கருக்கலைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தூண்டப்பட்ட கருக்கலைப்பு
Medievalpreg.jpg
A woman receiving Pennyroyal, a common Medieval abortifacient. From Herbarium by Pseudo-Apuleius. 13th-century manuscript.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு obstetrics
ICD-10 O04.
ICD-9-CM 779.6
நோய்களின் தரவுத்தளம் 4153
MedlinePlus 002912
ஈமெடிசின் article/252560
Patient UK கருக்கலைப்பு

கருக்கலைப்பு (Abortion) என்பது முளையத்தை (embryo) அல்லது முதிர்கருவைக் (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்பு என்பது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படுவது. சில சமயங்களில் தானாகவே முளையம் அல்லது முதிர்கரு கருப்பையின் உள்ளே இருக்கும்போது அழிந்துவிடுகின்றது. அவ்வாறு நிகழுமாயின், அது பொதுவாகக் கருச்சிதைவு (Miscarriage) அல்லது தானாக நிகழும் கருக்கலைப்பு (Spontaneous Abortion) எனப்படும்.

ஏதேனும் ஒரு மருத்துவக்காரணம் கருதி (தாயின் நலம் கருதி) உண்டாக்கப்படும் கருக்கலைப்பு சிகிச்சைக் கருக்கலைப்பு எனப்படும். பிற காரணங்களுக்காக செய்யப்படும் கருக்கலைப்பு தேர்வுக் கருக்கலைப்பு எனப்படும். பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடவோ, அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்துவதற்காகவோ கருக்கலைப்பு செய்யப்படுகிறது. வேலையில் ஏற்படும் குழப்பங்கள், படிப்பில் ஏற்படக் கூடிய இடைஞ்சல்கள், நிரந்தரமற்ற பொருளாதார நிலை, உறவுகளில் உறுதியற்ற தன்மை போன்றனவே பொதுவாக இவ்வகையான தூண்டப்படும் கருக்கலைப்புக்கு காரணமாகின்றன[1][2]. ஒரு பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோது கர்ப்பம் தரித்திருந்தாலும், இவ்வாறான கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

வரலாறு[தொகு]

கருக்கலைப்பு என்பது நீண்ட வரலாற்றை உடையது. முற்காலத்தில் பலவகையான முறைகள் மூலம் கருக்கலைப்புச் செய்து வந்தனர். கருக்கலைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தல், கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தல், உடற்காயங்களை உண்டாக்குதல், மற்றும் பல மரபு சார்ந்த முறைகள் என்பன இவற்றுள் அடங்கும். தற்கால மருத்துவத்தில், மருந்துகள் கொடுப்பதினாலும், அறுவைச் சிகிச்சை மூலமும் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களும், பண்பாட்டு நோக்குகளும் உலகம் முழுவதிலும் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. கருக்கலைப்புக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையிலான விவாதங்கள் உலகம் முழுதும் நடைபெறுகின்றன. கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் கருவோ, முளையமோ, முதிர்கருவோ மனித உயிருக்குச் சமமானது என்றும், அதனை அழிப்பது கொலைக்குச் சமமானது என்றும் வாதிடுகின்றனர். கருவை வளரவிடுவதும், அழிப்பதும் அதனைச் சுமக்கும் பெண்ணின் உரிமை என்கின்றனர் கருக்கலைப்பு ஆதரவாளர்கள்.

தற்காலத்தில் வளர்ந்த நாடுகளில், பொதுவாக ஒவ்வொரு நாட்டினதும் சட்ட நடைமுறைக்கு உட்பட்டு, மருத்துவத்தில் பாதுகாப்பான முறைகளைக் கையாண்டே கருக்கலைப்பு செய்யப்படுகின்றது[3]. ஆனாலும், உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர்[4]. உலக அளவில், ஆண்டு ஒன்றுக்கு நிகழும் சுமார் 4.4 கோடி கருக்கலைப்புகளில், கிட்டத்தட்ட அரைவாசி பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களாகவே இருக்கின்றன[5].

மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை பற்றிய அறிவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்ததன் விளைவாக[6], அண்மைய ஆண்டுகளில் கருக்கலைப்பு நிகழ்வானது ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அறியப்படுகின்றது[5].

கருக்கலைப்பின் வகைகள்[தொகு]

தான்தோன்று கருக்கலைப்பு[தொகு]

முதன்மை கட்டுரை: கருச்சிதைவு

கர்ப்ப காலத்தின் முதல் 20 வாரங்களுக்குள் (இந்த கால வரையறை நாட்டிற்கு நாடு வேறுபடக்கூடியது)[7] தானாகவே கருவோ அல்லது முளையமோ அல்லது முதிர்கருவோ கருப்பையிலிருந்து வெளியேற்றப்படுவது தான்தோன்றிக் கருச்சிதைவு எனப்படும்.

