எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்
தலைநகரம்ஆவாரிஸ்
(கிமு 1674 – கிமு 1535, எகிப்தின் பதினைந்தாம் வம்சம்)
சமயம் பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம் முடியாட்சி

எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் (Second Intermediate Period of Egypt) (கிமு 1650 - கிமு 1580) இரண்டாம் இடைநிலக் காலம் என்பது பண்டைய எகிப்தை வெளிநாட்டு குறிப்பாக பண்டைய அண்மை கிழக்கு நாட்டவர்கள் கிமு 1650 முதல் கிமு 1580 முடிய எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்த காலமாகும். பண்டைய எகிப்தின் வரலாற்றில் எகிப்தின் மத்திய கால இராச்சியத்தின் இறுதிக் காலத்திற்கும், புது எகிப்திய இராச்சியத்தின் துவக்க காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பண்டைய எகிப்து இரண்டாம் முறையாக வெளிநாட்டு மக்களால் சீர்குலைந்த காலப் பகுதியைக் குறிக்கிறது.[1][2]

எகிப்தின் இந்த இரண்டாம் இடைநிலைக் காலத்தில் பண்டைய அண்மைக் கிழக்கில் வாழ்ந்த ஹைக்கோஸ்[3] எனும் இன மக்களின் தலைவர் சாலிடிஸ் என்பவர் எகிப்தின் தீபை நகரத்தைக் கைப்பற்றி, எகிப்தின் பதினைந்தாம் வம்சத்தை நிறுவினார்.

வரலாறு[தொகு]

எகிப்தின் மத்தியகால இராச்சியத்தின் முடிவு[தொகு]

எகிப்தின் 12-ஆம் வம்சத்தின் ஆட்சி, கிமு 19-ஆம் நூற்றாண்டில் வாரிசு அற்ற இராணி சோபெக்னெபெருவின் (கிமு 1806–1802) இறப்புடன் முடிவிற்கு வந்தது.[4] இதன் பின்னர் எகிப்தை ஆண்ட பதிமூன்றாம் வம்ச ஆட்சியினர் கீழ் எகிப்தின் தீபை நகரத்தில் தங்களது தலைநகரத்தை அமைத்துக் கொண்டனர்.

பதிமூன்றாவது வம்சத்தினர் முழு எகிப்தையும் நேரடியாக தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வர இயலவில்லை. நைல் ஆற்றின் வடிநிலப் பகுதியின் கிழக்கில் பண்டைய அண்மை கிழக்கின் செமிடிக் மொழி பேசிய ஆவாரிஸ் எனும் இன மக்கள், எகிப்தின் பதின்மூன்றாம் வம்சத்தினரை வென்று எகிப்தில் பதிநான்காம் வம்சத்தை நிறுவினர்.[4]

ஹைக்சோஸ் இன மக்களின் ஆட்சி[தொகு]

எகிப்தின் பதினைந்தாம் வம்சம்[தொகு]

பண்டைய எகிப்தை கிமு 1650 முதல் 1550 முடிய பதினைந்தாம் வம்ச ஆட்சியாளர்கள் ஆண்டனர்.[5]இப்பதினைந்தாம் வம்சத்தின் ஆட்சியாளர்கள் கீழ்வருமாறு:[5]

 • சாலிடிஸ்
 • சகிர்-ஹர்
 • கியான்
 • அபோபிஸ் - கிமு 1590 – கிமு 1550
 • காமுதி - கிமு 1550–1540

பண்டைய எகிப்தை ஆண்ட வெளிநாட்வர்களான எகிப்தின் பதினைந்தாம் வம்சத்தின் முதல் ஆட்சியாளர் ஹைக்சோஸ் மேல் எகிப்தின் ஆவரீஸ் நகரத்திலிருந்து ஆட்சி செய்தார். இவரால் முழு எகிப்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர இயலவில்லை. இவ்வம்சத்தின் இறுதி மன்னர் காமுதி ஆவார்.[6] (line X.21 of the cited web link clearly provides this summary for the dynasty: "6 kings functioning 100+X years").

தொல்லியல் குறிப்புகளின்படி, இவ்வம்சத்தின் ஆறு பார்வோன்கள் 108 ஆண்டுகள் எகிப்தை ஆண்டனர். இருப்பினும் டேனிஷ் நாட்டின் எகிப்தியவியல் அறிஞர் கிம் ராய்ஹோல்ட்டின் கருத்துப்படி, எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தில் எகிப்தை ஆண்ட பதினைந்தாம் வம்சத்தின் மூன்றாவது பார்வோன் அபேபிஸ் எகிப்தை நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆண்டதாக கருதுகிறார்.[7] [8]

எகிப்தின் பதினாறாவது வம்சம்[தொகு]

எகிப்தின் பதினாறாம் வம்ச பார்வோன்கள் மேல் எகிப்தின் தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு எகிப்தை எழுபது ஆண்டுகள் ஆண்டனர்.[9] for 70 years.[10]

எகிப்தின் பதினாறாம் வம்ச பார்வோன்களின் தலைநகரம் தீபை மற்றும் அல்-உக்சுர் கோயில்

அபிடோஸ் வம்சம்[தொகு]

இரண்டாம் இடைநிலைக் காலத்தில் உள்ளூர் எகிப்திய அபிடோஸ் வம்சத்தினர் மேல் எகிப்தை கிமு 1650 முதல் கிமு 1600 வரை ஐம்பது ஆண்டுகளே ஆண்டனர். [11] மேலும் இவ்வம்சத்தினர் எகிப்தின் பதினைந்தாம் வம்சத்தினருக்கு சமகாலத்தவர் ஆவார். அபிடோஸ் வம்சத்தின் ஆட்சியாளர்கள்: வெப்வவெட்டம்சப், பண்ட்ஜெனி, நாய்ப்,[12]மற்றும் செனெப் காய் ஆவார்.

