பனிக்குட நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பனிக்குடப்பையினுள் உள்ள பனிக்குட நீரினுள் இருக்கும் குழந்தை

பனிக்குட நீர் (Amniotic fluid) என்பது கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் முளையத்திற்கு அல்லது குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதற்காக அதனைச் சுற்றி இருக்கும் பனிக்குடப்பையினுள் இருக்கும் திரவம் (நீர்மம்) ஆகும். கருக்கட்டல் நிகழ்ந்து கிட்டத்தட்ட 2 கிழமைகளின் பின்னர் உருவாகும் பனிக்குடப்பை முக்கியமாக நீரினால் நிரப்பப்படும். 10 கிழமைகளில் பனிக்குட நீர், முளைய விருத்திக்குத் தேவையான காபோவைதரேட்டு, புரதம், கொழுப்பு உட்பட அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கும். குழந்தை சிறுநீர் கழிக்கத் தொடங்கிய பின்னர், இந்த பனிக்குட நீரில் சிறுநீரும் கலந்திருக்கும். முளையம் வளர வளர இந்த பனிக்குட நீரின் அளவும் அதிகரிக்கும். கருத்தரிப்புக் காலத்தின் 34 கிழமை அளவில் கிட்டத்தட்ட 800 மி.லி. அளவு பனிக்குட நீர் காணப்படும். இந்த அளவு குழந்தை பிறப்புக்கு முன்னர் குறைந்து 600 மி.லி. அளவாகும். குழந்தை பிறப்பின்போது பனிக்குடப்பை உடைந்து பனிக்குட நீர் வெளியேறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிக்குட_நீர்&oldid=1358332" இருந்து மீள்விக்கப்பட்டது