உள்ளடக்கத்துக்குச் செல்

கெபல் எல்-அராக் கத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெபல் எல்-அராக் கத்தி
கெபல் எல்-அராக்கின் கத்தி (பின்புறம் & முன்புறம்), லூவர் அருங்காட்சியகம்
செய்பொருள்யானையின் தந்தம் மற்றும் விண்கல்
அளவு25.5 சென்டிமீட்டர்கள் (10.0 அங்)
உருவாக்கம்வரலாற்றுக்கு முந்தைய எகிப்து#ஜெர்சியப் பண்பாடு#நக்காடா II, கிமு 3450[1]
கண்டுபிடிப்புகெய்ரோவின் தொல்பொருட்கள் விற்கும் வணிகர் எம். நக்மானிடமிருந்து பிப்ரவரி 1914-ஆம் ஆண்டில் ஜார்ஜ் ஆரோன் பெனிடைட் விலை கொடுத்து வாங்கினார்.
தற்போதைய இடம்லூவர் அருங்காட்சியகம், சுல்லி தொகுதி, அறை எண் 20
அடையாளம்E 11517[2]

கெபல் எல்-அராக் கத்தி (Gebel el-Arak Knife or Jebel el-Arak Knife), வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் (கிமு 3500—3200) ,நக்காடா II காலத்தில் ஜெர்சியப் பண்பாட்டு (கிமு 3450) காலத்திய தொல்பொருள் ஆகும். இக்கத்தியின் கைப்பிடி யானையின் தந்ததாலும், கத்தி விண்கல்லாலும் செய்யப்பட்ட இத்தொல்பொருள், பண்டைய அண்மை கிழக்கின் உரூக் காலத்திய கீழ் மெசொப்பொத்தேமியாவின் பண்பாட்டுத் தாக்கங்கள் அதிகம் கொண்டுள்ளது. இக்கத்தி எகிப்தின் நெக்கென் நகரத்தில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

கெபல் எல்-அராக் கத்தியின் மொத்த எடை 92.3 கிராம் மட்டுமே. தந்தத்திலான இக்கத்தியின் கைப்பிடியின் முன்புறத்திலும், பின்புறத்திலும் மெசொப்பொத்தேமியா மன்னர் இரு சிங்கங்களை கைகளால் பற்றி நிற்பது போன்ற காட்சியும், போர்க்களத்தில் போர் வீரர்கள் போரிடும் காட்சியும் மற்றும் விலங்குகளில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

இக்கத்தியை கெய்ரோவில் தொல்பொருட்கள் விற்கும் வணிகர் எம். நக்மானிடமிருந்து பிப்ரவரி 1914-ஆம் ஆண்டில் எகிப்தியவியல் அறிஞர் ஜார்ஜ் ஆரோன் பெனிடைட் என்பவர், பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசு நகரத்தில் உள்ள லூவர் அருங்காட்சியகத்திற்காக விலை கொடுத்து வாங்கினார். தற்போது இக்கத்தி லூவர் அருங்காட்சியகத்தின், சுல்லி தொகுதியில், அறை எண் 20-இல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இக்கத்தி பண்டைய எகிப்தின் கெபல் எல்-அராக் தொல்லியல் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக விற்பனையாளரால் கூறப்பட்டது. ஆனால் இன்று இக்கத்தி எகிப்தின் பண்டைய எகிப்தின் நெக்கென் நகரத்திலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது.

கத்தியின கொள்முதல் மற்றும் தோற்றம்

[தொகு]
கெபல் எல்-அராக்கின் கத்தியின் தந்தத்திலான கைப்பிடியில் மெசொப்பொத்தேமியா மன்னர் இரு சிங்கங்களை கைகளால் பற்றி நிற்கும் காட்சி
கெபல் எல்-அராக்கின் கத்தியின் தந்தத்திலான கைப்பிடி (பின்புறம்), வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் தொல்பொருட்கள், லூவர் அருங்காட்சியகம்
கத்தியின் கைப்பிடி மேற்புறத்தில் மெசொப்பொத்தேமியா மன்னர் இரு சிங்கங்களை கைகளால் பற்றி நிற்கும் காட்சி, காலம் கிமு 3300 - கிமு 3200, அபிதோஸ், இக்கைப்பிடியின் உருவப் பொறிப்புகளால் பண்டைய எகிப்தில், மெசொப்பொத்தேமியாவின் உரூக் பண்பாட்டுத் தாக்கங்களை அறியமுடிகிறது. [2][3][4]
வலது புறத்தில் மெசொப்பொத்தேமியாவின் உரூக் பண்பாட்டு காலத்திய பூசாரி மன்னர் தலையில் தொப்பியும், பெரிய தாடியும், காலம் கிமு 3300. லூவர் அருங்காட்சியகம்[5]

