கெர்செக் பண்பாடு
கெர்செக் பண்பாடு / இரண்டாம் நக்காடா காலம் (கிமு 3500—3200) | |
---|---|
[[File: el-அல் கிர்சா el-அல் கிர்சா கெர்செக் பண்பாடு / நக்காடா II | |
காலப்பகுதி | புதிய கற்காலம் |
காலம் | ஏறத்தாழ கிமு 3,650 முதல் கிமு 3,300 முடிய[1] |
முக்கிய களங்கள் | கெர்செக் |
முந்தியது | முதலாம் நக்காடா காலம் |
பிந்தியது | மூன்றாம் நக்காடா காலம் |
கெர்செக் பண்பாடு அல்லது இரண்டாம் நக்காடா காலம் (Gerzeh culture or Naqada II), வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் கிமு 3500 முதல் கிமு 3200 முடிய விளங்கிய புதிய கற்காலத்தியப் பண்பாடு ஆகும்.[2] இதனை இரண்டாம் நக்காடா காலம் என்றும் அழைப்பர். பண்டைய எகிப்தின் நைல் நதியின் கரையில் உள்ள பையூம் அருகில் உள்ள கெர்செக் தொல்லியல் களத்தில் இப்பண்பாட்டுக்குரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதால், இப்பண்பாட்டிற்கு கெர்செக் பண்பாடு எனப்பெயராயிற்று.[3][4]
கெர்செக் பண்பாடு ஒரு பொருள்சார் பண்பாடு என தொல்லியல் அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அமராத்தியப் பண்பாட்டிற்குப் பின்னர் பண்டைய் எகிப்தில் நிலவிய கெர்செக் பண்பாட்டிற்குப் பின்னர், எகிப்தின் துவக்க கால வம்ச காலத்தில் மூன்றாம் நக்காடா பண்பாடு அல்லது செமைனியப் பண்பாடு நிலவியது.
-
மனிதத் தலைக் கொண்ட மரச்சீப்பு
-
பெண்ணின் சிற்பம்
-
தந்தத்தாலான கலைப்பொருட்கள்
-
மட்பாண்டத்தின் மீதான ஓவியங்காள், கிமு 3500-3200
பாபிரஸ் படகுகள்
[தொகு]பாபிரஸ் எனும் நாணல் புற்களால் செய்யப்பட்ட படகுகள், நைல் நதியில் சமயச் சடங்குகளின் பயன்பாட்டிற்கு இப்பண்பாட்டுக் கால மக்கள் பயன்படுத்தினர்.[5]
-
ஓவியங்களுடன் கூடிய மட்பாண்டம், பிற்கால நக்காடா II, கிமு 3500-3300
-
ஓவியங்களுடன் கூடிய மட்பாண்டம், பிற்கால நக்காடா II, கிமு 3500-3300
-
ஓவியங்களுடன் கூடிய மட்பாண்டம், பிற்கால நக்காடா II, கிமு 3500-3300
பண்டைய அண்மை கிழக்குடனான தொடர்புகள்
[தொகு]கெர்செக் பண்பாட்டுக் காலத்தில், கெபல் எல்-அராக் கத்தி போன்ற வெளிநாட்டு கலைப்பொருட்களுடன், அதிக அளவில் திராட்சை (ஒயின்) மது பானம் கொண்ட ஜாடிகளும், வெள்ளி நகைகளும், நவரத்தின மணிகளும், பண்டைய அண்மை கிழக்கிலிருந்து எகிப்தில் இறக்குமதி செய்யப்பட்டது. [8][9] and the silver which appears in this period can only have been obtained from Asia Minor.[10]நவரத்தின மணிகள் நடு ஆசியாவின் படாக்சானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. [11]
உருளை முத்திரைகள்
[தொகு]கெர்செக் பண்பாட்டு காலத்திய உருளை முத்திரைகள், பண்டைய அண்மை கிழக்கில் அமைந்த மெசொப்பொத்தேமியா மற்றும் ஈலாம் பகுதிகளிலிருந்து, எகிப்திற்கு அறிமுகமாகியது.[12] இவ்வகையான உருளை முத்திரைகாள் தெற்கு எகிப்தில் உள்ள நெக்கென் நகரததின் கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.[13][14]மெசொப்பொத்தோமியாவின் கிமு 4,000 ஆண்டின் செம்தேத் நசிர் காலத்திய உருளை முத்திரைகள் போன்ற தொல்பொருட்கள் இரண்டாம் நக்காடா கால்த்திய எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[15][16]
