இரத்தச் சர்க்கரை அதிகரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உணவுண்ணா நிலையில் இயல்பான இரத்தச் சர்க்கரையின் அளவு 70-110 மி.கி / டெ. லிட்டர் ஆகும். இந்த அளவு அன்றாட பல நிகழ்ச்சிகளிலும் மாறாதிருக்கும். கார்போஹைட்ரேட்டு மிகுந்த உணவினை உட்கொண்டபின் இரத்தச் சர்க்கரை உச்சகட்டமாக 140 மி.கி / டெ. லிட்டர் அளவை எட்டலாம். இவ்வகை உயர் அளவு இரத்தத்தில் நீடித்தால் அதற்கு இரத்த சர்க்கரை மிகைப்பு (Hyperglycemia) என்று பெயர். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளின் பாதிப்பும், மரணமும் நேரிடலாம். 400 மி.கி / டெ. லிட்டர் அளவு ஒரு சில நாட்கள் நீடிப்பினும் உடல் நீர் இழப்பு, கோமா மற்றும் மரணம் நிகழும்.