குறைப்பிரசவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Preterm birth
Classification and external resources
Premature infant with ventilator.jpg
Intubated preterm baby in an incubator
ICD-10 O60.1, P07.3
ICD-9 644, 765
DiseasesDB 10589
MedlinePlus 001562
eMedicine ped/1889 
MeSH D047928

மனிதர்களில் குறைப்பிரசவம் (preterm birth) என்பது கருக்காலம் (gestational age) 37 கிழமைகளாவதற்கு முன்னரே குழந்தை பிறப்பதாகும். அனேகமான சூழ்நிலைகளில், இதற்கான காரணம் தெளிவற்றதாகவும், அறியாததாகவும் இருக்கும். பல காரணிகள் இந்த குறைபிரசவத்துக்கு காரணமாக இருப்பதுடன், அவற்றை கட்டுப்படுத்துவதும் கடினமாகும்.

இந்த குறைப்பிரசவம் என்ற சொல்லும், முற்றாப்பிரசவம் (premature birth) என்ற சொல்லும் இணைப்பெயர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. முற்றாப் பிரசவம் என்னும்போது, குழந்தையானது பிரசவத்தின் பின்னர் வெளிச் சூழலில் உயிருடன் இருந்து, வளரவும், விருத்தியடையவும் தேவையான அளவில் குழந்தையின் உறுப்புகள் விருத்தியடைய முன்னரே குழந்தை பிறத்தலைக் குறிக்கும். முற்றாப்பிரசவத்தில் பிறக்கும் பிள்ளைகளின் உடல் வளர்ச்சி, உளவியல் விருத்தி என்பன ஆற்றலற்றதாவோ, தடைகளைக் கொண்டதாகவோ இருப்பது உட்பட பல விதமான குறுகியகால, நீண்டகால இடர்களைக் கொண்டதாக இருக்கும்.

முற்றாப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பேணிப் பாதுகாப்பதில் பலவிதமான மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், குறைப்பிரசவம் நிகழ்வதை குறைப்பது இன்னமும் முடியாமலேயே உள்ளது[1]. குறைப்பிரசவமே, முற்றாப்பிரசவத்துக்கு பொதுவான காரணமாகும். அத்துடன் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் முற்றாப்ப்பிரசவக் குழந்தைகளுக்கான போதிய பராமரிப்பு வழிகள் இல்லாமையால் குழந்தை இறக்கும் நிலைக்கும் செல்ல வேண்டியதாகி விடுகின்றது.


அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Goldenberg RL, Culhane JF, Iams JD, Romero R (2008). ""Epidemiology and causes of preterm birth"". The Lancet 371: 75-84. doi:10.1016/S0140-6736(08)60074-4. பப்மெட் 18177778. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறைப்பிரசவம்&oldid=1557932" இருந்து மீள்விக்கப்பட்டது