அபிடோஸ் வம்ச அரச குடும்பத்தினரின் கல்லறைகள் எகிப்தின் மத்தியகால இராச்சிய மன்னர்களின் கல்லறைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தது.[11]

எகிப்தின் பதினேழாம் வம்சம்[தொகு]

வெளிநாட்டு ஹைக்சோஸ் இன மக்களிடம் மேல் எகிப்து வீழ்ந்த போது, உள்ளூர் எகிப்திய அரச குடும்ப உறுப்பினர்கள் தீபை நகரத்தில் தங்கள் தன்னாட்சியை நிலைநாட்டி, பின்னர் மேற்காசிய ஹைக்சோஸ் மக்களை எகிப்திலிருந்து விரட்டியடித்தனர். இந்த எகிப்திய உள்ளூர் அரச குடும்பத்தினரை எகிப்தின் பதினேழாம் வம்சத்தினர் என்று அழைத்தனர்.

பதினேழாம் வம்சத்தினர் மேல் எகிப்து முழுவதும் கோயில்கள் பல எழுப்பியும், அமைதியான வணிக உறவையும் நிலைநிறுத்தினர். இவ்வம்சத்தின் இறுதி இரண்டு பார்வோன்கள் மேற்காசிய ஹைக்சோஸ் இன மக்களை போர்கள் மூலம் எகிப்திலிருந்து விரட்டியடித்தனர். பின்னர் எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் முதல் பார்வோன் முதலாம் அக்மோஸ், ஹைக்சோஸ் மக்களை எகிப்திலிருந்து முழுவதுமாக விரட்டியடித்து, கிமு 1580-இல் மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒன்றிணைத்து புது எகிப்திய இராச்சியத்தை நிறுவினர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Second Intermediate Period of Egypt
 2. Second Intermediate Period
 3. ]https://en.wikipedia.org/wiki/Hyksos Hyksos]
 4. 4.0 4.1 Kim S. B. Ryholt, The Political Situation in Egypt during the Second Intermediate Period, c. 1800–1550 B.C., Museum Tusculanum Press, Carsten Niebuhr Institute Publications 20. 1997, p.185
 5. 5.0 5.1 Shaw, Ian, தொகுப்பாசிரியர் (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. பக். 481. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-815034-2. https://archive.org/details/oxfordhisto00shaw/page/481. 
 6. Turin Kinglist பரணிடப்பட்டது 2006-09-27 at the வந்தவழி இயந்திரம் Accessed July 26, 1006
 7. Kim Ryholt, The Political Situation in Egypt during the Second Intermediate Period c. 1800–1550 B.C." by Museum Tuscalanum Press. 1997. p.125
 8. Kings of the Second Intermediate Period University College London; scroll down to the 15th dynasty
 9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Bourriau2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 10. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Ryholt என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 11. 11.0 11.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; pennmuseum என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 12. Ryholt, K.S.B. (1997). The Political Situation in Egypt During the Second Intermediate Period, c. 1800–1550 B.C.. Museum Tusculanum Press. பக். 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8772894210. 

ஆதார நூற்பட்டியல்[தொகு]

 • Von Beckerath, Jürgen. "Untersuchungen zur politischen Geschichte der zweiten Zwischenzeit in Ägypten," Ägyptologische Forschungen, Heft 23. Glückstadt, 1965.
 • Gardiner, Sir Alan. Egypt of the Pharaohs. Oxford, 1964, 1961.
 • Hayes, William C. "Egypt: From the Death of Ammenemes III to Seqenenre II." Chapter 2, Volume II of The Cambridge Ancient History. Revised Edition, 1965.
 • James, T.G.H. "Egypt: From the Expulsion of the Hyksos to Amenophis I." Chapter 8, Volume II of The Cambridge Ancient History. Revised Edition, 1965.
 • Kitchen, Kenneth A., "Further Notes on New Kingdom Chronology and History," Chronique d'Egypte, 63 (1968), pp. 313–324.
 • Oren, Eliezer D. The Hyksos: New Historical and Archaeological Perspectives Philadelphia, 1997.
 • Ryholt, Kim. The Political Situation in Egypt during the Second Intermediate Period c. 1800–1550 B.C., Museum Tuscalanum Press, 1997. ISBN 87-7289-421-0
 • Van Seters, John. The Hyksos: A New Investigation. New Haven, 1966.
முன்னர்
எகிப்தின் மத்தியகால இராச்சியம்
எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்
கிமு 1650–1580
பின்னர்
புது எகிப்து இராச்சியம்