மரபு வழி
மரபு வழி [1][2] என்பது மரபணுக்களின் வழித்தோன்றல்கள். அரச பரம்பரையைக் குறிக்க இச்சொல்லை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். இதனைக் குடி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[3][4] ஆசிரியரின் வழிவந்த மாணாக்கர் பரம்பரையும் தமிழக வரலாற்றில் உண்டு. இது கருத்து மரபு. இதனைப் பரம்பரை என்றே வழங்குவர்.
புராணம்
[தொகு]பொதுவாக இந்து மத புராணங்களில் ஒரு இனத்தவரை இனங்கான வம்சத்தை அடையாளப்படுத்துவர். பெரும்பாலும் தமிழக அரச மரபுகள் சூரிய வம்சம், சந்திர வம்சம் இவ்விரண்டிலும் மற்ற வம்சங்கள் அடங்கிவிடும். தமிழகத்தில் சேரர், பாண்டியர் சந்திர வம்சம்[5][6] எனவும் சோழர் சூரிய வம்சம்[7][8] பல்லவர் பரத்துவாசர் வம்சம்[9] எனவும் கூறப்படுகின்றனர்.
ஆட்சிமுறை அல்லது தலைமைமுறை வரிசையைக் குறிக்க மரபு, பரம்பரை என்னும் சொற்களைக் கையாளுகின்றனர்.[10]
மாணாக்கர் பரம்பரை
[தொகு]இது வழிவழியாக இவருக்குப் பின்னர் இவர் மகன் என வருவது அன்று. இவருக்குப் பின்னர் இவரது மாணாக்கர் என வருவது.
- கண்ணுடைய வள்ளல் பரம்பரை
- கமலை ஞானப்பிரகாசர் மாணாக்கர் பரம்பரை
- காஞ்சி - ஞானப்பிரகாசர் ஆதீன பரம்பரை
- காவை - அம்பலநாத தம்பிரான் பரம்பரை
- சம்பந்த முனிவர் பரம்பரை
- சிற்றம்பலநாடிகள் பரம்பரை
- சூரியனார் கோயில் ஆதீன பரம்பரை
- தருமபுர ஆதீன பரம்பரை
- திருவாவடுதுறை ஆதீன பரம்பரை
- வைணவ குருபரம்பரை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் - தொல்காப்பியம் புறத்திணையியல்
- ↑ தொல்காப்பியம் மரபியல்
- ↑ ஒருவீர் தோற்பினும் தோற்பது உங் குடியே (புறநானூறு 45, நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி சண்டையைத் தவிர்க்க, கோவூர் கிழார் பாடியது)
- ↑
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து; (பதிற்றுப்பத்து, ஐந்தாம்பத்து, பதிகம்) - ↑ திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி - சிலப்பதிகாரம் காடுகாண் காதை
- ↑ ஸ்வஸ்திஸரீ சந்திரனது வழித்தோன்றிஇத் தராமண்டல - வீர பாண்டியன் (946-966) சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி, மேலும் இம்மெய்க்கீர்த்திகளில் மேலும் சில பாண்டியர் சந்திர வம்ச வழிவந்தோர் எனக்கூறப்படுகின்றனர் [1]
- ↑ செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட - மணிமேகலை சிறப்பொப்பாயிரம்
- ↑ கலிங்கத்துப்பரணி சோழர் வம்சாவளி
- ↑ மயிதவோலுப் பட்டயம்
- ↑ சோழர் மரபு, சோழர் பரம்பரை