உள்ளடக்கத்துக்குச் செல்

மெரிம்தி பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெரிம்தி பண்பாடு
கிமு 4000-ஆண்டின் துவக்க காலத்திய மெரிம்தி பண்பாட்டின் களிமண் சிலையின் தலை
மெரிம்தி பண்பாடு is located in Egypt
மெரிம்தி பெனி சலாமா
மெரிம்தி பெனி சலாமா
புவியியல் பகுதிஎகிப்து
காலப்பகுதிபுதிய கற்காலம்
காலம்கிமு 4,800 — 4,300
இயல்புகள்சமகாலப் பண்பாடுகள்: தஸ்சியப் பண்பாடு மற்றும் பதாரியப் பண்பாடு
முந்தியதுபையூம் பண்பாடு
பிந்தியதுஅமராத்தியப் பண்பாடு

மெரிம்தியப் பண்பாடு (Merimde culture orMerimde Beni-Salame or Benisalam) புதிய கற்காலத்தின் போது வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் கீழ் எகிப்தில் உள்ள நைல் வடிநிலப் பகுதியில் கிமு 4,800 முதல் கிமு 4,300 முடிய 500 ஆண்டுகள் விளங்கிய பண்பாட்டுக் காலம் ஆகும்.[1] இப்பண்பாட்டிற்கு முன்னர் பையூம் (அ) பண்பாடு செழித்து விளங்கியது. இதன் சமகாலத்தில் மேல் எகிப்தில் பதாரியப் பண்பாடு மற்றும் தஸ்சியப் பண்பாடுகள் விளங்கியது. இப்பண்பாட்டுக் காலத்திற்குப் பின்னர் பண்டைய எகிப்தில் அமராத்தியப் பண்பாடு தொடங்கியது.

எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு வடமேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் நைல் வடிநிலத்தில் அமைந்த மெரிம்தி பெனி சலாமா எனும் தொல்லியல் களத்தின் பெயரால் இப்பண்பாட்டிற்கு பெயராயிற்று. மெரிம்தி பெனி சலாமா தொல்லியல் களத்தை ஜெர்மானிய தொல்லியல் அறிஞர் ஹெர்மென் ஜங்கர் என்பவர் 1928-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்தார்.[2][3]

தொல்பொருட்கள்

[தொகு]

வடக்கு எகிப்தில் உள்ள நைல் வடிநிலத்தின் மேற்கு விளிம்பில் உள்ள ஒரு பெரிய குடியேற்ற தளத்தில் மெரிம்தி பண்பாடு செழித்து விளங்கியது. இந்த பண்பாடு காலத்தில் பையூம் (அ) பண்பாடு மற்றும் அண்மைக் கிழக்கின் லெவண்ட் ஆகியவற்றுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டிருந்தது. மக்கள் சிறிய குடிசைகளில் வாழ்ந்தனர். எளிமையான அலங்காரமற்ற மட்பாண்டங்களை தயாரித்தனர்[4] மற்றும் கற் கருவிகளை வைத்திருந்தனர். கால்நடைகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் வளர்க்கப்பட்டது. கோதுமை, சோளம், பார்லி பயிரிடப்பட்டது. மெரிம்தி பண்பாட்டுக் கால மக்கள், இறந்தவர்களை வாழும் பகுதிகளில் புதைத்து, அதன் மீது களிமண் சிலைகளை அமைத்தனர். களிமண்ணால் செய்யப்பட்ட மனிதத் தலைச் சிற்பம் மெரிம்தி பெனி சலாமா தொல்லியல் களத்தில் முதன்முதலாக கண்டெடுக்கப்பட்டது.

பொருளாதாரம்

[தொகு]
கதிர்களை அறுக்கும் கல் அரிவாள், காலம் கிமு 4500-4000, மெரிம்தி பெனி சலாமா தொல்லியல் களம், மேற்கு நைல் வடிநிலம்[5]

மெரிம்தி பெனி சலாமா தொல்லியல் களத்தில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் இப்பண்பாட்டுக் காலத்தில் மீன் பிடித்தலை விட வேளாண்மைத் தொழில் சிறப்பாக இருந்தது. மக்களின் குடியிருப்புகள் நாணல் புற்களால் ஆன வட்ட வடிவ சிறிய குடிசைகளில் இருந்தது.[6]

கல்லறைகள்

[தொகு]

குடியிருப்பு பகுதிகளில் வட்ட வடிவ குழிகளில் இறந்தவர்களை, எவ்வித படையல் இன்றி புதைத்தனர்.[7]மெரிம்தி தொல்லியல் களத்தில் கிடைத்த எலும்புகள் ஏறத்தாழ தஸ்சியப் பண்பாட்டு காலத்திய மக்களை போன்றே இருந்தது.[8][9]

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bogucki, Peter I. (1999). The origins of human society. Wiley-Blackwell. pp. 355. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57718-112-3.
  2. Hoffman, Michael A. (1980). Egypt before the pharaohs. Taylor & Francis. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7100-0495-8.
  3. Joanne M. Rowland (2021), New Perspectives and Methods Applied to the ‘Known’ Settlement of Merimde Beni Salama, Western Nile Delta. in Joanne M. Rowland, Giulio Lucarini (eds.), Geoffrey J. Tassie | Revolutions. The Neolithisation of the Mediterranean Basin: the Transition to Food Producing Economies in North Africa, Southern Europe and the Levant | Berlin Studies of the Ancient World
  4. Shaw, Thurstan (1995). The Archaeology of Africa: Food, Metals and Towns. Routledge. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-11585-X.
  5. "Metropolitan Museum of Art". www.metmuseum.org.
  6. Brewer, Douglas J.; Emily Teeter (2007). Egypt and the Egyptians. Cambridge University Press. pp. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-85150-3.
  7. Hoffman - pp. 174.
  8. Forde-Johnston, James L. (1959). Neolithic cultures of North Africa: aspects of one phase in the development of the African stone age cultures. University of California. p. 58. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
  9. Journal of the Anthropological Institute of Great Britain and Ireland, Volume 65. Anthropological Institute of Great Britain and Ireland. 1935. p. 27. பார்க்கப்பட்ட நாள் 17 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரிம்தி_பண்பாடு&oldid=3581919" இலிருந்து மீள்விக்கப்பட்டது