ஏழாம் ராமேசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏழாம் ராமேசஸ்
Rameses VII
மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 1-இல் பார்வோன் ஏழாம் ராமேசேஸ் கல்லறைச் சித்திரங்கள், வரைந்தவர் கார்ல் ரிச்சர்டு லெப்சியஸ்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1136–1129, எகிப்தின் இருபதாம் வம்சம்
முன்னவர்ஆறாம் ராமேசஸ்
பின்னவர்எட்டாம் ராமேசஸ்
பிள்ளைகள்எட்டாம் ராமேசஸ்
தந்தைஆறாம் ராமேசஸ்
தாய்நுப்கேஷ்பெத்
இறப்புகிமு 1129
அடக்கம்KV1

ஏழாம் ராமேசஸ் (Ramesses VII), பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1136 முதல் 1129 முடிய ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆண்ட இருபதாம் வம்சத்தின் ஆறாம் பார்வோன் ஆவார்[1]

பார்வோன் ஆறாம் ராமேசேசின் மகனான ஏழாம் ராமேசேசின் ஆட்சிக் காலம் கிமு 1138 - 1131 முடிய என பிற தொல்லியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.[2][3]

ஏழாம் ராமேசேசின் கல்லறை மற்றும் ஈமச்சடங்குக்கான பொருட்களும் கருவிகள்[தொகு]

ஏழாம் ராமேசேசின் கல்லறையில் அமர்ந்த நிலையில் தேவதைகள்

ஏழாம் ராமேசேஸ் இறந்த பிறகு, அவரது மம்மி மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 1-இல் புதைக்கப்பட்டது. கல்லறையில் அவரது மம்மியை, தொல்லியல் அறிஞர்களால் கண்டெடுக்க முடியவில்லை எனினும், பிற பார்வோன்களின் நான்கு கோப்பைகளில் எகிப்திய பார்வோன்களின் பெயர்கள் பொறித்திருப்பதை கண்டெடுத்தனர். மேலும் கல்லறையில் பிற பார்வோன்களின் சிதிலமடைந்த மம்மிகள் மற்றும் ஈமச்சடங்குகளுக்கான பொருட்களை கண்டெடுத்தனர்.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shaw, Ian, தொகுப்பாசிரியர் (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. பக். 481. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-815034-2. https://archive.org/details/oxfordhisto00shaw/page/481. 
  2. Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Handbook of Ancient Egyptian Chronology (Handbook of Oriental Studies), Brill: 2006, p.493
  3. Raphael Ventura, "More Chronological Evidence from Turin Papyrus Cat.1907+1908," JNES 42, Vol.4 (1983), pp.271-277
  4. Reeves, Nicholas. Wilkinson, Richard H. The Complete Valley of the Kings. p. 167. Thames & Hudson. 1997. (Reprint) ISBN 0-500-05080-5

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ramses VII
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழாம்_ராமேசஸ்&oldid=3448851" இருந்து மீள்விக்கப்பட்டது