முத்துப்புள்ளி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்துப்புள்ளி மீன்

முத்துப்புள்ளி மீன் என்பது எட்ரோபிளஸ் சுரட்டன்சிஸ் என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு மீன் வகை ஆகும். இது தென்னிந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் உவர்நீர் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் கழிமுக நீர், நன்னீர் குளங்களிலும் காணப்படுகிறது. இது தமிழில் சேத்துக் கெண்டை என்று அழைக்கப்படுகிறது. மலையாளத்தில் கறிமீன் என்று அழைக்கப்படும் இது கேரளாவின் மாநில மீனாக உள்ளது.

உடல் அமைப்பு[தொகு]

முத்துப்புள்ளி மீனின் உடலானது பக்கங்களிய் அழுத்தப்பட்டுப் பருமனாக இருக்கும். இதன் செதில்கள் கரும்பச்சை வண்ணம் உடையவை. உடலில் முத்துக்கள் போன்ற வெண்புள்ளிகள் காணப்படும். மங்கிய தெளிவில்லாத செங்குத்துக் கற்றைகள் காணப்படும்.

உணவு[தொகு]

இம்மீன் தாவர உண்ணி ஆகும். இழை உடைய பசிகள், நீர்த்தாவரங்கள், தாவர மிதவை உயிரிகள் போன்றவற்றை உண்ணும். ஆனால் இதன் இளம் உயிரி விலங்கு மிதவை உயிரிகளை மட்டுமே உணவாக உண்ணும்.

இனப்பெருக்கம்[தொகு]

இவ்வகை மீன் நன்னீரிலும் வளர்க்கப்படுகிறது. நன்னீர் மற்றும் உவர்நீர் வளத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. இனப்பெருக்கம் ஆண்டு முழுவதும் நடைபெறும் என்றாலும் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலம் இனப்பெருக்கத்தின் உச்சகட்டக் காலமாகும். வளர்ச்சியின்போது 9லிருந்து 10 செ.மீ. நீளம் வளர்ச்சியைப் பெறும் நிலையில் பால் முதிர்ச்சி அடைகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ரெங்கராஜன், இரா.(2008), மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு, சாரதா பதிப்பகம், சென்னை, ப. 99, 100.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துப்புள்ளி_மீன்&oldid=2755828" இருந்து மீள்விக்கப்பட்டது