கௌமாரம்முருகனை முழு முதற் கடவுளாக கொண்ட சமயமாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. ஆதிசங்கரர் உருவாக்கிய ஷண்மதங்களில் இதுவும் ஒன்று.
பால தேவராயன் 16 ஆம் நாற்றாண்டில் வாழ்ந்த முனிவர் நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி "காக்க" இறைவனை வேண்டுவதும். இறைவனைத் தலையால் வணங்குவது முறை ஆகலின் உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ் வேண்டுதல் அமையும். அன்றாட கடன்களை முடித்த பின்னர் தூய்மையான ஓரிடத்தில் இருந்துகொண்டு இந்தக் காப்புப் பாடல்களைச் சொல்லவேண்டும் என்று விநாயக கவச நூலின் பதிப்பு குறிப்பிடுகிறது. இவ்வாறு பாடி இறைவனைவேண்டும் கவசங்கள் ஆறு. இதனை இயற்றிய முனிவர் பாலதேவராயன் ஆவார்.
முருக வழிபாடு தொன்மை மிக்கது. சிவனின் மகனான முருகனுக்கும் திராவிடத் தமிழர்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்பது வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதாகும். தமிழர்களின் பண்பாட்டோடும் மொழியோடும் தத்துவத்தோடும் பழக்க வழக்கங்களோடும் இம்முருக வழிபாடு பின்னிப் பிணைந்திருந்த தன்மையைச் சங்ககால இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பரிபாடல் என்பன மிகச் சிறப்பாகக் கூறி நிற்கின்றன.