பிளேக் நோய்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பிளேக் | |
---|---|
200 முறை பெரிதாக்கப்பட்ட எர்சினியா பெசுட்டிசு நுண்ணுயிரி. உண்ணிகளால் பரப்பப்படும் இந்த நுண்ணுயிரி பிளேக் நோயின் பல்வேறு வகைகளுக்கு காரணமாக உள்ளது. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | infectious diseases |
ஐ.சி.டி.-10 | A20.a |
ஐ.சி.டி.-9 | 020 |
மெரிசின்பிளசு | 000596 |
ஈமெடிசின் | med/3381 |
பேசியண்ட் ஐ.இ | பிளேக் நோய் |
ம.பா.த | D010930 |
கொள்ளைநோய் அல்லது “பிளேக்” (Plague) குடலிய நுண்ணுயிரி வகையான எர்சினியா பெசுட்டிசால் ஏற்படும் கொடிய நோய்த்தொற்று ஆகும். இந்த பாக்டீரியாவினால் பிளேக் நோய் ஏற்படுகின்றது என்பதை பிரான்சிய-சுவிசு மருத்துவரான அலெக்சாண்டர் எர்சினும் சப்பானின் ஷிபாசாபுரோ கிடசாட்டோவும் 1894இல் ஹாங்காங்கில் கண்டறிந்து அறிவித்தனர். இந்த நோயைப் பரப்பும் நோய்ப்பரப்பி உயிரினமாக (vector) இறந்த எலிகளின் உடலில் வாழும் உண்ணிகளை அடையாளம் கண்டவர் பவுல்-லூயி சைமண்டு ஆகும்.
சூன் 2007 வரை உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட வேண்டிய மூன்று நோய்களில் ஒன்றாக பிளேக் நோய் இருந்தது; வாந்திபேதியும் மஞ்சள் காய்ச்சலும் மற்ற இரு நோய்களாகும்.[1]
நுரையீரல் தொற்றால் ஏற்பட்டதா அல்லது அசுத்தம் காரணமாக ஏற்பட்டதா என்பதைப் பொறுத்து கொள்ளைநோய் (பிளேக்நோய்) காற்று மூலமாகவோ நேரடித் தொடர்பு மூலமாகவோ சரியாக சமைக்கப்படாத மாசுமிகு உணவாலோ பரவலாம். ஒவ்வொரு நபரின் பாதிக்கப்பட்ட உடற்பகுதியைப் பொறுத்து பிளேக் நோயின் அறிகுறிகள் அமைந்திருக்கும்: அரையாப்பு பிளேக்கு நிணநீர்க் கணுக்களிலும், குருதிநச்சு பிளேக்கு குருதி நாளங்களிலும், வளியிய பிளேக்கு நுரையீரல்களிலும் ஏற்படும். துவக்கத்திலேயே சிகிட்சை அளிக்கப்பட்டால் இது குணமாகக் கூடிய நோய். உலகின் சிலபகுதிகளில் பிளேக்கு இன்னமும் தொற்றுநோயாக உள்ளது.
பெயர்
[தொகு]நோய் தோன்றுவழி ஆய்வு பயன்பாட்டில் "பிளேக்" தற்போது அரையாப்புகளில் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுக்களைக் குறிக்கின்றது; இருப்பினும் முற்காலங்களில் உலகம்பரவுநோய்களுக்கு பொதுவாக "பிளேக்கு" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பிளேக்கு என்று பெரும்பாலும் "அரையாப்பு பிளேக்கேக்" குறிப்பிடப்பட்டாலும் இது இதன் ஒரு வெளிப்பாடே ஆகும்; மற்ற இரு வகைகளாக குருதிநச்சு பிளேக்கும் வளியிய பிளேக்கும் உள்ளன. இந்த நோய் "கருப்பு பிளேக்கு" என்றும் "கறுப்புச் சாவு" என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இச்சொல்லின் சொற்பிறப்பியல்: "பிளேக்" இலத்தீன சொல்லான plāga ("அடி, காயம்") என்பதிலிருந்தும் plangere (“அடித்தல், தாக்குதல்”) என்பதிலிருந்தும் வந்திருக்கலாம்.
தொற்றும் பரவுகையும்
[தொகு]இதுவரை தொற்று ஏற்படாத ஒருவருக்கு கீழ்கண்ட வகைகளில் எ. பெசுட்டிசு பாக்டீரியா பரவுகின்றது.[2]
- திவலை தொடர்பு – மற்றொருவரின் இருமல் அல்லது தும்மல்
- நேரடி உடல் தொடர்பு – தொற்றுள்ளவரை தொடுவதாலோ பாலுறவு கொள்வதாலோ
- மறைமுகத் தொடர்பு – பெரும்பாலும் மாசடைந்த மண்ணையோ பிற மாசடைந்த பரப்பையோ தொடுதல்
- காற்றுவழி பரவுகை – காற்றில் வெகுநேரம் நுண்ணுயிர் இருத்தல்
- மல-வாய்வழி பரவுகை – பொதுவாக நுண்ணுயிரியின் கழிவு கலந்த உணவையோ நீரையோ உட்கொள்வதால்
- நோய்க்காவி வழியான பரவுகை – பூச்சிகளாலும் பிற விலங்குகளாலும் பரவுதல்.
