சுந்தர் சிங் பண்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தர் சிங் பண்டாரி
17ஆவது பீகார் ஆளுநர்
பதவியில்
27 ஏப்ரல் 1998 – 15 மார்ச்சு 1999
முன்னையவர்ஏ. ஆர். கிட்வாய்
பின்னவர்வி. ச. பாண்டே
14ஆவதுh குசராத் ஆளுநர்
பதவியில்
18 மார்ச்சு 1999 – 7 மே 2003
முன்னையவர்கொ. கோ. பாலகிருஷ்ணன்
பின்னவர்கைலாசுபதி மிசுரா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1992 - 1998
தொகுதிஉத்தரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 ஏப்ரல் 1921
உதயப்பூர்
இறப்பு22 சூன் 2005
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் கல்லூரிதயானந்த் ஆங்கிலோ-வேதிக் கல்லூரி

சுந்தர் சிங் பண்டாரி (Sunder Singh Bhandari) (12 ஏப்ரல் 1921 - சூன் 2005) ஒரு இந்திய அரசியல்வாதியும், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க பிரச்சாரகரும் பாரதிய ஜனசங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார்.[1]

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

1921 ஆம் ஆண்டில் உதய்பூரில் டாக்டர் சுஜான் சிங்ஜி பண்டாரி மற்றும் ஃபுல்கன்வர்பாய்ஜி ஆகியோருக்குப் பிறந்த இவர், சிரோஹி மற்றும் உதய்பூரில் பள்ளிக் கல்வியையும், கான்பூரில் கல்லூரிக் கல்வியையும் பெற்றார். 1941 ஆம் ஆண்டில் கான்பூரில் உள்ள எஸ். டி. கல்லூரியில் சட்டத்தில் பட்டப்படிப்பையும் 1942 ஆம் ஆண்டில் கான்பூரில் உள்ள தயானந்த் ஆங்கிலோ-வேத கல்லூரியில் கலைப்பிரிவில் உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[2]

தொழில் வாழ்க்கை[தொகு]

இராட்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் சேருவதற்கு முன்பு மேவார் உயர்நீதிமன்றத்தில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இந்த அமைப்பில் பல பொறுப்புகளை வகித்தார். 1951-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசியல் கட்சியான ஜனசங்கத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தார்.

ஜனசங்கத்திலும் பின்னர் பாரதிய ஜனதா கட்சியிலும் பல்வேறு நிறுவனப் பதவிகளில் பணியாற்றினார். இவர் ஆளுநராக வருவதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். இவர் மாநிலங்களவைக்கு 1966 ஆம் ஆண்டில் இராசத்தானில் இருந்தும், 1976 மற்றும்1992 ஆம் ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்திலிருந்தும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1976 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி இந்தியாவில் உள்நாட்டு அவசரநிலையை அறிவித்தபோது இவர் தில்லி தொடருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

1998 ஏப்ரல் 27 அன்று பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர் 1999 மார்ச் 15 வரை பணியாற்றினார். 18 மார்ச் 1999 முதல் 6 மே 2003 வரை குஜராத்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.[3] இவர் 22 சூன் 2005 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ramaseshan, Radhika (7 October 2009). "Last leg of pracharak era". http://www.telegraphindia.com/1091007/jsp/nation/story_11585585.jsp. 
  2. Nation pays tribute to Bhandariji
  3. "Gujarat Governor Sundar Singh Bhandari to monitor Keshubhai Patel leadership". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தர்_சிங்_பண்டாரி&oldid=3933850" இலிருந்து மீள்விக்கப்பட்டது