உள்ளடக்கத்துக்குச் செல்

வளியிய பிளேக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்சினியா பெசுட்டிசு பாக்டீரியா திரளைக் காட்டும் அலகிடு எதிர்மின்னி நுண்படிமம்.

வளியிய பிளேக்கு அல்லது நுரையீரல்சார் பிளேக்கு (Pneumonic plague) எர்சினியா பெசுட்டிசு பாக்டீரியாவால் ஏற்படும் மூன்று முதன்மை வகை பிளேக் நோய்களில் ஒன்றாகும்; இது கடுமையான நுரையீரல் தொற்றுநோயாகும். அரையாப்பு பிளேக்கை விட இது கடுமையானதும் அரிதானதுமாகும். பிளேக்கின் மூன்று வகைகளும் ஒரே பாக்டீரியாவால் ஏற்படுகின்றன;அவை தாக்கும் இடத்தைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. எர்சினியா பெசுட்டிசு பாக்டீரியா அரையாப்பு பிளேக்கில் நிணநீர் அமைப்பையும் குருதிநச்சு பிளேக்கில் குருதி ஓட்டத்திலும் வளியிய பிளேக்கில் சுவாச அமைப்பையும் தாக்குகின்றது.

பொதுவாக, வளியிய பிளேக்கு அரையாப்பு பிளேக்கு தொற்றிலிருந்தே பரவுகிறது; முதன்மை வளியிய பிளேக்கு நோய்தொற்றிய திவலைகளை உள்ளிழுப்பதால் ஏற்படுகின்றது. பிறகு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு விலங்குகள் அல்லது தெள்ளுப் பூச்சிகளின் துணையின்றியே தொற்ற முடியும். நுரையீரல்சார் பிளேக் மிக உயர்ந்த இறப்புவீதத்தைக் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளியிய_பிளேக்கு&oldid=2935945" இலிருந்து மீள்விக்கப்பட்டது