உள்ளடக்கத்துக்குச் செல்

மெடிநெத் அபு கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெடிநெத் அபு கல்லறைக் கோயில்
மெடிநெத் அபு கோயில் is located in வடகிழக்கு ஆப்பிரிக்கா
மெடிநெத் அபு கோயில்
Shown within Nile#Egypt
மெடிநெத் அபு கோயில் is located in Egypt
மெடிநெத் அபு கோயில்
மெடிநெத் அபு கோயில் (Egypt)
இருப்பிடம்மெடிநெத் அபு, எகிப்து
ஆயத்தொலைகள்25°43′10.92″N 32°36′2.52″E / 25.7197000°N 32.6007000°E / 25.7197000; 32.6007000
வகைகல்லறைக் கோயில்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1859 மற்றும் 1899
பார்வோன் மூன்றாம் ராமேசின் கல்லறைக் கோயில், மெடிநெத் அபு, எகிப்து

மெடிநெத் அபு கல்லறைக் கோயில், புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்ச மன்னர் மூன்றாம் ராமேசஸ் என்பவர் பண்டைய எகிப்து நாட்டின் அல்-உக்சுர் நகரத்தின் அருகே உள்ள மெடிநெத் அபு எனுமிடத்தில், தனக்காக கட்டிக்கொண்ட கல்லறைக் கோயில் ஆகும். இக்கோயிலில் மூன்றாம் ராமேசஸ் தனது ஆட்சிக் காலத்தில் (கிமு 1186 - கிமு 1155), பண்டைய எகிப்திய மன்னர்களின் பெயர் பட்டியலை கற்பலகையில் குறுங்கல்வெட்டுகளாகப் பொறித்துள்ளார்.

எகிப்தில் மெடிநெத் அபு எனுமிடத்தில் உள்ள மூன்றாம் ராமேசஸ் தனக்காக நிறுவிய இக்கல்லறைக் கோயிலை ஐரோப்பிய தொல்லியல் அறிஞர் விவான்ட் டெனொன் என்பவர் 1799-1801-களில் பார்வையிட்டார். 1859 மற்றும் 1899 ஆண்டுகளில் இக்கல்லறைக் கோயில் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அகழாய்வு

[தொகு]
மெடிநெத் அபு கல்லறைக் கோயிலின் இரண்டாம் நுழைவு வாயில்

எகிப்தில் மெடிநெத் அபு எனுமிடத்தில் உள்ள மூன்றாம் ராமேசஸ் தனக்காக நிறுவிய இக்கல்லறைக் கோயிலை ஐரோப்பிய தொல்லியல் அறிஞர் விவான்ட் டெனொன் என்பவர் 1799-1801-களில் பார்வையிட்டார். [1]1829-இல் சாம்பொல்லியான் இக்கல்றைக் கோயிலை விளக்கி எழுதியுளார்.[2] 1859 மற்றும் 1899 ஆண்டுகளில் இக்கல்லறைக் கோயில் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. சிக்காக்கோ பல்கலைகழகத்தின் கல்வெட்டியல் துறையினரும், சிக்காக்கோ கீழ்திசை ஆய்வு நிறுவனமும் மெடிநெத் அபு நகரத்தின் கல்லறைக் கோயிலை 1924 முதல் தொடர்ந்து அகழ்வாய்வுப் பணி செய்து வருகின்றனர்.

மன்னர்கள் பட்டியல்

[தொகு]

இக்கல்லறைக் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தின் கிழக்குச் சுவரில், கற்பலகையில் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட் 9 பார்வோன்கள் பெயர்கள் குறுங்கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டது.

கல்லறைக் கோயிலின் படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Denon, Vivant (1803). Travels in Upper and Lower Egypt. p. 96.
  2. Lettres de M. Champollion le jeune, écrites pendant..., 18th letter

மேலும் படிக்க

[தொகு]

தொல்லியல் அறிக்கைகள்

[தொகு]
  • The Epigraphic Survey, Medinet Habu I, Earlier Historical Records of Ramses III (OIP 8; Chicago, 1930)
  • The Epigraphic Survey, Medinet Habu II, Later Historical Records of Ramses III (OIP 9; Chicago, 1932)
  • The Epigraphic Survey, Medinet Habu III, The Calendar, the 'Slaughter House,' and Minor Records of Ramses III (OIP 23; Chicago, 1934)
  • The Epigraphic Survey, Medinet Habu IV, Festival Scenes of Ramses III (OIP 51; Chicago, 1940)
  • The Epigraphic Survey, Medinet Habu V, The Temple Proper, part 1 (OIP 83; Chicago, 1957)
  • The Epigraphic Survey, Medinet Habu VI, The Temple Proper, part 2 (OIP 84; Chicago, 1963)
  • The Epigraphic Survey, Medinet Habu VII, The Temple Proper, part 3 (OIP 93; Chicago, 1964)
  • The Epigraphic Survey, Medinet Habu VIII, The Eastern High Gate (OIP 94; Chicago, 1970)
  • W. F. Edgerton, Medinet Habu Graffiti Facsimiles (OIP 36; Chicago, 1937)
  • Uvo Hölscher, Medinet Habu 1924-1928. II The Architectural Survey of the Great Temple and Palace of Medinet Habu (season 1927-28). OIC, No. 5. Chicago: University of Chicago Press, 1929.
  • H. J. Thissen, Die demotischen Graffiti von Medinet Habu: Zeugnisse zu Tempel und Kult im Ptolemäischen Ägypten (Demotische Studien 10; Sommerhausen, 1989)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Medinet Habu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெடிநெத்_அபு_கோயில்&oldid=3074439" இலிருந்து மீள்விக்கப்பட்டது