எர்சினியா பெசுட்டிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்சினியா பெசுட்டிசு
தொற்றப்பட்ட தெள்ளுப் பூச்சியின் முற்குடலில் உள்ள எர்சினியா பெசுட்டிசு பாக்டீரியாவின் அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி]] நுண்படிமம்.
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
பேரினம்:
இனம்:
ஒய். பெஸ்டிஸ்
இருசொற் பெயரீடு
எர்சினியா பெசுட்டிசு
(லெமான் & நியுமான், 1896)
வான் லோகம் 1944
வேறு பெயர்கள்

பாஸ்டரெல்லா பெஸ்டிஸ்

எர்சினியா பெசுட்டிசு (Yersinia pestis, மாற்று ஒலிப்பு:யெர்சினியா பெஸ்டிஸ்) ஓர் கோலுயிரி ஆகும். இது ஓர் பாக்டீரியாவுமாகும்.[1] அரையாப்பு பிளேக்கு நோய்த்தொற்றுக்கு நோய்க்காரணியாக இது அடையாளம் காணப்பட்டடுள்ளது. இதனால் குருதிநச்சு பிளேக்கு, வளியிய பிளேக்கு போன்ற மற்றவகையான பிளேக் நோய்களும் உண்டாகின்றன.[2] இந்த மூன்று வகையான பிளேக்கு நோய்களும் மனிதவரலாற்றில் உலகின் கூடுதலான நோயிறப்புக்கள் உண்டான பெரும் பிளேக், கறுப்புச் சாவு போன்ற பல கொள்ளைநோய்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன. 1347க்கும் 1353க்கும் இடையே கறுப்புச் சாவின்போது மட்டுமே ஐரோப்பாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒருவர் இறந்துள்ளனர்.

இந்தக் கோலுயிரியை மருத்துவர் அலெக்சாண்டர் எர்சின் 1894இல் ஆங்காங்கில் ஏற்பட்ட பிளேக் தொற்றுநோயின்போது கண்டறிந்தார்.[3] அப்போது எர்சின் பாஸ்டர் கழகத்திற்காக பணிபுரிந்து வந்தார். அப்போது இதற்கு பாஸ்டரெல்லா பெஸ்டிஸ் என்று பெயரிடப்பட்டது. 1967இல் இதனைக் கண்டறிந எர்சினின் நினைவாக எர்சினியா பெசுட்டிசு என்று மறுபெயரிடப்பட்டது. தற்போது இதன் மூன்று பல்வகைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.


மேற்சான்றுகள்[தொகு]

  1. Collins FM (1996). Pasteurella, Yersinia, and Francisella. In: Baron's Medical Microbiology (Baron S et al., eds.) (4th ed. ). Univ of Texas Medical Branch. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9631172-1-1. http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mmed.section.1611. 
  2. Ryan KJ; Ray CG (editors) (2004). Sherris Medical Microbiology (4th ed. ). McGraw Hill. பக். pp. 484-8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8385-8529-9. https://archive.org/details/sherrismedicalmi0000unse_q1i3. 
  3. Bockemühl J (1994). "[100 years after the discovery of the plague-causing agent--importance and veneration of Alexandre Yersin in Vietnam today]". Immun Infekt 22 (2): 72-5. பப்மெட்:7959865. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்சினியா_பெசுட்டிசு&oldid=3849435" இலிருந்து மீள்விக்கப்பட்டது