சோழிய வெள்ளாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோழிய வெள்ளாளர் / சோழிய வேளாளர்
Ki.aa.pe.viswanatham-pillai.gif
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு,
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து

சோழியன் அல்லது சோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வெள்ளாளர் (Chozhia Vellalar) இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது வெள்ளாளர் (பிள்ளைமார்) சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும். சோழிய வெள்ளாளர், சோழிய வேளாளர், சோழ நாட்டு வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர்.[1]

தோற்றம்[தொகு]

சோழிய வெள்ளாளர் எனும் பிரிவானது வெள்ளாளர் (பிள்ளைமார்) சமூகத்தின் கீழ் வரும் சாதியாகும். இவர்கள் பொதுவாக சோழ நாட்டின் உழுகுடிகளாக இருந்துள்ளார்கள்.[2] சோழிய வெள்ளாளருள் கருப்புடையான், மருதூருடையான் போன்ற 64 கோத்திரங்கள் இருப்பதாக சோழ மண்டல சதகம் சொல்கின்றது.

புலம்பெயர்வு[தொகு]

தொடக்க காலத்தில் சோழிய வெள்ளாளர்கள் தமிழ்நாட்டின், கிழக்கு மாவட்டங்களில் இருந்தார்கள்.[3] தற்பொழுது இவர்கள் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ளார்கள். இவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலோ திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து, தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.

குலப்பட்டம்[தொகு]

பிள்ளை என்ற குலப்பட்டத்தினை தங்கள் பெயர்களுக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள்.

சோழிய வெள்ளாளர் இல்லத்துப் பிள்ளைமார்[தொகு]

சோழிய வேளாளர்கள் இல்லத்துப் பிள்ளைமார்களுடன் தொடர்புடையவர்கள் என்பது கருத்து. மேலும் ஈழவர், பணிக்கர் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்கள். ஏனெனில் இல்லத்துப் பிள்ளைமார் சாதியினர் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமில்லாதவர்கள். ஆனால் சோழிய வேளாளர் சாதியினர் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள். ஒரு வேளை, சோழிய வேளாளர் சாதியினர் இல்லத்துப் பிள்ளைமார் சாதியினராக இருந்து, அக்காள் மகளை திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்திற்கு மாறிக் கொண்ட ஒரு குழுவினராக இருக்கலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது.[சான்று தேவை]

தீண்டாமை[தொகு]

இந்த 3 மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர் இனத்தை சேர்ந்த ஆண்கள் யாரேனும் பிற ஊர்களில் உள்ள அதே ஜாதியை சேர்ந்த பெண்களை திருமணம் செய்யும் பட்சத்தில் , ஊர் கொத்துக்காரர்கள் என்ற பெயரில் பரம்பரை பரம்பரையாக தாங்களே இந்த இனத்தின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சம்பந்தப்பட்ட ஆண்களின் குடும்பத்தை அபராதம் கட்ட சொல்லியும், ஊர் மந்தையில் மேலாடை இன்றி ஊர் மக்களின் காலில் விழச்செய்வதும் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. இதற்கு அடிபணியாத குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து மனதளவில் துன்புறுத்தும் கொடுமையும் நடைபெற்று வருகிறது. இந்த கொடுமை ஊர் மக்களின் ஆதரவுடன் நடைபெறுகிறது என்பது தான் வேதனைக்குரிய ஒன்று.

முக்கிய சோழிய வெள்ளாளர்[தொகு]

 • கி. ஆ. பெ. விஸ்வநாதம் பிள்ளை - மருத்துவர், தமிழ்ப்பற்றாளர்.
 • முத்து இருளப்ப பிள்ளை - விஜயரகுநாத முத்துராமலிங்க சேதுபதி அமைச்சர்.
 • மாவீரர் சி. செண்பகராமன் பிள்ளை - இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி.
 • மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை - செந்தமிழ்க் களஞ்சியம் "இலக்கணத் தாத்தா" வித்துவான்
 • சொ. மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர்
 • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை - மக்கள் கவி
 • சிவசங்கர நாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) - கணித மேதை
 • ப. ஜீவானந்தம் - பொதுவுடமைத் தலைவர் 1952 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
 • நவநீதம் பிள்ளை - பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்
 • எல். டி. சுவாமிகண்ணு பிள்ளை - இந்திய வானியலாளர், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் சபாநாயகர்
 • நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம்  பிள்ளை
 • டாக்டர் வி. ஜெயபால் - மருத்துவர் தமிழ்நாட்டு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர்
 • கனகராஜ் சிதம்பரம் பிள்ளை - உலக புகழ் மிக்க விருந்தோம்பல் நிபுணர்
 • A. பெருமாள் பிள்ளை, இந்திய தேசிய காங்கிரஸ், ஓமலூர், சேலம், தமிழ்நாடு
 • T.கலியமூர்த்தி பிள்ளை - திருவாரூர்
 • முனைவர். ம. எழில் பரமகுரு (கல்வியாளர், மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ் பேராசிரியர்)

தொடர்புடைய இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழிய_வெள்ளாளர்&oldid=2789386" இருந்து மீள்விக்கப்பட்டது