கெபல் எல்-அராக் கத்தியை விற்பனை செய்தவர் அதன் கைப்பிடியும், கத்தியும் தனித்தனியாக பிரித்து விட்டார். மேலும் அவை ஒன்றாகப் பொருந்தியிருப்பதை விற்பனையாளர் உணரவில்லை. இக்கத்தியின் பழமையை உணர்ந்த் எகிப்தியவியல் அறிஞர் ஜார்ஜ் ஆரோன் பெனிடைட் என்பவர், பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசு நகரத்தில் உள்ள லூவர் அருங்காட்சியகத்திற்காக 16 மார்ச் 1914 அன்று கெய்ரோவின் தொல்பொருட்கள் விற்கும் வணிகர் எம். நக்மானிடமிருந்து விலை கொடுத்து வாங்கினார்.[1] [6] பின்னர் லியோன் ஆண்ட்ரே என்பவரால், மார்ச் 1933-ஆம் ஆண்டில் இக்கத்தி மற்றும் கைப்பிடி பகுதிகள் ஒன்றாக மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டது. 1977-ஆம் ஆண்டில் இக்கத்தியின் மறுசீரமைப்புப் பணிகள் அக்னெஸ் காசியோ மற்றும் சூலியட் லெவி என்பவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

ஆதாரம்

[தொகு]

ஜார்ஜ் ஆரோன் பெனிடைட் இக்கத்தியை கெய்ரோவில் உள்ள தொல்பொருட்கள் விற்பனையாளர் நாக் ஹம்மதியிடமிருந்து வாங்கும் போது, கத்தியின் கைப்பிடி, பண்டைய அபிதோஸ் நகரத்திற்குதெற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாக் ஹம்மாதி (Nag Hammadi) கிராமத்திற்கு அருகே இருந்த கெபல் எல்-அராக் பீடபூமியில் கண்டுபிடித்ததாக கூறினார்.

விளக்கம்

[தொகு]

கத்தி

[தொகு]

கெபல் எல்-அராக் கத்திப் பகுதியானது விண்வீழ்கல்லை இருபுறமும் மெருகூட்டி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில் விண்கற்களால் பல சிற்பங்கள் மற்றும் கருவிகள் செய்யப்பட்டுள்ளது.

கெபல் எல்-அராக் கத்தியின் மொத்த எடை 92.3 கிராம் மட்டுமே. அதன் அளவுகள் பின்வருமாறு:

மொத்த நீளம்: 18.8 சென்டிமீட்டர்கள் (7.4 அங்)
நடுவிலிருந்து அகலம்: 5.7 சென்டிமீட்டர்கள் (2.2 அங்)
நடுவிலிருந்து தடிமன்: 0.6 சென்டிமீட்டர்கள் (0.24 அங்)
கைப்பிடியின் உள்ளிருந்து நீளம்: 2.8 சென்டிமீட்டர்கள் (1.1 அங்)
கைப்பிடியின் உள்ளிருந்து அகலம்: 3.7 சென்டிமீட்டர்கள் (1.5 அங்)

கைப்பிடி

[தொகு]

கெபல் எல்-அராக் கத்தியின் கைப்பிடி யானையின் தந்தத்தால் செய்யப்பட்டுள்ளது. தந்த கைப்பிடியில் முன்புறம் மற்றும் பின்புறப் பகுதிகளில் மன்னர் இரு கைகளால் இரண்டு சிங்ககளை பிடித்து நிற்கும் காட்சி, போர்க்களத்தில் வீரர்கள் போரிடும் காட்சி மற்றும் விலங்குகளின் உருவங்களும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது.

