இசை வேளாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேளக்காரர்
Veena Dhanammal 1.jpg Moovalur ramamirtham.jpg Bangalore Nagarathnamma.jpg Karunanidhi.jpg
மொத்த மக்கள்தொகை
(58,327 (2009) [1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
Om symbol.svg இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடர்

இசை வேளாளர் என்பது தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதியைக் குறிக்கும். இந்த சாதியினர் மேளக்காரர் என்ற பெயரிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை அழைக்கப்பட்டனர். சின்ன மேளம், பெரிய மேளம் மற்றும் நட்டுவாங்கம் என்பவை இச்சாதியின் உட்பிரிவுகளாகும். இசை வேளாளர் தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகப்பட்டியலில் உள்ளது.[2]

பெயர் மாற்றமும் பெயரியலும்[தொகு]

1930களில் தேவதாசிகள் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களை இசை வேளாளர்கள் என பெயர் மாற்றிக்கொண்டனர்.[3][4] தங்களை இசையை குலத்தொழிலாகக் கொண்டதினால் இவர்களுக்கு இசை வேளாளர்கள் என்ற பெயர் வந்தது. இவர்களுள் பெரும்பாலானவர்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இசையின் வாய்ப்பாட்டு, நரம்புக்கருவி, தோல்கருவி, நடனம் எனப் பல துறைகளில் பல இசை வேளாளர்கள் பெயர் பெற்றுள்ளனர்.

வரலாறு[தொகு]

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் ஆகியோரின் முயற்சிகளால் மேளக்காரர் சமூகத்தினரிடையேயிருந்த தேவதாசி முறை ஒழிப்பிற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் துவங்கின. நாட்டின் கலையையும் பண்பாட்டையும் காப்பதற்கு ஒரே வழி தேவதாசி முறையைத் தக்க வைத்திருப்பதே என்ற கருத்திற்கு மறுமொழியாக

இத்தனை காலம் எங்கள் வீட்டுப்பெண்கள் கலையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றியது போதும்; இனி கொஞ்ச காலத்திற்கு உங்கள் வீட்டு பெண்களை தேவதாசிகளாக்குங்கள்

என்று முத்துலட்சுமியை சட்டமன்றத்தில் பேசவைத்தவர் மூவலூர் ராமாமிர்தம்.

இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாதஸ்வரம், தவில் வாசிக்கும் கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது என்றிருந்த சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையைப் பெற்றுத்தந்தார்.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

வரலாற்று காலத்தவர்கள்[தொகு]

அரசியல்வாதிகள்[தொகு]

வர்த்தகத் துறை[தொகு]

சமூக ஆர்வலர்கள்[தொகு]

திரைப்படத்துறை[தொகு]

வாய்ப்பாட்டு[தொகு]

 • பெங்களூர் நாகரத்தினம்மா
 • மதுரை சோமு
 • குழிக்கரை விஷ்வலிங்கம் பிள்ளை
 • தஞ்சாவூர் முக்தா
 • தஞ்சாவூர் பிருந்தா
 • தஞ்சாவூர் ரங்கநாதன்
 • தஞ்சாவூர் விஸ்வநாதன்
 • டி. கே. சுவாமிநாதபிள்ளை
 • சீர்காழி ராமசிமிபிள்ளை
 • பந்தநல்லூர் சுப்பரமனிய பிள்ளை
 • வி. எஸ். முத்துசாமி பிள்ளை
 • கே. கல்யாணசுந்தரம் பிள்ளை

நாதசுர வித்துவான்கள்[தொகு]

தாள வாத்தியம்[தொகு]

தவில் வித்துவான்கள்[தொகு]

நட்டுவனார்கள்[தொகு]

நடனக் கலைஞர்கள்[தொகு]

 • திருவாபுத்தூர் கல்யாணி அம்மாள்
 • மதுரை சண்முகவடிவு
 • பாலசரஸ்வதி

இசை வேளாளரை மூதாதையராகக் கொண்டோர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009 விகடன்
 2. "தமிழக அரசு வெளியிட்டுள்ள சமூகங்கள் பட்டியல்". தமிழக அரசு. பார்த்த நாள் 14 திசம்பர் 2015.
 3. Andrew Wyatt, John Zavos (2004). Decentring the Indian Nation. South Asian Studies. பக். 115. https://books.google.co.in/books?id=0L6RAgAAQBAJ&pg=PA115&dq=1930+isai+vellala&hl=en&sa=X&ved=0ahUKEwjw8Pu1_OLTAhWDvo8KHaHeCToQ6AEIJzAB#v=onepage&q=1930%20isai%20vellala&f=false. 
 4. Singh KS (1998). India's communities. Oxford University Press. பக். 1317. https://books.google.co.in/books?id=1lZuAAAAMAAJ&q=isai+vellala+cultivate+music&dq=isai+vellala+cultivate+music&hl=en&sa=X&ved=0ahUKEwjXz6_q_uLTAhXJo48KHclCBK0Q6AEIPDAF. 
 5. http://sembanarkovilbrothers.com
 6. பாரதிதாசன் (9 1958). "அண்ணாதுரை". குயில் 1 (18). doi:29 சூன் 2015. 
 7. www.jstor.org
 8. Tamil revivalism in the 1930s by Eugene F. Irschick
 9. http://books.google.com/books?id=vlrDPlJNo-cC&pg=PA174&dq=Muthulakshmi+reddy&lr=#v=onepage&q=&f=false
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசை_வேளாளர்&oldid=2638923" இருந்து மீள்விக்கப்பட்டது