முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019
இயற்றியதுஇந்திய நாடாளுமன்றம்

முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் (The Muslim Women (Protection of Rights on Marriage) Act, 2017) என்பது உச்சநீதிமன்றத்தில் இந்தியாவில் முத்தலாக் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டதால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி ஏற்படுத்தப்பட்ட மசோதா ஆகும்.[1][2] இது தொடர்பான தீர்ர்ப்பினை ஆகஸ்டு 2017 இல் உச்சநீதிமன்றம் வழங்கியது. முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதாவினை மத்திய அரசு டிசம்பர் 28, 2017 இல் மக்களவையில் தாக்கல் செய்தது.[3] இந்த மசோதாவின் மூலம் முத்தலாக் முறை எழுத்து முறை,பேச்சு, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திச் சேவை போன்ற எந்த வடிவத்தில் வந்தாலும் அந்த கணவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.[4] இராச்டிரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மக்களவையில் சட்ட அமைச்சர் இரவி சங்கர் பிரசாத் கொண்டு வந்த இந்த மசோதாவிற்கு இந்திய தேசிய காங்கிரசு ஆதரவு அளித்தது.[5][6] இந்த மசோதாவில் 19 திருத்தங்கள் அறிவுறுத்தப்பட்டன. ஆனால் மக்களவையில் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. 31 சூலை 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் இச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். தற்போது இச்சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. The Muslim Women (Protection of Rights on Marriage) Bill, 2019
  2. "'100 cases of instant triple talaq in the country since the SC judgement'".
  3. "Lok Sabha passes triple talaq bill".
  4. "Triple Talaq Bill Passed In Lok Sabha". Republic TV இம் மூலத்தில் இருந்து 31 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171231212816/http://www.republicworld.com/s/17374/triple-talaq-bill-passed-in-lok-sabha. 
  5. "Congress' backing of triple talaq bill indicates it's gradually withdrawing from Muslim appeasement politics".
  6. "Congress backs triple talaq bill, Khurshid strikes discordant note".