 • காரணங்கள்:
 1. தாய்க்கு திடீர் எதிர்பாரா அடி
 2. கருவணுவின் நிறப்புரியில் (நிறமூர்த்தங்களில்) ஏற்படும் கோளாறுகள்
 3. சூழலிய காரணிகள்
 4. மதுமேக நீரிழிவு நோய்
 5. வளரூக்கியில் ஏற்படும் கோளாறுகள்
 6. கருப்பை அமைப்புக் கோளாறுகள்
 7. தொற்றுநோய்கள்
 8. இரத்தக்குழல்மய நோய்கள் (எ.கா. மண்டலிய செங்கரடு)

37 வாரங்களுக்கு முன்னர் பிறக்கும் குழந்தைகள் முற்றாக்குழந்தை அல்லது குறைபிரசவக் குழந்தை எனப்படும். 22 வாரங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையினுள் இறக்கும் குழந்தை மற்றும் பிறவியின் பொழுது இறந்த குழந்தை செத்தபிறவி எனப்படும். 61.9% தான்தோன்றி கருச்சிதைவு 12 வாரங்களுக்கு முன்னர் நடப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் 91.7% தான்தோன்றி கருச்சிதைவுகள் கர்ப்பிணித்தாய் அறியாமலேயே நிகழ்கின்றன.[8] இவை தாழ் புலன்மருத்துவ கருச்சிதைவுகள் எனப்படும்.

தூண்டற் கருச்சிதைவு[தொகு]

கருச்சிதைவினை பல வகையில் தூண்ட முடியும். கர்ப்ப காலத்தைப் பொறுத்தும், கருவின் அளவைப் பொறுத்தும், அந்தந்த நாட்டுச் சட்டங்கள் மற்றும் தனிநபர் விருப்பம் பொறுத்தும் சரியான முறை தேர்வு செய்யப்படும்.

சிகிச்சைக்கருக்கலைப்பு எனப்படுவது,[9]

 1. கர்பிணிப்பெண்ணின் உயிர்காக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படுவது.
 2. கர்பிணிப்பெண்ணின் உடல் மற்றும் மன நலம் கருதி மேற்கொள்ளப்படுவது.
 3. உயிர்கொல்லும் மற்றும் முடங்கச்செய்யும் பிறவி நோய்களுடன் பிறக்கப்போகும் குழந்தைகளைத் தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படுவது.
 4. பல்பிறவிச்சூழில் தாயின் நலன் கருதி குறிப்பிட்ட முதிர்கருவைச் சிதைக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படுவது.

கருக்கலைப்பு முறைகள்[தொகு]

பல்வேறு கருக்கலைப்பு முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன[10]. சட்டபூர்வமற்ற முறையில் அல்லது பாதுகாப்பற்ற முறைகளில் செய்யப்படும் கருக்கலைப்புக்கள் பாதகமான முறையில் அமைவதுமுண்டு[11][12][13]

மருத்துவ முறைகள்[தொகு]

கருவைக் கலைக்கக்கூடிய சில மருத்துவக் குணங்கொண்ட பதார்த்தங்களைப் பயன்படுத்தி கருக்கலைப்புச் செய்தலைக் குறிக்கும். மருந்துகள் பயன்படுத்திச் செய்யப்படும் கருக்கலைப்பு வெற்றியளிக்காவிட்டால், அறுவைச் சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டு நிறைவு செய்யப்படும்[14].

கருத்தரிப்பின் ஆரம்ப காலத்திலோ அல்லது நடுப்பகுதியிலோ இந்தக் கருக்கலைப்பு செய்யப்படும். ஆரம்ப நிலையில் செய்யப்படும் கருக்கலைப்பு பொதுவாக ஆபத்தில்லாததாக இருக்கும். ஆனால் கருத்தரிப்புக் காலத்தின் பிந்திய நிலையில் செய்யப்படும் கருக்கலைப்பு சிக்கல்களை ஏற்படுத்தலாம்[15].

கனடா, அனேகமான ஐரோப்பிய நாடுகள், சீனா, இந்தியா போன்ற நாடுகளில், கருத்தரிப்புக் காலத்தின் நடுப்பகுதியில் செய்யப்படும் கருக்கலைப்பு பொதுவாக இந்த மருத்துவ முறையாகவே உள்ளது[16]. ஆனால் அமெரிக்காவில், இந்த நடுப்பகுதியில் செய்யப்படும் கருக்கலைப்பில் 96% அறுவைச் சிகிச்சை முறையாலானதான் இருக்கிறது[17].