கல்லறைகள்
[தொகு]கிமு 3200 ஆண்டுகளுக்கு முந்தைய இப்பண்பாட்டுக் காலத்திய அழகிய தட்டுக்கள், எலும்பினால் செய்யப்பட்டஎறியுளிகள், [[தந்தம்|தந்தத்தில்] செய்யப்பட்ட பானைகள், கல் பானைகள் மற்றும் பல விண் கற்களால் செய்யப்பட்ட அறுப்பதற்கான அரிவாள்கள் மற்றும் மணிகள் எகிப்தின் கல்லறைகளில் 1911-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது. [18] [19] [20][21]இக்காலத்திய ஒரு தலையில்லாத முண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. [22]
ஓவியம் தீட்டப்பட்ட கல்லறைகள்
[தொகு]இக்காலத்திய கல்லறைகளில் சமயச் சடங்குகள் தொடர்பான பிண ஊர்வலம், படகுகள், விலங்குகள், கால்நடைகள், பணியாளர்கள், தேவதைகளின் ஓவியங்களின் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது.[23][24][25][26]
-
சிங்கங்களுடன் மனிதனின் ஓவியம் -
போர் வீரர்களின் ஓவியம் -
விலங்குகளின் ஓவியம்
எகிப்தின் ஆதி படவெழுத்துகள்
[தொகு]அபிதோஸ் தொல்லியல் களத்தில் கிமு 3400 - 3200 காலத்திய படவெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[8][27] அவற்றில் சில எழுத்துக்கள் சுமேரியாவின் ஆதி ஆப்பெழுத்துக்கள் போன்று இருந்தது.
பிற தொல்பொருட்கள்
[தொகு]-
முட்டை வடிவ செங்கோலின் தலைப்பகுதி, கிமு 3500-3300, இரண்டாம் நக்காடா காலம்
-
இரண்டாம் நக்காடா காலத்திய ஓவியம் தீட்டப்பட்ட லினன் துணி, கிமு 3600
இதனையும் காண்க
[தொகு]- வரலாற்றுக்கு முந்தைய எகிப்து
- பதாரியப் பண்பாடு
- இரண்டாம் நக்காடா காலம்)
- மூன்றாம் நக்காடா காலம்
- பண்டைய எகிப்திய அரசமரபுகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hendrickx, Stan (in en). The relative chronology of the Naqada culture: Problems and possibilities [in: Spencer, A.J. (ed.), Aspects of Early Egypt. London: British Museum Press, 1996: 36-69.]. p. 64. https://www.academia.edu/526195.
- ↑ Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
- ↑ University College London. "Map of the area between Meydum and Tarkhan". Digital Egypt for Universities. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
- ↑ Falling Rain Genomics, Inc. "Geographical information on Jirzah, Egypt". பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
- ↑ "Metmuseum". www.metmuseum.org.
- ↑ 6.0 6.1 "Site officiel du musée du Louvre". cartelfr.louvre.fr.
- ↑ Cooper, Jerrol S. (1996). The Study of the Ancient Near East in the Twenty-first Century: The William Foxwell Albright Centennial Conference (in ஆங்கிலம்). Eisenbrauns. pp. 10–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780931464966.
- ↑ 8.0 8.1 Scarre, Chris; Fagan, Brian M. (2016). Ancient Civilizations (in ஆங்கிலம்). Routledge. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317296089.
- ↑ Shaw, Ian. & Nicholson, Paul, The Dictionary of Ancient Egypt, (London: British Museum Press, 1995), p. 109.
