உள்ளடக்கத்துக்குச் செல்

கோலியாத் வண்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலியாத் வண்டுகள்
கோலியாத் வண்டுகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Goliathus

கோலியாத் வண்டுகள் (Goliathus) என்பன உலகில் உள்ள பூச்சிகள், வண்டுகள் இனத்தில் மிகப்பெரியதாகும்.[1][2][3] இவ்வின, உட்பிரிவைச் சேர்ந்த பூச்சிகள் ஆப்பிரிக்காவில் உள்ள வெப்பமண்டலக் காடுகளில் காணப்படுகின்றன.[2] இந்தக் கோலியாத் வண்டுகளில் வயதுக்குவந்தவைகளில் ஆண் வண்டுகள் 60-110 மில்லி மீட்டர் (2.4 - 4.3 அங்குலம் ) நீளமும், பெண்வண்டுகள் 50-80 மில்லி மீட்டர் (2.0 - 3.1 அங்குலம்) நீளம் உள்ளவையாகக் காணப்படுகின்றன. இந்த வண்டுகள் 80-100 கிராம் (2.8-3.5 அவுன்ஸ்) எடைவரை வளருகின்றன. பெண் வண்டுகள் வெண்மையாகவும்-அடர் பழுப்பாகவும் இருக்கின்றன. ஆண் வண்டுகள் பொதுவாக வெள்ளை / / பழுப்பு / வெள்ளை கருப்பு அல்லது கருப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. தி இந்து,தமிழ்,மாயாபஜார் இணைப்பு,14.1.2015.
  2. 2.0 2.1 Goliathus - The African Goliath Beetles
  3. Karl Meyer Goliathus Breeding Manual
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலியாத்_வண்டுகள்&oldid=2186375" இலிருந்து மீள்விக்கப்பட்டது