வலைவாசல் பேச்சு:இந்து சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Crystal Clear action viewmag with a star.png இந்து சமயம் எனும் இவ்வலைவாசல் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய வலைவாசல்களில் ஒன்று.
Wikipedia

செம்மையாக இருக்கிறது :) என்னுடைய கணினியில் வலைவாசல் பக்கங்கள் திரை அலவை விட பெரிதாகக் காட்டுகின்றன. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:22, 1 மே 2013 (UTC)

திருத்தம் செய்துள்ளேன் நண்பரே. பிற விக்கிமீடிய திட்டங்களில் எழுத்துரு அளவானது சற்று பெரியதாக சென்றுவிட்டதால் அவ்வாறு நிகழ்ந்ததுள்ளது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:02, 1 மே 2013 (UTC)

இதுவே சரி. சமயத்துக்கென்று தனி வலைவாசல். விரும்புவோர் வழிபடட்டும்.
கிறித்துவத்துக்கென்று தனி வலைவாணல் நம்பட்டும்
இலக்கியத்துக்கென்று தனி வலைவாசல் படிக்கட்டும்.
தமிழ் மணக்கட்டும். --Sengai Podhuvan (பேச்சு) 19:46, 1 மே 2013 (UTC)

நன்றி நண்பரே --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:16, 3 மே 2013 (UTC)
 • பிறமொழி திட்டங்களை விட வளம் கூட்டி, வளர்த்தெடுக்க வாழ்த்துக்கள். நான் சொற்களில்(விக்சனரியன்) கவனம் செலுத்துபவன். மேலும், ஆசாமிக்குள் இருக்கும் சாமியை வணங்குபவன் எனினும், சில குறிப்புகளைத் தர எண்ணுகிறேன்.
 1. C Puzzle.png என்பதற்கு மாற்றக, Stub W ta.svg என்ற, தமிழன் உருவாக்கிய கோப்பைப் பயன்படுத்தலாமே?
 2. ஜைனம் என்பதற்கு மாற்றாக சமணம் என்ற பயன்படுத்தலாமா?
 3. முடிந்த வரை கிரந்தத்தை தவிர்த்து அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச்சொல்லைத் தரலாமென்றும் எண்ணுகிறேன். ஒலியை விட, ஒரு கட்டுரையின் 'ஒளி' முக்கியமல்லவா? அவ்வப்போது இணைகிறேன்.
 4. சமயம் என்பதை விட, மதம் என்று கூறலாமே? "அரத்தமுள்ள இந்து மதம்" என்று கவிஞர் கூறியதால், நானும் கூறினேன்.
வணக்கம்.≈ உழவன் ( கூறுக ) 04:52, 3 மே 2013 (UTC)
 • படிமத்தினை மாற்றியிருக்கிறேன், சமணம் என்றே தொடங்கியதாக நினைவு, வார்ப்புருவை நண்பர் ஒருவர் திருத்தம் செய்துவிட்டார், மீள்வித்திருக்கிறேன்.
 • கிராந்தத்தை ஆராயும் அளவிற்கு அடியேனுக்கு அனுபவமில்லை என்பதால், தங்களுடைய வரவை நோக்கி கட்டுரைகள் காத்துக் கொண்டிருக்கின்ற நண்பரே.
 • இறுதியாக பல்வேறு இடங்களில் இந்து சமயம் என்றே பயன்படுத்தப்பட்டுவிட்டதால் அனைத்தையும் மாற்ற வெகு காலம் பிடிக்கும். முதன்மைக்கட்டுரையின் பெயர் இந்து சமயம் என்று அமைந்ததால் வலைவாசலுக்கும் அவ்வாறே இட வேண்டிதாய் போயிற்று. தங்களின் இனிய வழிகாட்டுதலுக்கு மி்க்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:16, 3 மே 2013 (UTC)
மதம்/சமயம்: மதம் என்பது வடசொல் என்பதால் அண்மைக்காலங்களில் சமயமே கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது. மதம் பிடிக்காதிருக்க வேண்டும் !--மணியன் (பேச்சு) 04:36, 4 மே 2013 (UTC)

