இரண்டாம் இன்டெப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் இன்டெப்
Inyotef II, Antef II, Si-Rêˁ In-ˁo
இரண்டாம் இன்டெப்பின் ஈமச்சடங்கு சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2112–2063, எகிப்தின் பதினொன்றாம் வம்சம்
முன்னவர்முதலாம் இன்டெப்
பின்னவர்மூன்றாம் இன்டெப்
துணைவி(யர்)நெபெருகாயத்
பிள்ளைகள்மூன்றாம் இன்டெப்
அரசி இலாஹ
தந்தைமுதலாம் மெண்டுகொதேப்
தாய்முதலாம் நெபெரு
இறப்புகிமு 2063 [2]
அடக்கம்எல்-தாரிப், தீபை அருகில்

இரண்டாம் இன்டெப் (Wahankh Intef II (also Inyotef II and Antef II) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட 11-ஆம் வம்சத்தின் மூன்றாம் மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 2112 முதல் கிமு 2063 முடிய 50 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[2] இவரது தலைநகரம் தீபை நகரம் ஆகும். இவரது ஆட்சிக் காலத்தில் எகிப்தில் பல உள்ளூர் வம்சங்களின் குறுநில மன்னர்கள் ஆண்டனர். இவரது கல்லறை பிரமிடு எல்-தாரிப் எனுமிடத்தில் உள்ளது.[3]

பார்வோன் முதலாம் மெண்டுகொதேப்-அரசி முதலாம் நெபெருவிற்குப் பிறந்தவர் இரண்டாம் இன்டெப். இவருக்கு முன்னர் எகிப்தை ஆண்ட முதலாம் இன்டெப் இவரது உடன்பிறந்தவர் ஆவார். இவருக்குப் பின் எகிப்தை ஆண்டது இவரது மகன் மூன்றாம் இன்டெப் ஆவார்.

இரண்டாம் இன்டெப்பின் கல்லறையில் அவர் வளர்த்த நாய்களின் நினைவுச்சின்னம்

கர்னாக் கோயில் தூணில் இரண்டாம் இன்டெப்பின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் எலிபென்டைன் தீவில் இரண்டாம் இன்டெப் எகிப்தியக் கடவுள்களுக்கு கோயில்களை நிறுவினார்.[4]தெற்கு எகிப்தில் இரண்டாம் இன்டெப் அரச குடும்பத்தினர்களுக்கான அரண்மனைகளும், கோயில்களும் கட்டும் வழக்கம், பழைய எகிப்து இராச்சியம் வரையில் தொடர்ந்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Clayton, Peter A. Chronicle of the Pharaohs: The Reign-by-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt. Thames & Hudson. p72. 2006. ISBN 0-500-28628-0
  2. 2.0 2.1 Ian Shaw, The Oxford history of ancient Egypt p.125
  3. Lehner, Mark. The Complete Pyramids. Thames & Hudson. 2008 (reprint). ISBN 978-0-500-28547-3, pp 165
  4. Ian Shaw The Oxford History of Ancient Egypt, p.127

மேலும் படிக்க[தொகு]

முன்னர்
முதலாம் இன்டெப்
பார்வோன்
எகிப்தின் பதினொன்றாம் வம்சம்
பின்னர்
மூன்றாம் இன்டெப்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_இன்டெப்&oldid=3449717" இருந்து மீள்விக்கப்பட்டது