உள்ளடக்கத்துக்குச் செல்

நார்மெர் கற்பலகை

ஆள்கூறுகள்: 30°02′52″N 31°14′00″W / 30.0478°N 31.2333°W / 30.0478; -31.2333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டைய எகிப்திய மன்னர் நார்மெரின் கற்பலகை
நார்மெர் கற்பலகையின் முன் பக்கம் & பின் பக்கம்
செய்பொருள்வண்டல் கல் (siltstone)
அளவு64 செமீ x 42 செமீ
உருவாக்கம்ஏறத்தாழ கிமு 3200 – 3000
கண்டுபிடிப்பு1897–1898
தற்போதைய இடம்எகிப்திய அருங்காட்சியகம், கெய்ரோ
அடையாளம்CG 14716

நார்மெர் தட்டு அல்லது நார்மெரின் கல் தட்டு (Narmer Palette / Palette of Narmer), பண்டைய எகிப்தின் துவக்க கால அரச மரபு காலத்தின் முதல் வம்ச மன்னராக நம்பப்படும் நார்மெர்காலத்து கல்வெட்டு பலகை ஆகும். அழகிய இக்கற்பலகையின் காலம் ஏறத்தாழ கிமு 3200 – கிமு 3000-க்கும் இடைப்பட்டதாகும். 64 செமீ நீளம், 42 செமீ அகலம் கொண்ட இந்த அழகிய வண்டல் கல் தட்டு, எகிப்தின் தொல்லியல் வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை தொல்பொருள் என எகிப்தியவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இக்கற்பலகையின் இருபுறத்தில் எகிப்தியக் கடவுளான பசு தேவதையின் சிற்பம், மன்னர் நார்மெரின் சிற்பம், முதல் வம்சத்தினரின் குலக்குறி சின்னமான தேள் மற்றும் விலங்குகள் சிற்பம் மற்றும் பண்டைய எகிப்திய மொழியை விளக்கும் பட எழுத்து குறிப்புகள் கொண்டது. இக்கற்பலகையை 1897–1898-ஆம ஆண்டுகளில்பண்டைய எகிப்திய நகரமான நெக்கென் நகரத்தில் அகழாய்வின் போது கண்டெடுக்கபட்டது. தற்போது நார்மெர் கற்பலகை எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1][2]

ஏறத்தாழ 5,100 ஆண்டுகள் பழமையான இக்கற்பலகை எகிப்தின் வரலாற்றையும், நாகரிகத்தையும் விளக்கும் தொல்பொருள் ஆகும். தெற்கு எகிப்தையும், வடக்கு எகிப்தையும் ஒன்றிணைத்ததை நினைவு கூறும் வகையில் மன்னர் நார்மெர் இக்கற்பலகை சின்னத்தை நிறுவினார் எனத்தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதனை வலியுறுத்தும் வகையில் இக்கற்பலகையில் தெற்கு எகிப்திய மன்னர்கள் அணிந்த வெள்ளை நிற மகுடமும், வடக்கு எகிப்திய மன்னர்கள் அணிந்த சிவப்பு நிற நீண்ட மகுடமும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கற்பலகையில் பண்டைய எகிப்திய கலைகள், பட எழுத்து முறைகள் குறிக்கும் சின்னங்கள் இடம் பெற்றுள்ளது.[3]நார்மெர் கற்பலகையை, இவ்வுலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வரலாற்று ஆவணம் என எகிப்தியவியல் அறிஞரான பாப் பெரியர் குறிப்பிட்டுள்ளார்.[4]

ஐக்கிய இராச்சியத்தின் தொல்லியல் அறிஞர்களான ஜேம்ஸ் இ. குயுபெல் மற்றும் பிரடெரிக் டபிள்யு. கிரீன் ஆகியோர் 1897–1898-ஆண்டுகளில் நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த எட்ஃபூ கோயில் வளாகத்தை அகழாய்வு செய்த போது நார்மெரின் கற்பலகையை கண்டுபிடித்தனர்.[5]

விளக்கம்

[தொகு]
நார்மெர் என்ற உச்சரிப்பைக் குறிக்கும் கெளிறு மீன் மற்றும் உளியின் பட எழுத்துகள் [6]

வண்டல் கல்லிலால் செய்யப்பட்ட நார்மெர் கற்பலகை 63 செண்டிமீட்டர் (2.07 அடி) உயரம் கொண்ட அழகிய பதக்க வடிவில் அமைந்துள்ளது. இக்கற்பலகையின் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் என இரண்டு பக்கங்களிலும் மன்னர் நார்மெர் உருவத்துடன் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

நார்மெர் கற்பலகையில் துவக்க கால எகிப்திய மொழி பட எழுத்து குறியீடுகள்

மன்னர் நார்மெரின் பெயரைக் குறிக்கும் வகையில், இக்கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதிகளில் கெளிறு மீன் மற்றும் உளி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.[6] மேலும் கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதியில் வரலாற்று காலத்திற்கு முந்தைய எகிப்தியர்கள் வழிபட்ட வளைந்த கொம்புடன் கூடிய பசு தேவதையின் சிற்பம் உள்ளது.[7]

