திருவண்வண்டூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருவண்வண்டூர் மகாவிஷ்ணு திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்): திருவண்வண்டூர்
பெயர்: திருவண்வண்டூர் மகாவிஷ்ணு திருக்கோயில்
அமைவிடம்
ஊர்: திருவண்வண்டூர்
மாவட்டம்: ஆலப்புழா
மாநிலம்: கேரளம்
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: பாம்பணையப்பன் (திருமால்)
உற்சவர்: கோசாலா கிருஷ்ணா (திருமால்)
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்: நம்மாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்: உண்டு

திருவண்வண்டூர் (Thiruvanvandoor Mahavishnu Temple) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. திருவமுண்டூர் என்றும் வண்வண்டூர் என்றும் அழைக்கப்படுகிறது.[2]

இறைவன், இறைவி[தொகு]

இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பாம்பனையப்பன், கமலநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவி கமலவல்லி நாச்சியார். தீர்த்தம் பம்பை தீர்த்தம். விமானம் வேதாலய விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.

சிறப்புக்கள்[தொகு]

மகாபாரதத்தின் படி பஞ்ச பாண்டவர்கள் கேரள தேசத்திற்கு வந்தபோது மிகவும் சிதலமடைந்திருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்து சீர்படுத்தியதால் நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதியில் வழங்கப்படுகிறது. இத்தலம் வட்டவடிவான கருவறை அமைப்புடன் காணப்படுகிறது. நம்மாழ்வார் 10 பாசுரங்களில் இத்தலத்தினைப் பாடியுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu. M. S. Ramesh, Tirumalai-Tirupati Devasthanam.
  2. 2.0 2.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவண்வண்டூர்&oldid=2152068" இருந்து மீள்விக்கப்பட்டது