ஒரு குழந்தைக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு குழந்தைக் கொள்கை
பூங்கா ஒன்றில் சீன தம்பதிகள் தங்களின் ஒரு குழந்தையோடு.
சீன மொழி 独生子女政策

ஒரு-குழந்தை கொள்கை (One-child policy) என்பது குடும்பக் கட்டுப்பாடு கொள்கையின் ஒரு அங்கமாகும். சீனாவில் மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாக இத்திட்டம் 1979 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையின்படி ஒரு குடும்பத்தினருக்கு ஒரேயொரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. சில சமூகக் குழுக்களுக்கும் இன சிறுபான்மையினருக்கும் இக்கொள்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 2007 ஆம் ஆண்டில், 36% சீன மக்கள் இக்கட்டுப்பாடுகளின் கீழ் இருந்தனர். மீதமுள்ள மக்கள், முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் மட்டும் இரண்டாவதாக மேலும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தனர். கட்டுப்பாடுகளை மீறும் பெற்றோர்களுக்கு மாகாண அரசாங்கங்களால் மீறல்களுக்கான அபராதம் விதிக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் தேசிய அரசாங்கங்கள் இக்கொள்கைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆணையங்களை உருவாக்கி ஆய்வுகளை மேற்கொண்டன. 

சீனப் பொதுவுடமைக் கட்சியின் புள்ளிவிவரங்கள், 400 மில்லியன் பிறப்புகள் இக்கொள்கையால் தடுத்துநிறுத்தப்பட்டதாகக் கூறுகின்றன. ஆனாலும் இது தவறான தகவல் எனச் சில அறிஞர்கள் மறுக்கின்றனர்.  [1] தாய்லாந்து மற்றும் ஈரான் மற்றும் இந்திய மாநிலங்களில் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒரு-குழந்தை கொள்கை நடைமுறையில் இல்லாமலே இது போன்ற பிறப்பு வீதக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஒரு-குழந்தை கொள்கைக்கு 76% சீன மக்கள் ஆதரவு தெரிவித்தாலும் [2]  சீனாவுக்கு வெளியே இக்கொள்கை சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

சீனாவின் மக்கள் தொகை  
ஆண்டு மில்லியன் மாற்றம் மாற்ற / ஆண்டு
1964 694.6 ------- -------
1982 1008.2 313.6 + 17.42
2000 1265.8 257.6 + 14.31
2010 1339.7 73.9 + 7.39
ஆதாரம்: சீனா மக்கள் தொகை கணக்கெடுப்பு
சீனாவின் மக்கள் தொகை (1961-2008)

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Challenging Myths about China's One-Child Policy" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-06-06.
  2. "The Chinese Celebrate Their Roaring Economy, As They Struggle With Its Costs". பார்க்கப்பட்ட நாள் 9 December 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_குழந்தைக்_கொள்கை&oldid=3655846" இலிருந்து மீள்விக்கப்பட்டது