கற்பலகையின் முன்பக்க காட்சி

[தொகு]
நார்மெர் கற்பலகையின் முன்பக்கக் காட்சி

நார்மெர் கற்பலகையின் மேற்புறத்தின் இரண்டு பக்ககளிலும் பண்டைய எகிப்தியக் கடவுளான பசு தேவதையின் வளைந்த கொம்புகளுடன் கூடிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு பசு தேவதைகளின் உருவங்களின் நடுவில் மன்னர் நார்மெரின் பெயரைக் குறிக்கும் வகையில், இக்கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதிகளில் கெளிறு மீன் மற்றும் உளி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கற்பலகையின் நடுவில் தெற்கு எகிப்திய மன்னர்கள் அணியும் நீண்ட வெள்ளை நிற மகுடமும் மற்றும் வலது கையில் ஆயுதம் தாங்கிய மன்னர் நார்மெரின் உருவம் உள்ளது. நார்மெர் மன்னரின் வலதுபுறத்தில் ஒரு மனிதன் இடது கையில் மன்னரின் காலணிகளும், வலது கையில் நீர்க்குடுவையும் தாங்கியவாறும் ஒரு உருவம் உள்ளது. நார்மெர் மன்னரின் இடதுபுறத்தில் மண்டியிட்ட நிலையில் உள்ள ஒரு கைதியை மன்னர் அடிக்கும் நிலையில் ஒரு சிற்பம் உள்ளது. மனிதனின் தலைக்கு மேல் வடக்கு எகிப்தை குறிக்கும் பாபிரஸ் காகித்தால் செய்யப்பட்ட 6 நாணல் மலர்களும், ஓரசு கடவுளைக் குறிக்கும் வல்லூறு பறவையின் உருவமும் உள்ளது. இதில் ஓரசு கடவுள் அம்மனிதனின் தலையை தாக்குவதாக உள்ளது. நார்மெர் மன்னரின் காலுக்கு அடியில் நிர்வாண கோலத்தில் இரண்டு மீசையுடைய மனிதர்கள் ஓடும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஓடும் மனிதர்களின் தலைகளுக்கு மேல் இரண்டு படவெழுத்துகள் காணப்படுகிறது. இது நார்மெர் மன்னர் போரில் வென்ற நகரங்களை குறிக்கிறது.

கற்பலகையின் பின்பக்கக் காட்சி

[தொகு]
நார்மெர் கற்பலகையின் பின்பக்கக் காட்சி

கற்பலகையின் பின்புற பாகத்தின் அடியில் காளை போன்ற உருவத்தின் அடியில் மன்னர் கீழ் எகிப்திய மன்னர்கள் அணியும் சிவப்பு நிற நீண்ட மகுடத்துடன் மன்னர் நார்மெர் கையில் பூனை மற்றும் நெல்லை சூடடிக்கும் கோலுடன் அமர்ந்திருப்பது போன்ற உருவமும் காணப்படுகிறது. [8]

பின்பக்க கற்பலகையின் நடுப்புறத்தில் சண்டையிடும் இரண்டு விலங்குகளின் நீண்ட தலைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டும், அதன் தலைகளை பக்கத்திற்கு ஒருவர் நீண்ட கயிற்றால் பிணைத்துக் கொண்டு இருப்பது போன்ற உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுருவம் கீழ் எகிப்து மற்றும் மேல் எகிப்தை மன்னர் நார்மெர் ஒன்றிணைத்ததை காட்டுகிறது. மேலும் இவ்வுருவம் பண்டைய மெசொப்பொத்தேமியாவின் உரூக் பண்பாடு காலத்திய (கிமு 4100 – 3000) நீண்ட கழுத்துகளால் பின்னப்பட்ட விலங்குகளின் வரிசைக் கல்வெட்டுகளுடன் ஒத்துப்போகிறது.[9]

கற்பலகையின் மேற்புறத்திற்கு அடியில் நீண்ட தலைமுடி உடைய ஒரு மன்னரும், மன்னருக்குப் பின்புறம் இருவரும், முன்புறம் ஐவர் விலங்கு உருவங்கள் கொண்ட பதாகைகளுடன் ஊர்வலமாகச் செல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இக்காட்சியின் வலதுபுறத்தில் 10 நபர்கள், ஐவர் ஐவராக தரையில் பிணமாக கிடக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இது போரில் மன்னர் நார்மெர் அடைந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் உள்ளது. இந்த பிணங்களின் உருவங்களுக்கு மேல் கப்பல், வல்லூறு, குத்தீட்டி போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுருங்கள் மன்னர் நார்மெர் போரில் கைப்பற்றிய ஊர்களின் பெயராக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

கற்பலகையில் மேற்புறத்தில் எகிப்தியக் கடவுளான பசு தேவதை நீண்ட வளைந்த கொம்புகளுடன் உள்ளது. பசு தேவதைகளுக்கு நடுவில் மன்னர் நார்மெரின் முதல் வம்சத்தவர்களைக் குறிக்கும் குலக்குறிச் சின்னமான தேள் உருவம் காணப்படுகிறது.

