உள்ளடக்கத்துக்குச் செல்

குஜராத் வன்முறை 2002

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2002 குஜராத் வன்முறை
Part of இந்தியாவில் மதக்கலவரம்
கலவரக் கும்பல்களால் கட்டிடங்களும் கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டதால் அகமதாபாத்தின் வானலை புகையால் நிரம்பியுள்ளது.
தேதிபிப்ரவரி – மார்ச் 2002
அமைவிடம்
குசராத்து, இந்தியா
காரணம்கோத்ரா தொடருந்து எரிப்பு[1][2]
அரச பயங்கரவாதம்[3][1]
இனக்கருவறுப்பு[2]
முறைகள்கலவரம், இனப்படுகொலை, தீ வைப்பு, கூட்டு பாலியல் வன்கொடுமை, கடத்தல், திரள் கொலை
உயிரிழப்புகள்
இறப்பு(கள்)790 முஸ்லிம்கள் மற்றும் 254 இந்துக்கள் (அலுவல்பூர்வமாக)
1,926 -முதல் 2,000+ மொத்தமாக (பிற ஆதாரங்கள்)[4][5][6]
காயமுற்றோர்2,500+

குஜராத் வன்முறை 2002 எனக் குறிப்பிடுவது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே 2002-ஆம் ஆண்டில் மூன்று மாதங்களுக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடந்த மதக்கலவரம் ஆகும். பிப்ரவரி 27, 2002 அன்று அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டியை கோத்ரா தொடர்வண்டி நிலையத்தின் அருகே வன்முறையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்[7]. இதில், அந்த தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர்[8].

கோத்ரா தொடருந்து எரிப்பு

[தொகு]

27 பெப்ரவரி 2002

[தொகு]

2002-ஆம் ஆண்டு 27 பெப்ரவரி அன்று, அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டியை கூட்டம் ஒன்று தீ வைத்ததாக நம்பப்பட்டது. இதில் 14 குழந்தைகள் உட்பட 57 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்[8]. எரிந்த தொடர்வண்டிப் பெட்டிகளை கழற்றி விட்ட பின்னர், தொடர்வண்டி வடோடராவிற்கு சென்றடைந்தது. அங்கு கூடியிருந்தோர் ,தொடர்வண்டியில் வந்திறங்கிய ஒருவரை கொன்றுவிட்டு, மற்றவர்களை கட்டையால் அடித்தனர்[8]. அன்றே,அகமதாபாத்தில் இரண்டு பேருந்துகளுக்கு, ஒரு கும்பல் தீயிட்டது[9].

ஆஸ்திரேலியாவில் இருந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்[8]. நாட்டு மக்கள் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டி கொண்டார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை, ராமர் கோவில் கட்டுவதை தவிர்க்குமாறு வாஜ்பாய் மற்றும் அத்வானி வலியுறுத்தினர்[10].எனினும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணியை 15 மார்ச் அன்று தொடங்கப்போவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தது[11]. இதற்காக 3000 உதவி ராணுவ அணிகள் அயோத்திக்கு அனுப்பப்பட்டனர்[8].

70,000 காவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மாநிலமெங்கும் அமர்த்தப்பட்டனர்[12] அன்று இரவே, கோத்ரா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது[8].குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் கோர்தன் சடாஃபியா வன்முறையை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரித்தார். இதில் கண்டவுடன் சுட உத்தரவு போன்ற கடுமையான நடவடிக்கைகள் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள இடங்களில் அமல்படுத்தப்பட்டதை சுட்டிக் காட்டினார். மற்றும், இந்து - முஸ்லிம்கள் ஒன்றாக வாழும் இடங்களுக்கு அதிக பாதுகாப்பு போடப்பட்டது[8]. கடைகளைச் சூறையாடிய மற்றும் வீடுகளை தீயிட்டு கொளுத்திய கும்பலின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது வாலிபர் மரணமடைந்தார்[8]

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தொடர்வண்டி எரிப்பு நிகழ்வை கண்டித்தார்[13]. இவரைத் தவிர, வேறெவரும் அந்நிகழ்வை கண்டிக்கவில்லை[14]. குஜராத்தின் அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்திலும் எச்சரிக்கை எழுப்பப்பட்டது[15].

28 பெப்ரவரி 2002

[தொகு]

தொடர்வண்டி எரிப்பைக் கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் கடையடைப்புக்குக் கோரினர்[11]. குஜராத்தின் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன[10]. பாராளுமன்றத்தில் நடந்த அறிக்கைத் தாக்கலை பாஜக மற்றும் சிவ சேனா புறக்கணித்து அமளியில் ஈடுப்பட்டனர்[16]. தொடர்வண்டி எரிப்புக்காக பன்னிரெண்டு பேரை கைது செய்தனர். ஆயிரம் பேர் கொண்ட துணை ராணுவப் படையை இந்திய அரசு குஜராத்திற்கு அனுப்பிவைத்தது[17]. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டன. 60 முஸ்லிம்களை இந்து வன்முறைக் கும்பல் கொன்றதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன[17]. கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஆறு பேரை காவல்த்துறையினர் சுட்டுக் கொன்றனர்[17].

முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதம மந்திரியை சந்தித்து கலவரத்தை கட்டுப்படுத்த கோரினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி[13]. வீ ஹெச்பி தொண்டர்களை அயோத்திக்கு செல்ல வலியுறித்தியும், கோவில் கட்ட வழி வகுக்காத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் மேல குற்றச்சாட்டு எழுப்பியும், பிரதமரை இராஜினாமா செய்யக் கூறினார் ஓம்கார் பாவே எனும் வீஹெச்பி தலைவர் அறிக்கை வெளியிட்டார்[17].

பாதிப்புகள்

[தொகு]

இந்திய மத்திய அரசின் தகவலின்படி இக்கொடிய வன்முறையின் நிமித்தம் 790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டும், 2458 பேர் காயமடைந்தும் 223 பேர் காணாமலும் போனதோடு மேலும் 919 பெண்கள் விதவைகளாகவும் 606 சிறார்கள் அனாதைகளும் ஆக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பற்ற மனித உரிமை கண்காணிப்பாளர்களின தரவுகளின்படி வன்முறையில் இறந்தோரின் எண்ணிக்கை 1000 ற்கும் அதிகமென கூறப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் சபையின் Congress Research Service (CRS) தகவலின் படி இவ்வெண்ணிக்கை 3000 க்கும் அதிகமெனவும் இவற்றில் அதிகமானோர் முஸ்லிம்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்திய நடுவண் அரசு இவற்றையெல்லாம் மறுத்தது. வன்முறையில் வீடுகள், கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டதுடன், நபர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டும், பெண்கள் கூட்டாக வன்புணர்ச்சிக்கும் உள்ளானார்கள்.

குற்றவியல் வழக்குகள்

[தொகு]

பில்கிஸ் பானு வழக்கு

[தொகு]

குஜராத் வன்முறையின் போது பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 14 பேர் மார்ச் 3-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிகழ்வு தொடரபான வழக்குகளே பில்கிஸ் பானு வழக்கு என்று அழைக்கப்படுகின்றன.[18]

பின் விளைவுகள்

[தொகு]
  1. ஆஜ் தக் தொலைக்காட்சியும், தெஹல்காவும் இணைந்து நடத்திய புலன் விசாரணையில் வன்முறை குறித்தான தகவல்கள் வெளியாகின. அதில், ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் எரித்ததையும், இவைகளுடன் சிறுபான்மை பெண்களை அநியாயமாக கூட்டு வன்புணர்வு செய்த கலவரக்காரர்களுக்கும், அகமதாபாத்தில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவருக்கும் மோடி ஆதரவு தெரிவித்ததையும் அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் வெளிப்படுத்தியது.[19][20][21]. ஆனால் நீதிமன்றம் இதில் பாதியளவு மட்டுமே உண்மை எனவும் வயிற்றைக் கிழித்து சிசுவைக் கொன்றது புனையப்பட்ட கதை என நிருபிக்கப்பட்டுள்ளது. [Kausarbanu tale only a half truth: Court 1] இறந்த கர்பிணிப் பெண்ணை உடற்கூறாய்வு செய்த மருத்துவரும் சிசுவை வயிற்றைக் கிழித்து எடுத்துக் கொன்றதற்கான தடயம் எதுவும் உடற்கூறாய்வில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று குறினார். [22]
  2. ஆஜ் தக் தொலைக்காட்சியும், தெஹல்காவும் இணைந்து நடத்திய புலன் விசாரணையில் கலவரக்காரர்கள் முஸ்லிம்களை எவ்வாறு திட்டமிட்டு இன அழிப்பு செய்தார்கள் என்று தன் வாயாலேயே வீடியோ வாக்குமூலம் கொடுத்தது நாடு முழுவதும் பரபரப்புக்கு உள்ளாகியது. அந்த ரகசிய புலன்விசாரணை வாக்குமூலங்கள் நாடு முழுவதிலும் உலக அரங்கிலும் பாரதிய ஜனதா மற்றும் அதன் பரிவார இயக்கங்களான வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் & சிவசேனாவுக்கு அவப்பெயரை தேடித்தந்தது..[19][20][21]. உச்ச நீதிமன்றம் இதை ஒரு முக்கிய ஆதாரமாக எடுத்துகொண்டது.