கைப்பிடியின் நேர்த்தியான அளவுகள் பின்வருமாறு:

மொத்த நீளம்: 9.5 சென்டிமீட்டர்கள் (3.7 அங்)
அகலம்: 4.2 சென்டிமீட்டர்கள் (1.7 அங்)
தடுமன்: 1.2 சென்டிமீட்டர்கள் (0.47 அங்)
குமிழின் நீளம் : 2.0 சென்டிமீட்டர்கள் (0.79 அங்)
குமிழின் அகலம்: 1.3 சென்டிமீட்டர்கள் (0.51 அங்)
குமிழின் தடுமன்: 1.0 சென்டிமீட்டர் (0.39 அங்)

படக்காட்சிகள்

[தொகு]
கத்தியின் கைப்பிடி, பெருநகர கலை அருங்காட்சியகம்
கைப்பிடி
கைப்பிடியில் வரைகலைகள்

|- | style="background:#DEB887; font-size: 100%; width: 1%; text-align: center"|யானையின் தந்தத்திலான கைப்பிடி
போர்க்கள காட்சிகள் |

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Delange, Élisabeth (2009). Le poignard égyptien dit "du Gebel el-Arak". Collection SOLO. Paris: Musée du Louvre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782757202524.
  2. 2.0 2.1 "Site officiel du musée du Louvre". cartelfr.louvre.fr.
  3. Cooper, Jerrol S. (1996). The Study of the Ancient Near East in the Twenty-first Century: The William Foxwell Albright Centennial Conference (in ஆங்கிலம்). Eisenbrauns. pp. 10–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780931464966.
  4. Hartwig, Melinda K. (2014). A Companion to Ancient Egyptian Art (in ஆங்கிலம்). John Wiley & Sons. pp. 424–425. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781444333503.
  5. "Site officiel du musée du Louvre". cartelfr.louvre.fr.
  6. G. Bénédite: Le couteau de Gebel el-'Arak, Étude sur un nouvelle objet préhistorique acquis par le musée du Louvre, Fondation Eugène Piot, Monuments et mémoires, XXII, 1916. 1–34
  7. Kamil, Jill (1996). Ancient Egyptians: Life in the Pyramid Age (in ஆங்கிலம்). American Univ in Cairo Press. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-977-424-392-9.
  8. 8.0 8.1 Hartwig, Melinda K. (2014). A Companion to Ancient Egyptian Art (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 424. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-32509-4.
  9. 9.0 9.1 "Knife of the Jebel el-Arak, ...showing an iconography influenced by Mesopotamia, featuring a king mastering two lions, and a lion attacking a horned animal from behind" in Beaujard, Philippe (2019). The Worlds of the Indian Ocean: A Global History (in ஆங்கிலம்). Cambridge University Press. p. xv-xvi, Illustration II b). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-108-42456-1.
  10. Treasures of the Louvre: From the fourth millennium B.C. to the dawn of the Renaissance (in ஆங்கிலம்). Putnam. 1966. p. 15.
  11. Darnell, John Coleman. "Late Predynastic/Early Dynastic Rock Art Scenes of Barbary Sheep Hunting in Egypt's Western Desert. From Capturing Wild Animals to the Women of the "Acacia House"" (in en). S. Hendrickx, H. Riemer, and F. Förster, Co-Authors, in H. Riemer, F. Förster, M. Herb, and N. Pöllath, Eds., Desert Animals in the Eastern Sahara: Status, Economic Significance and Cultural Reflection in Antiquity. Colloquium Africanum 4 (Cologne: Heinrich-Barth-Institut), Pp. 189-244: 208. https://www.academia.edu/19066462. 
  12. 12.0 12.1 King, Leonard William (1918). Legends of Babylon and Egypt in Relation to Hebrew Tradition. Oxford University Press. pp. 14–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783748182030.
  13. Josephson, Jack (in en). Naqada IId, Birth of an Empire. p. 166. https://www.academia.edu/19179915. 
  14. William Foxwell Albright Centennial Conference (1996). The Study of the Ancient Near East in the Twenty-first Century: The William Foxwell Albright Centennial Conference (in ஆங்கிலம்). Eisenbrauns. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-931464-96-6.
  15. 15.0 15.1 15.2 Shaw, Ian (2019). Ancient Egyptian Warfare: Tactics, Weaponry and Ideology of the Pharaohs (in ஆங்கிலம்). Open Road Media. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5040-6059-2.
  16. For an image of a similar high-prowed boat: Porada, Edith (1993). "Why Cylinder Seals? Engraved Cylindrical Seal Stones of the Ancient Near East, Fourth to First Millennium B.C.". The Art Bulletin 75 (4): 566, image 8. doi:10.2307/3045984. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-3079. 

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gebel el Arak Knife
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெபல்_எல்-அராக்_கத்தி&oldid=3759277" இலிருந்து மீள்விக்கப்பட்டது