நீண்ட கழுத்துகளால் பின்னப்பட்ட விலங்குகளின் வரிசை. உரூக் காலத்திய சிற்பம், காலம் கிமு 4100 – 3000

, மெசொப்பொத்தேமியா

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Narmer Palette, ancient Egyptian sculpture
  2. Shaw, Ian. Ancient Egypt: A Very Short Introduction. p.4. Oxford Press, 2004.
  3. Wilkinson, Toby A.H. Early Dynastic Egypt. p.6 Routledge, London. 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-20421-2
  4. Brier, Bob. Daily Life of the Ancient Egyptians, A. Hoyt Hobbs 1999, p.202
  5. The Ancient Egypt Site – The Narmer Paletteபரணிடப்பட்டது 2006-06-15 at the வந்தவழி இயந்திரம் accessed September 19, 2007
  6. 6.0 6.1 Wengrow, David,The Archaeology of Ancient Egypt Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-83586-2 p.207
  7. Wilkinson, Richard H. The Complete Gods and Goddesses of Ancient Egypt, p.172 Thames & Hudson. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05120-8
  8. Janson, Horst Woldemar; Anthony F. Janson History of Art: A Survey of the Major Visual Arts from the Dawn of History to the Present Day Prentice Hall 1986 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-389321-2 p.56
  9. Wilkinson, Toby A.H. Early Dynastic Egypt. p.6, Routledge, London. 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-20421-2.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
  • Brier, Bob. The First Nation in History. History of Ancient Egypt (Audio). The Teaching Company. 2001.
  • Friedman, Renée (2001), "Hierakonpolis", in Redford, Donald B. (ed.), The Oxford Encyclopedia of Ancient Egypt, Oxford: Oxford University Press, pp. 98–100, volume 2 {{citation}}: Invalid |ref=harv (help).
  • Hendrickx, Stan (2017), Narmer Palette Bibliography (PDF), archived from the original (PDF) on 2017-09-23, பார்க்கப்பட்ட நாள் 2020-12-02.
  • Kinnaer, Jacques. "What is Really Known About the Narmer Palette?", KMT: A Modern Journal of Ancient Egypt, Spring 2004.
  • Wilkinson, Toby A. H. Early Dynastic Egypt Routledge, London 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-18633-1.
  • Grimal, Nicolas Christophe A history of Ancient Egypt. Wiley-Blackwell, London 1996, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-19396-0.
  • Kemp, Barry J. (May 7, 2007). Ancient Egypt: Anatomy of a Civilisation. London: Routledge. p. 448. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-23550-2.
  • Davis, Whitney Masking the Blow: The Scene of Representation in Late Prehistoric Egyptian Art. Berkeley, Oxford (Los Angeles) 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-07488-2.

மேலும் படிக்க

[தொகு]
  • Bard, Kathryn A., ed. Encyclopedia of the Archaeology of Ancient Egypt. London: Routledge, 1999.
  • Brewer, Douglas J. Ancient Egypt: Foundations of a Civilization. Harlow, UK: Pearson, 2005.
  • Davis, Whitney. Masking the Blow: The Scene of Representation In Late Prehistoric Egyptian Art. Berkeley: University of California Press, 1992.
  • Lloyd, Alan B., ed. A Companion to Ancient Egypt. Chichester, UK: Wiley-Blackwell, 2014.
  • Málek, Jaromír. In the Shadow of the Pyramids: Egypt during the Old Kingdom. Norman: University of Oklahoma Press, 1986.
  • Redford, Donald B., ed. The Oxford Encyclopedia of Ancient Egypt. 3 vols. New York: Oxford University Press, 2001.
  • Shaw, Ian. Ancient Egypt: A Very Short Introduction. Oxford: Oxford University Press, 2004.
  • Shaw, Ian, and Paul Nicholson. The British Museum Dictionary of Ancient Egypt. Rev. ed. London: British Museum, 2008.
  • Wengrow, David. The Archaeology of Early Egypt: Social Transformation in North-East Africa, 10,000 to 2650 BC. Cambridge, UK: Cambridge University Press, 2006.
  • Wenke, Robert J. The Ancient Egyptian State: The Origins of Egyptian Culture (c 8000–2000 BC). Cambridge, UK: Cambridge University Press, 2009.
  • Wilkinson, Toby. Early Dynastic Egypt. London: Routledge, 2001.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்மெர்_கற்பலகை&oldid=3324531" இலிருந்து மீள்விக்கப்பட்டது