- ↑ Redford, Donald B. Egypt, Canaan, and Israel in Ancient Times. (Princeton: University Press, 1992), p. 16.
- ↑ University College London. "Gerzeh, tomb 80". Digital Egypt for Universities. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
- ↑ Kantor, Helene J. (1952). "Further Evidence for Early Mesopotamian Relations with Egypt". Journal of Near Eastern Studies 11 (4): 239–250. doi:10.1086/371099. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2968. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_1952-10_11_4/page/239.
- ↑ Hartwig, Melinda K. (2014). A Companion to Ancient Egyptian Art (in ஆங்கிலம்). John Wiley & Sons. pp. 424–425. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781444333503.
- ↑ Conference, William Foxwell Albright Centennial (1996). The Study of the Ancient Near East in the Twenty-first Century: The William Foxwell Albright Centennial Conference (in ஆங்கிலம்). Eisenbrauns. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780931464966.
- ↑ Isler, Martin (2001). Sticks, Stones, and Shadows: Building the Egyptian Pyramids (in ஆங்கிலம்). University of Oklahoma Press. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8061-3342-3.
- ↑ Kantor, Helene J. (1952). "Further Evidence for Early Mesopotamian Relations with Egypt". Journal of Near Eastern Studies 11 (4): 239–250. doi:10.1086/371099. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2968. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_1952-10_11_4/page/239.
- ↑ Kantor, Helene J. (1952). "Further Evidence for Early Mesopotamian Relations with Egypt". Journal of Near Eastern Studies 11 (4): 239–250. doi:10.1086/371099. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2968. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_1952-10_11_4/page/239.
- ↑ University College London. "Finds in Gerzeh tomb 67". Digital Egypt for Universities. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
- ↑ Great Pyramid of Giza Research Association. "The use of meteorites by the Ancient Egyptians". பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
- ↑ "metalwork: Early history.". Encyclopædia Britannica Online.
- ↑ Jambon, Albert (2017). "Bronze Age iron: Meteoritic or not? A chemical strategy.". Journal of Archaeological Science (Elsevier BV) 88: 47–53. doi:10.1016/j.jas.2017.09.008. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-4403. https://hal.sorbonne-universite.fr/hal-01614724/file/Jambon_Bronze_Age_iron.pdf.
- ↑ University College London. "Gerzeh, tomb 67". Digital Egypt for Universities. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
- ↑ Shaw, Ian (2019). Ancient Egyptian Warfare: Tactics, Weaponry and Ideology of the Pharaohs (in ஆங்கிலம்). Open Road Media. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5040-6059-2.
- ↑ Kemp, Barry J. (2007). Ancient Egypt: Anatomy of a Civilisation (in ஆங்கிலம்). Routledge. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-56389-0.
- ↑ Bestock, Laurel (2017). Violence and Power in Ancient Egypt: Image and Ideology before the New Kingdom (in ஆங்கிலம்). Routledge. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-85626-8.
- ↑ Hartwig, Melinda K. (2014). A Companion to Ancient Egyptian Art (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 424. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-32509-4.
- ↑ "The seal impressions, from various tombs, date even further back, to 3400 B.C. These dates challenge the commonly held belief that early logographs, pictographic symbols representing a specific place, object, or quantity, first evolved into more complex phonetic symbols in Mesopotamia." Mitchell, Larkin. "Earliest Egyptian Glyphs". Archaeology. Archaeological Institute of America. பார்க்கப்பட்ட நாள் 29 February 2012.
உசாத்துணை
[தொகு]- Petrie/Wainwright/Mackay: The Labyrinth, Gerzeh and Mazghuneh, British School of Archaeology in Egypt XXI. London 1912
- Alice Stevenson: Gerzeh, a cemetery shortly before History (Egyptian sites series),London 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9550256-5-6
வெளி இணைப்புகள்
[தொகு]- Gerzeh (Girza). University College London, 2000
- Egypt, ancient. Encyclopædia Britannica, 2005
- Gerzeh Tomb 20
- Gerzeh Tomb 105
- Gerzeh Tomb 205