உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமூளை வாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருமூளை வாதம்
பெருமூளை வாதமுள்ள ஓர் சிறுவனின் உடலியக்க திறனை மருத்துவர் சோதிக்கிறார்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புநரம்பியல், pediatrics
ஐ.சி.டி.-10G80.
ஐ.சி.டி.-9343
ம.இ.மெ.ம603513 605388
நோய்களின் தரவுத்தளம்2232
மெரிசின்பிளசு000716
ஈமெடிசின்neuro/533 pmr/24
பேசியண்ட் ஐ.இபெருமூளை வாதம்
ம.பா.தD002547

பெருமூளை வாதம் (Cerebral palsy) இளஞ்சிசுவாக இருக்கும்போதே மூளை பாதிப்படைவதால் ஏற்படும் பலவகை உடலியக்கக் குறைபாடுகளை குறிக்கின்றது. இந்த குறைபாடு பெருமூளை பாதிப்படைவதால் ஏற்படுவதால் பெருமூளை வாதம் அல்லது பெருமூளை முடக்கு நோய் எனப்படுகிறது. பாதிப்படைந்தவரால் பொதுவாக நிற்கவோ நடக்கவோ இயலாது. சிலருக்கு பகுதியான முடக்கு வாதமும் ஏற்படுவதுண்டு. தவிரவும் இவர்களுக்கு கற்கையில் தடங்கல்கள் அல்லது மனவளர்ச்சிக் குறை போன்ற சிக்கல்களும் எழலாம். பலவகையான பெருமூளை வாத நோய் உள்ளன. மிகவும் பரவலான வகையாக இருப்பது வலிப்பு பெருமூளை வாதமாகும். ஐக்கிய இராச்சியத்தில் 400 குழந்தைகளில் ஒருவருக்கு பெருமூளை வாதநோய் உள்ளது.[1] பெருமூளை வாதம் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் வாழ்நாள் எதிர்பார்ப்பில் யாதொரு வேறுபாடுமில்லை.[2] இந்நோயை 1860இல் முதன்முதலாக ஆங்கில அறுவை சிகிச்சை மருத்தவர் வில்லியம் லிட்டில் கண்டறிந்தார்.

பெருமூளை வாதம் வளர்கின்ற மூளையின் உடலியக்க கட்டுப்பாட்டு மையங்கள் சேதமடைவதால் ஏற்படுகின்றது. கருவிலேயோ, பிறப்பின் போதோ அல்லது மூன்று ஆண்டுகள் நிறைவதற்கு முன்னதாகவோ இத்தகைய சேதம் ஏற்படலாம்.[3][4] அனைத்து பெருமூளை வாத வகைகளில் ஏறத்தாழ 2% மரபணுக் குறைபாட்டினாலேயே ஏற்படுகின்றன.[5] இது ஓர் தொற்று நோயல்ல. பெரும்பாலான பாதிப்புகள் வளரிளமை காலத்திலோ இளமைக் காலத்திலோ இல்லாது சிறு வயதிலேயே ஏற்படுகின்றன.

பிறந்த குழந்தைகளின் நலம் பேணுவதால் இத்தகைய பாதிப்புக்களை குறைக்கலாம். மிகவும் குறைந்த பிறப்பு எடை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதால் அவர்களது தவிர்ப்பு எண்ணிக்கை கூடியுள்ளது.[6][7] இது குணப்படுத்தவியலா நோயாகும். பெருமூளைக்கு இத்தகைய பாதிப்பு நிகழ்வதை தடுக்கவும் குணப்படுத்தவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. http://www.nhs.uk/conditions/Cerebral-palsy/Pages/Introduction.aspx
  2. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1469-8749.2008.03000.x/abstract
  3. "Cerebral Palsy – Topic Overview". பார்க்கப்பட்ட நாள் 2008-02-06.
  4. WebMD Medical Reference from Healthwise. 
  5. Online 'Mendelian Inheritance in Man' (OMIM) Cerebral palsy, spastic, symmetric, autosomal recessive -603513
  6. "Information: Scope". Archived from the original on 2010-03-17. பார்க்கப்பட்ட நாள் 2007-12-08.
  7. Groch, Judith (January 5). "Medical news: Cerebral palsy rates decline in very low birthweight children". MedPage Today. MedPage Today. Archived from the original on 2008-01-05. பார்க்கப்பட்ட நாள் 2007-12-08. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cerebral palsy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமூளை_வாதம்&oldid=3679482" இலிருந்து மீள்விக்கப்பட்டது