பிரித்தானியா[18][19], பிரான்சு[20], சுவிட்சர்லாந்து[21], மற்றும் நோர்டிக் நாடுகளில்[22] கருத்தரிப்புக் காலத்தின் 9 கிழமைகளுக்குள்ளாக, அதாவது ஆரம்ப நிலையில் செய்யப்படும் கருக்கலைப்பே அதிக அளவில் நடைபெறுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஆரம்ப நிலையில் செய்யப்படும் கருக்கலைப்பு மிகக் குறைவாகவே உள்ளது[23][24]

அறுவைச் சிகிச்சை முறைகள்[தொகு]

8 கிழமை கருக்காலத்தில் வெற்றிட உறிஞ்சி மூலம் கருக்கலைப்பு.
1: பனிக்குடப்பை
2: முளையம்
3: கருப்பை அகவுறை
4: பரிசோதனை உபகரணம்
5: சுரண்டும் கருவி
6: உறிஞ்சும் pump

பொதுவாக கருத்தரித்து 12 கிழமைக்குள்ளாக, உறிஞ்சுதல் முறையிலான கருக்கலைப்பே அறுவைச் சிகிச்சை மூலம் செய்யப்படுகிறது[25]. மின்சாரக் கருவிகள் மூலமாகவோ, அல்லது மின்சாரப் பாவனையற்ற உபகரணங்களாலோ இவ்வாறான உறிஞ்சல் முறையில் முளையம் அல்லது முதிர்கரு, தொப்புள்கொடி என்பன அகற்றப்படுகிறது.

முளைய விருத்தியின் நிலையைப் பொறுத்து இதனைச் செய்யும் முறையில் வேறுபாடு காணப்படும். கருத்தரிப்பின் மிகவும் ஆரம்ப நிலையாயின் கருப்பை வாய்ப்பகுதியை விரிவாக்கம் செய்யாமலே எளிய உறிஞ்சல் முறையால் கருக்கலைப்பு செய்ய முடியும். பிந்திய நிலையாயின் கருப்பை வாய்ப் பகுதியின் விரிவாக்கம் அவசியமாகிறது. இரண்டாவது பொதுவான நடைமுறையிலுள்ள அறுவை சிகிச்சை முறையானது விரிவாக்கமும், சுரண்டி வழித்தெடுத்தலும் (D&C - Dilation and Curettage) ஆகும். இந்த முறை பல்வேறு காரணங்களை முன்னிட்டு செய்யப்படும் கருக்கலைப்பு முறையாகும். இது புற்றுநோய் போன்ற நோய்கள் இருக்கின்றனவா என்று சோதிக்கவும், அசாதாரண குருதிப்போக்கு போன்றவற்றிற்கான காரணங்களைச் சோதனை செய்து அறியவும், கருக்கலைப்பில் அல்லது தன்னிச்சையான கருச்சிதைவுக்குப் பின்னர் கருப்பையின் உட்சுவரை சுரண்டி வழித்துச் சுத்தம் செய்யவும் பயன்படுகின்றது. சுரண்டி வழித்தெடுப்பதற்கு curette எனப்படும் ஒரு உபகரணம் பயன்படுத்தப்படுகின்றது. இலகுவான உறிஞ்சல் முறைகளால் கருக்கலைப்பு செய்ய முடியாத நிலையிலேயே இம்முறையை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது[26].

முதிர்கரு வளர்ச்சி 15 கிழமைகளைத் தாண்டி செல்லுமாயின் 26 கிழமைகள் வரை பொதுவாகக் கருக்கலைப்பு செய்யப்படும் முறை விரிவாக்கமும், வெளியேற்றலும் (D&E - Dilation and Evacuation) என அழைக்கப்படுகிறது. அந்நிலையில் கருப்பை வாய்ப்பகுதி விரிக்கப்பட்டும், கருப்பையினுள் இருக்கும் உள்ளடக்கங்கள் யாவும் சில அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் மூலமும், உறிஞ்சல் கருவிகள் மூலமும் அகற்றப்பட்டு, கருப்பை வெறுமையாக்கப்படுகிறது. Prostaglandin என்னும் பதார்த்தம் கொண்டு குறைப்பிரசவம் தூண்டப்படுவதுடன், உப்புக் கரைசல் (Saline), யூரியா போன்றவற்றைக் கொண்ட செறிவு கூடிய, உயரழுத்தமுள்ள (Hypertonic solution) கரைசலில் பனிக்குட நீர் சேர்க்கப்பட்டு உட்செலுத்தப்படும்.

