உள்ளடக்கத்துக்குச் செல்

கைலாசுபதி மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைலாசுபதி மிசுரா
Kailashpati Mishra
2016-ல் இந்திய அரசால் வெளியிடப்பட்ட கைஐலாசுபதி மிசுரா தபால் தலை
15வது [[குஜராத் ஆளுநர்]]
பதவியில்
7 மே 2003 – 12 சூலை 2004
முன்னையவர்சுந்தர் சிங் பண்டாரி
பின்னவர்பல்ராம் சாக்கர்
இராஜஸ்தான் ஆளுநர்
(கூடுதல் பொறுப்பு)
பதவியில்
22 செப்டம்பர் 2003 – 14 சனவரி 2004
முன்னையவர்நிர்மல் சந்திர ஜெயின்
பின்னவர்மதன் லால் குரானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-10-05)5 அக்டோபர் 1923
பக்சர் மாவட்டம், பீகார், இந்தியா
இறப்பு3 நவம்பர் 2012(2012-11-03) (அகவை 89)
பட்னா, பீகார், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் கல்லூரிகார்மல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி (பெங்களூர்)
தொழில்வழக்கறிஞர்

கைலாசுபதி மிசுரா (Kailashpati Mishra)(5 அக்டோபர் 1923 - 3 நவம்பர் 2012) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதீய ஜனசங்கத்தின் தலைவராகவும், பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தவர் ஆவார். இவர் 1977ல் பீகார் நிதி அமைச்சராகவும் மே 2003 முதல் சூலை 2004 வரை குசராத்து ஆளுநராகவும் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

கைலாசுபதி மிசுரா 1923ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பீகார் மாநிலம் பக்சரில் உள்ள துதர்சாக்கில் பூமிகார் குடும்பத்தில் பிறந்தார்.[1][2] 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்டார். இவர் 1943 முதல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். மேலும் மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகும் சிறையில் அடைக்கப்பட்டார். பத்தாம் வகுப்பில் படிக்கும் போது, மிசுரா 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு ஆதரவாக பக்சரில் உள்ள தனது பள்ளியின் பிரதான வாயிலில் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டார்.[3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

கைலாசுபதி மிசுரா 1971 மக்களவைத் தேர்தலில் ஜனசங்கத்தின் சார்பில் பட்னாவில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இவர் 1977-ல் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிக்ரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் கர்ப்பூரி தாக்கூரின் ஜனதா கட்சி அரசாங்கத்தில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டில், கட்சி நிறுவப்பட்டபோது இவர் முதல் பாஜக பீகார் தலைவராக ஆனார்.[3] 1995 முதல் 2003 வரை பாஜக தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

ஆளுநர் பணி

[தொகு]

கைலாசபதி மிசுரா 2003-ல் குசராத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் அப்போதைய ஆளுநராக இருந்த நிர்மல் சந்திர ஜெயின் காலமானதைத் தொடர்ந்து சிறிது காலம் இராஜஸ்தானின் ஆளுநராகத் தற்காலிகமாகப் பணி வகித்தார்.[4] 2004 தேர்தலில் பாஜக அரசின் தோல்விக்குப் பிறகு, காங்கிரசு அரசால் ஆளுநர் பதவியிலிருந்து மிசுரா நீக்கப்பட்டார்.[5]

பீகாரில் பாரதிய ஜனதா கட்சியின் பீஷ்ம பிதாமஹா என்று அழைக்கப்படும் மிசுரா, முதுமையின் காரணமாகத் தனது வாழ்நாளின் கடைசி இரண்டு ஆண்டுகளாக நேரடி அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருந்தார். ஆனால் கட்சிக்கு உத்வேகமாக இருந்தார்.[2][6] 1974ஆம் ஆண்டு ஜேபியின் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதன் காரணமாக இவர் சமூகவாதிகளால் விரும்பப்பட்டார்.[6]

பிறப்பும் இறப்பும்

[தொகு]

1923ஆம் ஆண்டு பீகாரில் உள்ள பக்சரில் பிறந்த மிசுரா வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார்.[6]

2012ஆம் ஆண்டு தனது 89வது வயதில் இவர் இறந்தபோது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை மற்றும் மூத்த பீகார் பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி ஆகியோர் இவரது இல்லத்துக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.[3] இந்திய அரசாங்கம் 2016ஆம் ஆண்டு இவரது நினைவாகத் தபால் தலையை வெளியிட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Abhay Singh (6 July 2004). "BJP, Cong eye Bhumihars as Rabri drops ministers". The Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/767453.cms. 
  2. 2.0 2.1 "Bhishmapitamah of Bihar BJP Kailashpati Mishra dies at 86". Bihar Times. 3 November 2012. http://www.bihartimes.in/Newsbihar/2012/Nov/newsbihar03Nov7.html. 
  3. 3.0 3.1 3.2 Press Trust of India (3 November 2012). "BJP leader Kailashpati Mishra passes away". The Hindu. http://www.thehindu.com/news/states/other-states/bjp-leader-kailashpati-mishra-passes-away/article4062067.ece. 
  4. Raj Bhavan
  5. "Narendra Modi-led NDA govt mulls over what UPA did in 2004 – removing Governors!". 17 June 2014.
  6. 6.0 6.1 6.2 "BJP veteran Kailashpati Mishra, 89, dies". Deccan Chronicle. 4 November 2012. http://www.deccanchronicle.com/channels/nation/north/bjp-veteran-kailashpati-mishra-89-dies-482. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசுபதி_மிசுரா&oldid=3785067" இலிருந்து மீள்விக்கப்பட்டது