நெஃபர்டீட்டீ

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

நெஃபரடீட்டீ (Nefertiti, கி.மு 1370 - கி.மு 1330) எகிப்தின் பாரோ அகேநாதெனின் பட்டத்து இராணி (முதன்மை மனைவி)யாக இருந்தவர். அடென் என்ற சூரிய சக்கரத்தை ஒரே கடவுளாக வழிபட்டமையால் இருவரும் சமய புரட்சியாளர்களாக அறியப்பட்டார்கள்.

நெஃபர்டீட்டீயின் மார்பளவு சிலை பெர்லின் அருங்காட்சியகத்திலிருந்து, தற்போது நியுசு அருங்காட்சியில் உள்ளது

நெஃபர்டீட்டீக்கு பல பட்டங்கள் இருந்தன:பரம்பரை இளவரசி,(iryt-p`t), புகழின் உச்சம்(wrt-hzwt), நளினத்தின் நாயகி(nbt-im3t),காதலின் இனிமை(bnrt-mrwt),இருநாடுகளின் நாயகி(nbt-t3wy),அன்புடை முதன்மை மனைவி(hmt-niswt-‘3t meryt.f), பேரரசரின் மனைவி(hmt-niswt-wrt meryt.f), அனைத்துப் பெண்களிலும் சீமாட்டி(hnwt-hmwt-nbwt), மற்றும் கீழ்,மேல் எகிப்துகளின் எசமானி(hnwt-Shm’w-mhw).[1]

பெர்லினின் நியுசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள (வலதுபுறம் காட்டப்பட்டுள்ள) அவளது மார்பளவு சிலையினால் புகழ்பெற்றாள். இச்சிலை தொன்மை எகிப்தின் மிகவும் படியெடுக்கப்பட்ட படைப்புகளில் ஒன்றாகும். அவரது பட்டறையில் கண்டெடுக்கப்பட்டதால், இதனை ஆக்கியதாக துட்மோசு என்ற சிற்பி கருதப்படுகிறார். இச்சிலையின் சிறப்பு தொன்மை எகிப்தில் மனிதமுகத்தின் அளவுகள் குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதே. சில அறிஞர்கள் தனது கணவனின் மறைவிற்குப் பிறகு துட்டன்காமன் பெண் உருவில் நெஃபர்னேஃபெருயேடன் (Neferneferuaten)என்ற பெயரில் பதவியேற்கும் முன்னர் நெஃபர்டீட்டீ ஆண்டதாக நம்புகின்றனர்; இருப்பினும் துட்டன்காமனின் இவ்வுருமாற்றம் மிகுந்து விவாதிக்கப்படும் ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்[edit]

  1. Grajetzki, Ancient Egyptian Queens: A Hieroglyphic Dictionary, Golden House Publications, London, 2005, ISBN 978-0-9547218-9-3
  2. Dodson, Aidan, Amarna Sunset: Nefertiti, Tutankhamun, Ay, Horemheb, and the Egyptian Counter-Reformation. The American University in Cairo Press. 2009, ISBN 978-977-416-304-3

வெளியிணைப்புகள்[edit]