலது புறத்தில் சிறிய அளவு அணை போன்று கட்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு, இவ்விழா நடத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பிட்டுத் திருவிழா ஆக. 9-இல் கொடியேற்றம், தினமணி, 2 ஆகஸ்டு 2018
  2. "திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா, மாலை மலர், 22 ஆகஸ்டு 2018". Archived from the original on 2021-01-28. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்டுத்திருவிழா&oldid=3654368" இலிருந்து மீள்விக்கப்பட்டது