இரண்டாம் சாம்திக்
இரண்டாம் சாம்திக் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் சமேதிசூஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 595–589, இருபத்தி ஆறாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | இரண்டாம் நெச்சோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஆப்ரீஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | தகுயித் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | ஆப்ரீஸ், அன்கேனேஸ்நெபரிபிரி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | இரண்டாம் நெச்சோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | முதலாம் கெதேநெயித்திர்பினெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 589 BC |
இரண்டாம் சாம்திக் (Psamtik II) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபத்தி ஆறாம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 595–589 வரை 6 ஆண்டுகள் ஆண்டார்.[1] இவர் இரண்டாம் நெச்சோவின் மகன் ஆவார்.[2]
இரண்டாம் சாம்திக் கிமு 592-இல் நூபியா எனும் தற்கால சூடான் நாட்டின் வடக்கு பகுதியை வென்று, பின்னர் குஷ் இராச்சியத்தை வென்றார்.[3]
நினைவுச் சின்னங்கள்
[தொகு]கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலத்தில், இரண்டாம் சாம்திக் மற்றும் அவரத் மகன் ஆப்ரீஸ் ஆகியோர் எகிப்தியக் கோயில்களை நிறுவினர்.[4]தனது நூபியா மற்றும் குஷ் இராச்சிய வெற்றிகளை நினைவுப்படுத்தும் வகையில், இரண்டாம் சாம்திக் 21.79 மீட்டர் உயரத்தில் இரண்டு கல்தூபிகளை ஹெல்லியோபோலிஸ் நகரக் கோயிலில் நிறுவினார். இவற்றில் ஒரு கல்தூபியை உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் பெயர்த்துக்கொண்டு கிமு 10-இல் உரோமில் நிறுவினார்.[4]மற்றொன்றை கிமு 525-இல் பாரசீக அகாமனிசியர்கள் உடைத்தெறிந்தனர்.
இரண்டாம் சாம்திக், அமூன், மூத் மற்றும் கோன்சு ஆகிய எகிப்தியக் கடவுளர்களுக்கு ஹிப்பிஸ், கார்கா பாலைவனச் சோலையில் கோயில் மற்றும் சிலைகளை எழுப்பினார்.[5]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames and Hudson, 1994. p.195
- ↑ Roberto Gozzoli: Psammetichus II, Reign, Documents and Officials, London 2017, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1906137410, p. 18 (the father-son relation is known from Herodotus and confirmed by an inscription on a statue)
- ↑ The New Encyclopædia Britannica: Micropædia, Vol.9, 15th edition, 2003. p.756
- ↑ 4.0 4.1 Dieter Arnold, Temples of the Last Pharaohs, Oxford University Press, 1999. p.76
- ↑ Arnold, p.77