மூலக்கூற்று மரபியல்
மூலக்கூற்று மரபியல் என்பது மரபணுக்களின் அமைப்பையும், செயற்பாடுகளையும் மூலக்கூற்று மட்டத்தில் ஆய்வு செய்யும் உயிரியலின் ஒரு துறை ஆகும். இத்துறை மரபணுக்கள் எவ்வாறு ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என ஆய்வு செய்கிறது. இத்துறை ஆய்வுகளுக்கு, மரபியலையும், மூலக்கூற்று உயிரியலையும் பயன்படுத்துகின்றது. மூலக்கூற்று மரபியலில் உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று மூலக்கூறுகளை மரபுவழிக் கோலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்துவது ஆகும். அத்துடன் இது உயிரினங்களைச் சரியான அறிவியல் வகைப்பாடு செய்வதற்கும் பயன்படுகிறது. இது மூலக்கூற்றுத் தொகுதியியல் எனப்படுகின்றது.
மரபுவழிக் கோலங்களைத் தீர்மானிக்க உதவுவது மட்டுமன்றி, மூலக்கூற்று மரபியல், சிலவகை நோய்களை உண்டாக்கக்கூடிய மரபுசார் திடீர்மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கும் உதவியாக உள்ளது.
முன்னோக்கு மரபியல்
[தொகு]மூலக்கூற்று மரபியலாளர்களுக்கு உதவக்கூடிய முதல் கருவிகளுள் ஒன்று முன்னோக்கு மரபியல் சலிப்பு ஆகும். இந்த நுட்ப முறையின் நோக்கம், ஒரு குறித்த வகையான இயல்புகளை உருவாக்கும் திடீர் மாற்றங்களை அடையாளம் காண்பது ஆகும்.