செத்துப் பிறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செத்துப் பிறப்பு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு pediatrics, obstetrics
ICD-10 P95.
MedlinePlus 002304
ஈமெடிசின் topic list
MeSH D050497

செத்துப் பிறப்பு (stillbirth) என்பது குழந்தை பிறப்பின்போது முதிர்கருவானது தாயின் கருப்பையிலேயே இறந்து, பின் பிறத்தல் ஆகும்.[1] பொதுவாக இது குழந்தை பிறப்பு, கருச்சிதைவு ஆகிய இரண்டிலும் இருந்து வேறுபட்டதாகும்.[2] உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணப்படி, செத்துப் பிறப்பு என்பது, கருப்பகாலத்தின் 28 ஆவது கிழமைக்குப் பின்னர், உயிரற்ற நிலையில் முதிர்கரு பிறத்தலைக் குறிக்கும்[3]

காரணங்கள்[தொகு]

  1. கருப்பையில் சரியாக வளராமல் இருப்பது[4]
  2. குழந்தையின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம் அல்லது மரபணுக் கோளாறு[4]
  3. கர்ப்பமான 24 வாரத்திற்கு பிறகு ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கு. சூல்வித்தகத்திலிருந்து கருப்பை பிரியும் போது. இது சூல்வித்தகத் தகர்வு என்றழைக்கப்படும்.[4]
  4. தாயுடைய உடல் நலக்குறைவு (நீரழிவு, கல்லீரல் கோளாறு போன்றவை)
  5. குழந்தை பிறக்கும் போது தோள்பட்டை திரும்பி இருத்தல் அல்லது பிறக்கும் போது ஏற்படும் மூச்சுக்கோளாறு போன்றவை முக்கிய காரணங்களாகும்.[4] இதுமட்டுமின்றி இன்னபிற காரணங்களும் உண்டு.[5]

குறிப்புகள்[தொகு]

  1. R. Nguyen and A. Wilcox. "Terms in reproductive and perinatal epidemiology: 2. Perinatal terms". பார்த்த நாள் அக்டோபர் 20, 2012.
  2. குழந்தை பிறப்பு என்பது உயிருடன் குழந்தை பிறத்தலைக் குறிக்கும். கருச்சிதைவு என்பது முழுமையாக வளர்ச்சியடையாத கரு ஒன்று பலவித காரணங்களால் கருப்பையை விட்டு வெளியேறுவதைக் குறிக்கும்.
  3. "Stillbirths" 2013. WHO. பார்த்த நாள் செப்டம்பர் 19, 2013.
  4. 4.0 4.1 4.2 4.3 "When a baby is stillborn". பார்த்த நாள் அக்டோபர் 23, 2012.
  5. "Stillbirth Causes". பார்த்த நாள் அக்டோபர் 23, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செத்துப்_பிறப்பு&oldid=1974003" இருந்து மீள்விக்கப்பட்டது