மதம் வடசொல்லா?. வாழ்வோடு பின்னிப்பினைந்து எது எம்மொழிச்சொல் என்பதே அறிய இயலாமல் போய்விட்டது. வல்லுனர்களின் வழிகாட்டுதல்களோடு நாளைய தலைமுறையாவது நல்ல தமிழை அறியட்டும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:14, 4 மே 2013 (UTC)

மிகவும் அருமை...[தொகு]

ஈசுவரனின் அருளாசியோடு ஜெகதீஸ்வரன் செய்வித்துள்ள இந்த வலைவாசல், மிகவும் அருமையாக அமைந்துள்ளது! தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள், இந்த மாதத்தின் முக்கிய நாள் போன்ற தலைப்புக்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டியவை; ஜெகதீஸ்வரனுக்கு மற்ற பயனர்களும் இதில் உதவ வேண்டும்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:31, 3 மே 2013 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 04:30, 4 மே 2013 (UTC)

நன்றி செல்வசிவகுருநாதன் அவர்களே, நிச்சயமாக விக்கியன்பர்கள் பராமரிக்க உதவி செய்வார்கள் என நம்புகிறேன். இந்து சமயத்திற்கென தனி விக்கித்திட்டம் இல்லை என்பதால் சிறப்பு கட்டுரைகளை தேர்வு செய்வதிலும், சிறந்த படங்களை காட்சிபடுத்துவதிலும் கூட சிரமம் உள்ளது. அதற்கும் உதவி செய்ய வேண்டும். தற்போது இணைக்கப்பட்டிருப்பவை குறித்து எனக்கு முழு திருப்பதியில்லை. பல கட்டுரைகள் விக்கியின் சிறப்பு கட்டுரை எனும் தகுதியினை எட்ட இயலாமல் இருக்கின்றன. ஒன்று கூடி தேர் இழுக்கும் பொழுது இவை சாத்தியப்படும் என நினைக்கிறேன். நன்றி தங்களுக்கும் மணியன் அவர்களுக்கும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:14, 4 மே 2013 (UTC)

/* சில திருத்தங்கள் */[தொகு]

 1. தொடர்புள்ள வலைவாசல்களில் காட்டப்படும் மற்ற ஐந்து பிரிவுகளில் 4 மேம்படுத்த முடியாதவை. அவற்றை நீக்கிடலாம்.
 2. சேயோன் முருகனா சிவனா என்பது இன்னும் தெளிவில்லை. அத்னால் சேயோன் சிவன் போன்ற குழப்பமுள்ள வாக்கியங்களை நீக்கிடலாம்.
 3. பகுப்பு:தொன்மவியல் பாண்டியர்கள், பாண்டியர் செப்பேடுகள், தொன்மவியல் பாண்டியர் போன்றவற்றையும் கணக்கில் கொள்ளவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:57, 21 மே 2013 (UTC)
 1. இறைவன் அனுமதித்தால் விரைவில் அவற்றை உருவாக்கி தருகிறேன் நண்பரே. கவலை வேண்டாம்.
 2. சேயோன் என்பதற்கு சிவந்தவன் என்று பொருள் வருகிறது. சிவனை சேயோன் என்று அழைத்தமையும், அந்த வழிபாடே சிவவழிபாடாக மாறியதையும் சிவன் கட்டுரையில் ஆதாரத்துடன் இணைத்துள்ளேன். சிவனும், அவன் மகனும் சேயோன் எனவும், அம்மை சேயோள் என்று அழைக்கப்பட்டதும் அறிஞர் கூறியவையே.
 3. நிச்சயம் இணைக்க பார்க்கிறேன் நண்பரே.

தங்களது ஆலோசனைகளுக்கும், வழிகாட்டல்களுக்கும் மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:08, 21 மே 2013 (UTC)