நக்காடா பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நக்காடா பண்பாடு
[[File:
Location of Naqada
|264px|alt=]]
Geographical rangeஎகிப்து
காலப்பகுதிசெப்புக் காலம்
காலம்ஏறத்தாழ கிமு 4,400 – 3,000
Type siteநக்காடா தொல்லியல் களம்
முந்தியதுபதாரியப் பண்பாடு
பிந்தியதுஎகிப்தின் துவக்க கால அரச மரபுகள்
பறவையின் கூறுகளுடன் கூடிய பெண் உருவம், இரண்டாம் நக்காடா காலம், கிம 3500 - 3400

ஆள்கூறுகள்: 25°57′00″N 32°44′00″E / 25.95000°N 32.73333°E / 25.95000; 32.73333 நக்காடா பண்பாடு (Naqada culture) வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பண்டைய எகிப்தின் வெண்கலக் காலத்தில் ஏறத்தாழ கிமு 4400 முதல் கிமு 3000 முடிய இத்தொல்லியல் பண்பாடு விளங்கியது. தெற்கு எகிப்தில் அமைந்த நக்காடா எனும் பண்டைய நகரத்தின் பெயரால் இப்பண்பாட்டின் பெயர் அமைந்தது. 2013- ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கரிம கதிரியக்க ஆய்வில், நக்காடா பண்பாடு கிமு 3,800-3,700 காலத்தியது என முடிவு செய்துள்ளனர். [1]

நக்காடா பண்பாட்டின் இறுதியில், துவக்க வெண்கலக் காலத்தில் விளங்கிய மூன்றாவது நக்காடா பண்பாட்டுக் காலத்தின் போது, துவக்க கால எகிப்திய அரசமரபினர் கிமு 3,150 கிமு முதல் கிமு 2,686 முடிய தெற்கு எகிப்தையும், வடக்கு எகிப்தையும் ஒன்றிணைத்து ஆண்டனர்.

நக்காடா பண்பாட்டின் காலவரிசை[தொகு]

பிரித்தானிய எகிப்தியவியல் தொல்லியல் அறிஞர் வில்லியம் பிளின்டர்ஸ் பேட்ரி, நக்காடா பண்பாட்டுக் கால வரிசையை மூன்று காலமாக வகைப்படுத்தியுள்ளார்.

  • நக்காடா I: அம்ராதியக் காலம் (எல்-அம்ரா கல்லறை)
  • நக்காடா II: ஜெர்சியக் காலம் (ஜெர்செக் கல்லறை)
  • நக்காடா III: செமைனியக் காலம் (எஸ்-செமைனா கல்லறை)

படக்காட்சிகள்[தொகு]

அகழாய்வுகளும், நினைவுச் சினனங்களும்[தொகு]

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலத்தின் நக்காடா பண்பாடு I காலத்திய எகிப்தியர்கள், தெற்கு எகிப்தின் நூபியா மற்றும் மேற்கு எகிப்தின் பாலைவனச் சோலைப் பிரதேசங்கள் மற்றும் மத்திய தரைக் கடலின் கிழக்கு கரையில் உள்ள மெசொப்பொத்தேமியாவில் வாழும் மக்களிடையே வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். [2]கூரான கற்கருவிகளை செய்வதற்கு தேவையான, எரிமலைக் கரும்பளிங்குப் பாறைகளை எத்தியோப்பியாவிலிருந்து வாங்கி வந்தனர்.[3] நெக்கென் நினைவுச் சின்னக் கட்டிடத்தின் அகழாய்வில் கரித்துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கரித்துண்டுகள் லெபனான் நாட்டின் தேவதாரு மரத்தின் கரித்துண்டுகள் போன்று இருந்தது.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.newscientist.com/article/dn24145-carbon-dating-shows-ancient-egypts-rapid-expansion/
  2. Shaw, Ian (2002). The Oxford History of Ancient Egypt. Oxford, England: Oxford University Press. பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-500-05074-0. https://archive.org/details/chronicleofphara00clay/page/61. 
  3. Barbara G. Aston, James A. Harrell, Ian Shaw (2000). Paul T. Nicholson and Ian Shaw editors. "Stone," in Ancient Egyptian Materials and Technology, Cambridge, 5-77, pp. 46-47. Also note: Barbara G. Aston (1994). "Ancient Egyptian Stone Vessels", Studien zur Archäologie und Geschichte Altägyptens 5, Heidelberg, pp. 23-26. See on-line posts: [3] and [4].
  4. Parsons, Marie. "Egypt: Hierakonpolis, A Feature Tour Egypt Story". www.touregypt.net. பார்த்த நாள் 2008-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நக்காடா_பண்பாடு&oldid=2993408" இருந்து மீள்விக்கப்பட்டது