உள்ளடக்கத்துக்குச் செல்

பூச்சியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விலங்கியல்

தொடரின் ஒரு பகுதி


விலங்கியலின் கிளைகள்

மானிடவியல் ·
தேனீயியல் · எட்டுக்காலியியல்
கணுக்காலியியல் · நீர்ப்பாலூட்டியியல்
சிப்பியோட்டியல் · பூச்சியியல்
நடத்தையியல் · ஒண்டுப்புழுவியல்
ஊர்வனவியல் · மீனியல்
நத்தையினவியல் · பாலூட்டியியல்
எறும்பியல் · உருளைப்புழுவியல்
விலங்கு நரம்பு&நடத்தையியல் · பறவையியல்
தொல்விலங்கியல் · மிதவையுயிரியல்}
முதனியியல்

குறிப்பிடத்தக்க விலங்கியலாளர்

ஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின்
வில்லியம் கிர்பி · கரோலசு லின்னேயசு
கான்ட்ராட் லாரென்சு · தாமசு சே
ஆல்ஃப்ர்ட் ரஸல் வல்லேஸ் · மேலும்...

வரலாறு

டார்வினுக்கு முன்
டார்வினுக்குப் பின்

பூச்சியியல் (Entomology) என்பது, பூச்சிகளைப் பற்றிய அறிவியல் அடைப்படையிலான ஆய்வுத்துறை ஆகும். இது கணுக்காலியியலின் ஒரு பிரிவாக உள்ளது. இதுவரை விவரிக்கப்பட்டுள்ள சுமார் 1.3 மில்லியன் பூச்சி இனங்கள் உள்ளன. இவ்வெண்ணிக்கை, உலகின் மொத்த உயிரினங்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவையாகக் கருதப்படும் பூச்சிகள் மனிதர்களுடனும், புவியில் உள்ள பிற வகை உயிரினங்களுடனும் பலவகையான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இது உயிரியலில் ஒரு சிறப்புத் துறை ஆகும்.

விலங்கியலுள் வகைப்படுத்தப்பட்டுள்ள பிற பல துறைகளைப் போலவே பூச்சியியலும் ஒரு வகைப்பாட்டியல் அடிப்படையிலான பிரிவு. பூச்சிகள் தொடர்பான அறிவியல் ஆய்வு எதுவும் பூச்சியியலுள் அடங்கும். இதனால் பூச்சியியல் பலவாறாக வேறுபட்டு அமைந்த தலைப்புக்களிலான விடயங்களை உள்ளடக்குகின்றது. இவற்றுள், மூலக்கூற்று மரபியல், நடத்தை, உயிர்விசையியல், உயிர்வேதியியல், தொகுதியியல், உடற்கூற்றியல், வளர்ச்சி உயிரியல், சூழலியல், உருவியல், தொல்லுயிரியல், மானிடவியல், வேளாண்மை, ஊட்டம், சட்டமருத்துவ அறிவியல் என்பவை சார்ந்த தலைப்புக்களும் அடங்கும்.

பூச்சியியலின் வரலாறு[தொகு]

பூச்சியியல், வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே ஏறத்தாழ எல்லா மனிதப் பண்பாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், தேனீ வளர்ப்பு முதலிய வேளாண்மை சார்ந்த துறைகளிலேயே இது தொடர்புபட்டிருந்தது. எனினும் இது தொடர்பிலான அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் 16 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கின. இதுவரை காலமும் இருந்த பூச்சியியலாளர்களில் பட்டியல் மிகவும் நீளமானது. சார்லசு டார்வின், விளாடிமிர் நபோக்கோவ், கார்ல் வொன் பிரிசுக், ஈ. ஓ. வில்சன் போன்ற குறிப்பிடத்தக்க மனிதர்களும் இப்பட்டியலில் அடங்குவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூச்சியியல்&oldid=3321276" இலிருந்து மீள்விக்கப்பட்டது