உள்ளடக்கத்துக்குச் செல்

தாலமி வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலமி வம்சம்
<
p
t
wAl
M
iis
>
நாடுதாலமி பேரரசு
விருதுப்
பெயர்கள்
பார்வோன்
நிறுவிய
ஆண்டு
கிமு 305
நிறுவனர்தாலமி சோத்தர்
இறுதி ஆட்சியர்பதினைந்தாம் தாலமி (எகிப்து),
ஏழாம் கிளியோபாட்ரா (எகிப்து) கிமு 30
இனம்கிரேக்கர்கள்

தாலமி வம்சம் (Ptolemaic dynasty) (ஆட்சிக் காலம்:கிமு 305 - கிமு 30) கிரேக்க மாசிடோனியாவின் பேரரசர் அலெக்சாந்தர் கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற வாரிசுரிமைப் போட்டியின் காரணமாக கிரேக்கப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாந்தரின் உறவினரும், கிரேக்க தலைமைப் படைத்தலைவுருமான தாலமி சோத்தர் பண்டைய எகிப்து மற்றும் கானான் மற்றும் சைப்பிரஸ் உள்ளிட்ட தாலமி பேரரசுக்கு கிமு 305 முதல் பேரரசர் ஆனார்.[1][2][3][4][5] இவரது பெயரால் தாலமி வம்சம் துவங்கியது. கிமு இரண்டாம் பத்தாண்டுகளில் எழுச்சியுற்ற உரோமைப் பேரரசு காலத்தில், தாலமி வம்சத்தவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கானான், சைப்பிரஸ், அசிரியா போன்ற பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள் உரோமைப் பேரரசின் கீழ் சென்றது.

இவ்வம்சத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை ஆண்ட பதினைந்தாம் தாலமி மற்றும் அவரது அன்னை ஏழாம் கிளியோபாட்ராவுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. தாலமி பேரரசின் எகிப்து, உரோமைப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக மாறியது. தாலமி வம்சத்தினர் பண்டைய எகிப்தை கிமு 305 முதல் கிமு 30 முடிய 275 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்தனர்.

பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், பண்டைய எகிப்திய அரசமரபுகள் கடைபிடித்த பண்பாட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டைய எகிப்திய பார்வோன்களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்களை பார்வோன்கள் என அழைத்துக் கொண்டனர். மேலும் தங்களுக்கான கல்லறைப் பிரமிடுகளை மிகச்சிறிய அளவில் கட்டிக் கொண்டனர்.

பண்டைய எகிப்திய அரசமரபுகள் போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரியைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்[6]. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர அரசினின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். எகிப்தை ஆண்ட பெண் அரசிகளில் குறிப்பிடத்தக்கவர் ஏழாம் கிளியோபாட்ரா, ஆட்செப்சுட்டு நெஃபர்டீட்டீ மற்றும் நெபர்தரி ஆவர்.

கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். மேலும் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மூலம் சிசேரியன் எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது குழந்தை மகன் சிசேரியனை அரியனையில் அமர்த்தி, சிசேரியனின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டார்.

பின்னர் உரோமைப் படைத்தலவர் மார்க் ஆண்டனி-ஏழாம் கிளியோபாற்றா காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ் கிமு 30-இல் எகிப்தைக் கைப்பற்றி, எகிப்தை உரோமைப் பேரரசின் ஒரு மாகாணமாகச் செய்தார். இதனால் கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது. தாலமி வம்சத்தினர் தாலமி பேரரசை கிமு 305 முதல் கிமு 30 வரை தொடர்ச்சியாக 275 ஆண்டுகள் ஆண்டனர்.