சிறப்பு புலனாய்வுக் குழு & உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

[தொகு]

2002 குஜராத் கலவர வழக்கை விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இச்சிறப்பு புலனாய்வு குழு, தமது விசாரணையின் முடிவில் குஜராத் கலவர வழக்கில் அபோதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி அப்பழுக்கற்றவர் என்ற முடிவிற்கு வந்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவை இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவை எதிர்த்து, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனுவை 24 சூன் 2022 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியதுடன், சிறப்பு விசாரணைக் குழுவின் தகுதியை கேள்விக்குட்படுத்த எந்த காரணமும் இல்லை என்றும் கூறியது. மேலும் இவ்வழக்கின் மற்றொரு மனுதாரரும், ஆர்வலருமான தீஸ்தா செதல்வாட்டின் குற்றச்சாட்டுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.[23][24][25]

குறிப்புகள்

[தொகு]
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/kausarbanu-tale-only-a-half-truth-court/articleshow/16243417.cms என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Baruah 2012 b என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; McLane 2010 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Pandey 2005 b என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Setalvad, Teesta (3 March 2017). "Talk by Teesta Setalvad at Ramjas college (March 2017)". www.youtube.com. You tube. Archived from the original on 27 November 2019. Retrieved 4 July 2017.
  5. Jaffrelot, Christophe (July 2003). "Communal Riots in Gujarat: The State at Risk?". Heidelberg Papers in South Asian and Comparative Politics: 16. http://archiv.ub.uni-heidelberg.de/volltextserver/4127/1/hpsacp17.pdf. பார்த்த நாள்: 5 November 2013. 
  6. The Ethics of Terrorism: Innovative Approaches from an International Perspective. Charles C Thomas Publisher. 2009. p. 28. ISBN 9780398079956. Archived from the original on 5 December 2021. Retrieved 15 October 2020.
  7. http://www.pbs.org/newshour/updates/february02/india_2-27.html பரணிடப்பட்டது 2012-05-28 at the வந்தவழி இயந்திரம் INDIAN TRAIN TORCHED, AT LEAST 57 DEAD, PBS, February 27, 2002
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 http://news.google.com/newspapers?id=0H5dAAAAIBAJ&sjid=n1wNAAAAIBAJ&pg=6503,5458120&dq=godhra&hl=en Telegraph Herald – International section – February 27, 2002
  9. http://news.google.com/newspapers?id=IrcaAAAAIBAJ&sjid=0D4EAAAAIBAJ&pg=6667,5565927&dq=godhra&hl=en[தொடர்பிழந்த இணைப்பு] Milwaukee Journal Sentinel – February 28, 2002 – Muslim mob burns trains, killing 57 Hindus
  10. 10.0 10.1 http://www.nytimes.com/2002/02/28/world/fire-started-on-train-carrying-hindu-activists-kills-58.html Fire Started on Train Carrying Hindu Activists Kills 58
  11. 11.0 11.1 http://www.theguardian.com/world/2002/feb/28/india.lukeharding Fire attack on train shakes India
  12. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/1386341/Hindus-massacred-on-blazing-train.html
  13. 13.0 13.1 http://hindu.com/thehindu/2002/03/01/stories/2002030106081100.htm
  14. http://books.google.co.in/books?id=WZQip6zwxYwC&printsec=frontcover&dq=editions:ynFpCyHNIfsC&hl=en&sa=X&ei=1W4QUsMGitGtB5aJgZAD&ved=0CC0Q6AEwAA#v=onepage&q&f=false Godhra: The Missing Rage, S.K.Modi, Page 27
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2002-05-27. Retrieved 2013-09-20.
  16. http://www.mid-day.com/news/2002/feb/21259.htm Sinha presents tough Budget
  17. 17.0 17.1 17.2 17.3 http://www.nytimes.com/2002/03/01/world/hindu-rioters-kill-60-muslims-in-india.html Hindu Rioters Kill 60 Muslims in India, The New York Times, March 1, 2002
  18. "What is Bilkis Bano gangrape case?". Indian Express. Retrieved 6 மே 2017.
  19. 19.0 19.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-11. Retrieved 2013-09-01.
  20. 20.0 20.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-06. Retrieved 2013-09-01.
  21. 21.0 21.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-17. Retrieved 2013-09-01.
  22. https://indianexpress.com/article/news-archive/web/pregnant-kausarbanu-died-of-burns-says-doctor/
  23. ‘No larger conspiracy behind Gujarat riots’: SC rejects Zakia Jafri plea against clean chit to Modi
  24. 'Far-fetched, attempt to keep pot boiling': Supreme Court raps Gujarat riots case petitioner
  25. குஜராத் கலவரம்: டீஸ்டா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமாரிடம் தனிப்படை விசாரணை
பிழை காட்டு: <ref> tag with name "Official death toll" defined in <references> is not used in prior text.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜராத்_வன்முறை_2002&oldid=4266927" இலிருந்து மீள்விக்கப்பட்டது