கருத்தரிப்பின் 16 கிழமைக்குப் பின்னராயின், முழுமையான விரிவாக்கமும் பிரித்தெடுத்தலும் (IDX - intact dilation and extraction) என்ற ஒரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு முதிர்கருவின் தலை அமுக்க நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்படும். இம்முறை சில இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. கருத்தரிப்பின் இறுதி மூன்று மாதங்களாயின், குறிப்பிட்ட இந்த முறை மூலமோ, தூண்டப்படும் பிரசவம் மூலமோ அல்லது Hysterotomy மூலமோ கருக்கலைப்பு செய்யப்படும். இவ்வகைக் கருக்கலைப்பில், பொது உணர்வகற்றல் (general anesthesia) வழங்கப்படுகின்றது. இது அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்புக்கு ஒப்பானது.

முதல் மூன்று மாதங்களில் மேற்கொள்ளும் முறைகள் உறுப்பிட உணர்வகற்றல் (local anesthesia) பயன்படுத்தியும், அதன் பின்னரான கருக்கலைப்பாயின் பொது உணர்வகற்றல் மூலமும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்[24].

குழந்தைப் பிறப்பைத் தூண்டல்[தொகு]

குழந்தைப் பிறப்பைத் தூண்டுவதன் மூலம், மேலும் தேவை ஏற்படின், முதிர்கருவை வெளியேற்றல் மூலம் கருக்கலைப்பை ஏற்படுத்தலைக் குறிக்கும்[27]. சில சமயங்களில் இந்த முறை சூழிடர் கொண்டதாகவும் அமைந்துவிடுகிறது[28][29]

மற்றவை[தொகு]

