தேசிய ஜனநாயகக் கூட்டணி
(தேசிய ஜனநாயக கூட்டணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
இந்தியக் குடியரசு |
---|
இந்திய அரசு வலைவாசல் |
தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance) இந்திய அரசியல் கட்சிகளின் கூட்டணி. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 13 அரசியல் கட்சிகள் இணைந்து 1998 ஆம் ஆண்டு அமைத்த கூட்டணியே தேசிய ஜனநாயக கூட்டணி ஆகும். இதன் ஒருங்கிணைப்பாளராக சரத் யாதவ் மற்றும் அதன் தலைவராக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயும் செயல்பட்டனர்.
வரலாறு[தொகு]
- தேசிய ஜனநாயக் கூட்டணி 1998 ல் அறிவிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி தலைமையில் கூட்டணி அரசாக அமைந்தது.
- ஆனால் தமிழகத்தில் இருந்து ஆதரவளித்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழுபறியால் இக்கூட்டணி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை அவர் விலக்கி கொள்ள 13 மாதங்களில் பாஜக ஆட்சியை இழந்தது.
- பின்பு இந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான எதிர்கட்சியான பாஜகவிற்கு எதிரான கொள்கை உடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அன்றைய தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதி அவர்கள் தனது கட்சியின் ஏகோபித்த ஆதரவை வழங்க 1999 நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக கட்சியின் பிரதமராக வாஜ்பாய் தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
- அதன் பின் 2004 நாடாளுமன்ற தேர்தலில் அதன் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையில் அமைத்த கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் ஆட்சியை இழந்தது.
- பின்பு 10 வருடங்கள் கழித்து 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தலைமையில் தொடர் வெற்றி பெற்று தொடர் ஆட்சி செய்து வருகிறார்.
- இந்திய விடுதலைக்குப்பின் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நிருபித்தது.