தாலமி வம்ச ஆட்சியாளர்கள்

[தொகு]
தாலமி வம்சத்தை நிறுவி தாலமி பேரரசை ஆண்ட தாலமி சோத்தர்
ஏழாம் கிளியோபாற்றாவின் சித்திரம், கிபி முதல் நூற்றான்டு[7][8]
  1. தாலமி சோத்தர் -ஆட்சிக் காலம் கிமு 303 – 282
  2. இரண்டாம் தாலமி - கிமு 285 – 246
  3. மூன்றாம் தாலமி - கிமு 246 – 221
  4. நான்காம் தாலமி - கிமு 221 – 203 - (சகோதரி & மனைவி முதலாம் கிளியோபாட்ரா)
  5. ஐந்தாம் தாலமி - கிமு 203 – 181
  6. ஆறாம் தாலமி - கிமு 181–164 மற்றும் 163 – 145 (சகோதரி & மனைவி இரண்டாம் கிளியோபாட்ரா) மகள் கிளியோபாட்ரா தியா (சிரியா ஆளுநரின் ராணி)
  7. எட்டாம் தாலமி - கிமு 170 – 163 மற்றும் 145 – 116)
  8. ஒன்பதாம் தாலமி - கிமு 116 –107 மற்றும் கிமு 88 – 81 (மூன்றாம் பெரெனிஸ் இணையாட்சியர்)
  9. பத்தாம் தாலமி - கிமு 107 – 88 (சகோதரி & மனைவி நான்காம் கிளியோபாட்ரா & மூன்றாம் பெரெனிஸ் இணையாட்சியர்)
  10. பதினொன்றாம் தாலமி - கிமு 80 (இணையாட்சியர் மூன்றாம் பெரெனிஸ்)
  11. பனிரெண்டாம் தாலமி - கிமு 80–58 மற்றும் கிமு 55–51 (சகோதரி மற்றும் மனைவி ஐந்தாம் கிளியோபாட்ரா)
  12. பதிமூன்றாம் தாலமி - கிமு 51 - 47 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
  13. பதிநான்காம் தாலமி - கிமு 47 – 44 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
  14. சிசேரியன் - கிமு 44 – 30 (ஏழாம் கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீசரின் மகன்)

தாலமி வம்ச இராணிகள்

[தொகு]
  1. முதலாம் கிளியோபாட்ரா
  2. இரண்டாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 145 – 116
  3. மூன்றாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 81 – 80
  4. நான்காம் கிளியோபாட்ரா
  5. ஐந்தாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58 – 57 மற்றும் 58 – 55
  6. ஆறாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58
  7. நான்காம் அர்சினோ - காப்பாட்சியாளராக
  8. ஏழாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 51 – 30

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jones, Prudence J. (2006). Cleopatra: A Sourcebook. University of Oklahoma Press. p. 14. They were members of the Ptolemaic dynasty of Macedonians, who ruled Egypt after the death of its conqueror, Alexander the Great.
  2. Pomeroy, Sarah B. (1990). Women in Hellenistic Egypt. Wayne State University Press. p. 16. while Ptolemaic Egypt was a monarchy with a Greek ruling class.
  3. Redford, Donald B., ed. (2000). The Oxford Encyclopedia of Ancient Egypt. Oxford University Press. Cleopatra VII was born to Ptolemy XII Auletes (80–57 BCE, ruled 55–51 BCE) and Cleopatra, both parents being Macedonian Greeks.
  4. Bard, Kathryn A., ed. (1999). Encyclopedia of the Archaeology of Ancient Egypt. Routledge. p. 488. Ptolemaic kings were still crowned at Memphis and the city was popularly regarded as the Egyptian rival to Alexandria, founded by the Macedonians.
  5. Bard, Kathryn A., ed. (1999). Encyclopedia of the Archaeology of Ancient Egypt. Routledge. p. 687. During the Ptolemaic period, when Egypt was governed by rulers of Greek descent...
  6. Move over, Lannisters: No one did incest and murder like the last pharaohs on The A.V. Club
  7. Walker, Susan; Higgs, Peter (2001), "Painting with a portrait of a woman in profile", in Walker, Susan; Higgs, Peter (eds.), Cleopatra of Egypt: from History to Myth, Princeton, N.J.: Princeton University Press (British Museum Press), pp. 314–315, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691088358.
  8. Fletcher, Joann (2008). Cleopatra the Great: The Woman Behind the Legend. New York: Harper. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-058558-7, image plates and captions between pp. 246-247.

மேலும் படிக்க

[தொகு]
  • Susan Stephens, Seeing Double. Intercultural Poetics in Ptolemaic Alexandria (Berkeley, 2002).
  • A. Lampela, Rome and the Ptolemies of Egypt. The development of their political relations 273-80 B.C. (Helsinki, 1998).
  • J. G. Manning, The Last Pharaohs: Egypt Under the Ptolemies, 305-30 BC (Princeton, 2009).

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ptolemaic dynasty
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலமி_வம்சம்&oldid=3679892" இலிருந்து மீள்விக்கப்பட்டது