எர்சினியா பெசுட்டிசு விலங்குகளில், குறிப்பாக கொறித்துண்ணிகளில், வாழ்கின்றன; தொற்றுக்கான இயற்கையான குவியமாக இவை ஆத்திரேலியா தவிர்த்த அனைத்து கண்டங்களிலும் உள்ளன. பிளேக்கு நோயின் முதன்மைக் குவிய பகுதியாக வெப்பமண்டல, அயனவயற் பிரதேச படுகையில் வெப்பமிகுந்த பரப்பெல்லைகளில் உள்ளது.[2]
பரவலான நம்பிக்கைகளுக்கு எதிராக எலிகள் அரையாப்பு பிளேக்கிற்கான காரணமல்ல; முதன்மையாக தெள்ளுப் பூச்சிகளே (Xenopsylla cheopis) பிளேக்கிற்கு காரணமாகும்; இவை எலிகளைத் தொற்றுவதால் எலிகளே முதலில் பிளேக் நோய்க்கு ஆளாகின்றன. இந்த நோய் தாக்கப்பட்ட கொறித்துண்ணியை கடித்த தெள்ளுப்பூச்சி மனிதரைக் கடிப்பதன் மூலம் இத்தொற்று பரவுகிறது. தெள்ளுப்பூச்சிக்குள் சென்ற பாக்டீரியா அங்குப் பெருகி வயிற்றை அடைக்கிறது; இதனால் பூச்சி பசியால் வாடுகிறது. இதனால் நோய்க்காவியை கடிக்கிறது; எத்தனை குருதி குடித்தாலும் பசி அடங்காது குடித்த இரத்தத்தை வாந்தி எடுக்கிறது; வெளிவந்த இரத்தத்தில் பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால் கடிபட்ட புண்ணை சீழாக்குக்கின்றன. பிளேக் பாக்டீரியா இப்பொது புதிய விலங்கு/மனிதருக்குப் பரவுகிறது. தெள்ளுப்பூச்சி இறுதியில் உணவின்றி இறக்கிறது. எலிகள் தொகை கூடும்போதோ அல்லது அவற்றிற்கு பிற நோய்கள் உண்டாகும்போதோ பிளேக் தொற்றுநோய் தோன்றுகின்றது.
சிகிச்சை
[தொகு]இந்தியாவின் மும்பையில் பணியாற்றிய மருத்துவர் வால்டெமர் ஆஃப்கின் பிளேக்கிற்குகான முதல் தடுப்பூசியை கண்டுபிடித்தவராவார். இவர் 1987இல் அரையாப்பு பிளேக்கிற்கான தடுப்பு மருந்தை கண்டறிந்து சோதித்தார்.[3]
நேரத்தே இனம் காணப்பட்டால் பல்வேறு பிளேக் வகைகளையும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொண்டு குணப்படுத்தலாம். பெரும்பாலும் இசுட்ரெப்டோமைசின், குளோராம்பெனிகோல், டெட்ராசைக்ளின் ஆகிய நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. புதியத் தலைமுறை மருந்துகளாக ஜென்டமைசின், டாக்சிசைக்ளின் ஆகியன உள்ளன.[4]
நாட்டார் வழிபாட்டில்
[தொகு]பிளேக் நோயின் மீது ஏற்பட்ட அச்சத்தினால் நாட்டார் வழிபாட்டில் பிளேக் மாரியம்மன் வழிபாடு இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு,[5]கருநாடகம், ஆந்திரப் பிரதேசம்[6] போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பிளேக் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. பிளேக் மாரியம்மன் சில கோயில்களில் முதன்மை தெய்வமாகவும், சில கோயில்களில் உபதெய்வமாகவும் வழிபடப்படுகிறார். பிளேக் மாரியம்மனுக்கான கோயில்கள் சில ; சௌரிபாளையம் சக்திமாரியம்மன் பிளேக் மாரியம்மன் கோயில், பாப்பநாயக்கன்பாளையம் ஜகன்மாதா பிளேக் மாரியம்மன் கோயில், இராமநாதபுரம் அங்காளம்மன் பிளேக் மாரியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் ஆற்காட்ட மாரியம்மன் பிளேக் மாரியம்மன் மதுரைவீரன் கோயில்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "WHO IHR Brief No. 2. Notification and other reporting requirements under the IHR (2005)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- ↑ 2.0 2.1 Plague Manual: Epidemiology, Distribution, Surveillance and Control, pp. 9 and 11. WHO/CDS/CSR/EDC/99.2
- ↑ Haffkine, W. M. 1897. Remarks on the plague prophylactic fluid. Br. Med. J. 1:1461
- ↑ Mwengee W; Butler, Thomas; Mgema, Samuel; Mhina, George; Almasi, Yusuf; Bradley, Charles; Formanik, James B.; Rochester, C. George (2006). "Treatment of Plague with Genamicin or Doxycycline in a Randomized Clinical Trial in Tanzania". Clin Infect Dis 42 (5): 614–621. doi:10.1086/500137. பப்மெட்:16447105.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "இப்போ கொரோனா தேவி, அப்போ பிளேக் மாரியம்மன்.. கோவையில் மட்டுமே கோவில் இருக்கிறதா ?". You Turn (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-21. பார்க்கப்பட்ட நாள் 2022-05-04.
உசாத்துணைகள்
[தொகு]- Pedro N. Acha , Zoonoses and Communicable Diseases Common to Man and Animals , Second Ed . P 132 .
- Parks Text book of Preventive and Social Medicine, 2007, 19th ed, Bhanot, Jabalpur