வேறு சில மரபுசார் முறைக் கருக்கலைப்பு முறைகளும் உள்ளன. பாதுகாப்பற்ற முறைகளும் இவற்றில் அடங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Bankole, Akinrinola, Singh, Susheela, & Haas, Taylor. (1998). Reasons Why Women Have Induced Abortions: Evidence from 27 Countries. International Family Planning Perspectives, 24 (3), 117–127 & 152. Retrieved 2006-01-18.
 2. Finer, Lawrence B., Frohwirth, Lori F., Dauphinee, Lindsay A., Singh, Shusheela, & Moore, Ann M. (2005). Reasons U.S. women have abortions: quantative and qualitative perspectives. Perspectives on Sexual and Reproductive Health, 37 (3), 110–8. Retrieved 2006-01-18.
 3. Grimes, D. A.; Benson, J.; Singh, S.; Romero, M.; Ganatra, B.; Okonofua, F. E.; Shah, I. H. (2006). "Unsafe abortion: The preventable pandemic" (PDF). The Lancet 368 (9550): 1908–1919. doi:10.1016/S0140-6736(06)69481-6. பப்மெட் 17126724. http://www.who.int/reproductivehealth/publications/general/lancet_4.pdf. 
 4. Shah, I.; Ahman, E. (December 2009). "Unsafe abortion: global and regional incidence, trends, consequences, and challenges" (PDF). Journal of Obstetrics and Gynaecology Canada 31 (12): 1149–58. பப்மெட் 20085681. http://www.sogc.org/jogc/abstracts/full/200912_WomensHealth_1.pdf. 
 5. 5.0 5.1 Sedgh, G.; Singh, S.; Shah, I. H.; Åhman, E.; Henshaw, S. K.; Bankole, A. (2012). "Induced abortion: Incidence and trends worldwide from 1995 to 2008". The Lancet 379 (9816): 625–632. doi:10.1016/S0140-6736(11)61786-8. பப்மெட் 22264435. http://www.guttmacher.org/pubs/journals/Sedgh-Lancet-2012-01.pdf. 
 6. Sedgh G, Henshaw SK, Singh S, Bankole A, Drescher J (September 2007). "Legal abortion worldwide: incidence and recent trends". Int Fam Plan Perspect 33 (3): 106–116. doi:10.1363/ifpp.33.106.07. பப்மெட் 17938093. http://www.guttmacher.org/pubs/journals/3310607.html. 
 7. Department of Reproductive Health and Research (2003). "Managing Complications in Pregnancy and Childbirth – A guide for midwives and doctors". World Health Organization. http://www.who.int/reproductive-health/impac/Symptoms/Vaginal_bleeding_early_S7_S16.html. Retrieved 2009-04-07. NB: This definition is subject to regional differences.
 8. Edmonds DK, Lindsay KS, Miller JF, Williamson E, Wood PJ (1982). "Early embryonic mortality in women". Fertil. Steril. 38 (4): 447–453.
 9. Roche, Natalie E. (2004). Therapeutic Abortion. Retrieved 2006-03-08.
 10. "Abortion - Methods". All American Life League. பார்த்த நாள் 27 மே 2017.
 11. "Unsafe abortion in rural Tanzania – the use of traditional medicine from a patient and a provider perspective". U.S. National Library of Medicine. National Centre for Biotechnology Information. பார்த்த நாள் 27 மே 2017.
 12. "The diversity of abortion methods". Institute of Research and Developement. University of Paris. பார்த்த நாள் 27 மே 2017.
 13. "28.01.1935: உலகில் முதல்முறையாக ஐஸ்லாந்து கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கிய தினம் இன்று!". தினமணி. பார்த்த நாள் 27 மே 2017.
 14. "Induced abortion". Danforth's obstetrics and gynecology (10th ). Philadelphia: Lippincott Williams & Wilkins. 2008. பக். 586–603. ISBN 978-0-7817-6937-2. 
 15. "Risks of an abortion". Natioanl Health Service, UK. Gov.UK. பார்த்த நாள் 27 மே 2017.
 16. "Medical methods to induce abortion in the second trimester". Management of unintended and abnormal pregnancy: comprehensive abortion care. Oxford: Wiley-Blackwell. 2009. பக். 178–192. ISBN 1-4051-7696-2. 
 17. "Dilation and evacuation". Management of unintended and abnormal pregnancy: comprehensive abortion care. Oxford: Wiley-Blackwell. 2009. பக். 178–192. ISBN 1-4051-7696-2. 
 18. "Abortion statistics, England and Wales: 2010". London: Department of Health, United Kingdom (24 May 2011). பார்த்த நாள் 22 November 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
 19. "Abortion statistics, year ending 31 December 2010". Edinburgh: ISD, NHS Scotland (31 May 2011). பார்த்த நாள் 22 November 2011.
 20. "Voluntary terminations of pregnancies in 2008 and 2009". Paris: DREES, Ministry of Health, France (22 June 2011). மூல முகவரியிலிருந்து 26 September 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 November 2011.
 21. . (5 July 2011). "Abortions in Switzerland 2010". Neuchâtel: Office of Federal Statistics, Switzerland. பார்த்த நாள் 22 November 2011.
 22. "Induced abortions in the Nordic countries 2009". Helsinki: National Institute for Health and Welfare, Finland (21 February 2011). பார்த்த நாள் 22 November 2011.
 23. "Abortion incidence and access to services in the United States, 2008". Perspect Sex Reprod Health 43 (1): 41–50. March 2011. doi:10.1363/4304111. பப்மெட் 21388504. http://www.guttmacher.org/pubs/journals/4304111.pdf. பார்த்த நாள்: 22 November 2011. 
 24. 24.0 24.1 Templeton, A.; Grimes, D. A. (2011). "A Request for Abortion". New England Journal of Medicine 365 (23): 2198–2204. doi:10.1056/NEJMcp1103639. http://www.nejm.org/doi/full/10.1056/NEJMcp1103639.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "NEJMDec2011" defined multiple times with different content
 25. Healthwise (2004). "Manual and vacuum aspiration for abortion". WebMD. பார்த்த நாள் 2008-12-05.
 26. World Health Organization (2003). "Dilatation and curettage". Managing Complications in Pregnancy and Childbirth: A Guide for Midwives and Doctors. Geneva: World Health Organization. ISBN 92-4-154587-9. OCLC 181845530. http://www.who.int/reproductive-health/impac/Procedures/Dilatetion_P61_P63.html. பார்த்த நாள்: 2008-12-05. 
 27. Borgatta, L (December 2014). "Labor Induction Termination of Pregnancy". Global Library of Women's Medicine GLOWM.10444. doi:10.3843/GLOWM.10444. http://www.glowm.com/section_view/heading/Labor%20Induction%20Termination%20of%20Pregnancy/item/443. பார்த்த நாள்: 25 September 2015. 
 28. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Labor_Induced_Abortion என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 29. "2015 Clinical Policy Guidelines". National Abortion Federation. 2015. http://prochoice.org/wp-content/uploads/2015_NAF_CPGs.pdf. பார்த்த நாள்: 30 October 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருக்கலைப்பு&oldid=2294886" இருந்து மீள்விக்கப்பட்டது